search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuruvai cultivate"

    குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக குறுகிய கால ரக விதைகளும், ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டிற்கான குறுவை சாகுபடி தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தித் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    தமிழ்நாட்டில் விவசாய வேளாண் பெருங்குடி மக்கள் நடப்பாண்டில் குறுவை சாகுபடி மேற்கொள்ள தயாரான நிலையில் நாமெல்லாம் எதிர்பாராத வகையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்து, காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வரக்கூடிய நிலையில் மேட்டூர் அணை நிரம்பி வருவதால் முதலமைச்சர் குறுவை விவசாய பணிகளுக்காக மே மாதம் 24 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். 

    அந்த அறிவிப்பை தொடர்ந்து வேளாண் பெருங்குடி மக்கள் அந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி குறுவை விவசாயத்தில் நெல் மற்றும் பிற பயிர்களை பயிரிட ஆயத்தமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

     46 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற ஆண்டு 4.9 இலட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வரலாற்று சாதனை அடையப்பெற்றது. 

    அதைப்போலவே இந்த ஆண்டும் முதலமைச்சர்  மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவித்து அதிக அளவில் பயிர் சாகுபடி செய்திட வேளாண் பெருங்குடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

    முதலமைச்சர் அறிவுரைப்படி குறுவை சாகுபடிக்கான ஆயத்தநிலை தொடர்பாக துறை அலுவலர்களுடலான சிறப்பு ஆய்வு கூட்டம் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது.

    இதில் பேசிய அமைச்சர், டெல்டா மாவட்டங்களில் நெல் நடவுப்பணி மேற்கொள்ள ஏதுவாக நல் முளைப்புத் திறன் உள்ள நெல் விதைகளை இருப்பு வைக்க வேண்டும் என்றும், விதை ஆய்வு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வாரப்படும் வாய்க்கால் பணிகளை துரிதப்படுத்தி கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதை உறுதிபடுத்திட வேண்டும். 

    குறுவை சாகுபடிக்கு தேவையான வேளாண் இயந்திரங்களான டிராக்டர், பவர் டில்லர், நிலச்சமன்படுத்தும் கருவி மற்றும் நடவு இயந்திரங்களைவிவசாயிகள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் வைத்திருந்து தட்டுப்பாடின்றி வாடகைக்கு அளிப்பதுடன் பிற மாவட்டங்களிலிருந்தும் வரைவழைத்து வழங்கிட வேண்டும்.

    வட்டார அலுவலர்கள் விவசாயிகளை சந்தித்து மண்ணாய்வு அடிப்படையில் உரமிடுதலை ஊக்குவிக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்

    மேலும், உழவர் சந்தைகளை சுற்றி உள்ள கிராமங்களில் காய்கறி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மதிக்கப் படுகிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    அனைத்து அலுவலர்களும் இணைந்து குறுவைப் பருவத்திற்கான விதைகள், உரங்கள் மற்றும் கால்வாய் தூர்வாருதல் போன்ற பணிகள் செவ்வனே செய்து உணவு தானிய உற்பத்திக்கு பாடுபட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

    இந்த கூட்டத்தில்குறுவை பருவத்திற்கு தேவையான யூரியா, டிஏபி போன்ற உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் போதிய அளவு இருப்பு வைத்து அவற்றின் விற்பனையையும் தொடர்ந்து
    கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×