search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshmi Narasimmar Temple"

    • கோவிலுக்கு நேர் எதிரே மகாலட்சுமியின் வடிவமான வில்வ மரம் உள்ளது.
    • அப்போது லட்சுமி நரசிம்மர் சுயம்பாக இங்கு எழுந்தருளியது பிரசன்னத்தில் தெரிய வந்தது.

    கடன் தொல்லை போக்கும் லட்சுமி நரசிம்மர்

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.

    மிகப்பழமையான இந்த கோவில் கால மாற்றத்தால் அழிந்து விட்டது.

    5 வருடத்துக்கு முன்பு ராஜ அரசு என போற்றப்படுகின்ற அரச மரத்தடியில் புற்றுக்கண்ணில் சுயம்புவாக தோன்றினார் லட்சுமி நரசிம்மர்.

    கோவிலுக்கு நேர் எதிரே மகாலட்சுமியின் வடிவமான வில்வ மரம் உள்ளது.

    இந்த வில்வ மரத்தின் நடுவில் உள்ள இடைவெளியில் நரசிம்மர் சுயம்பு வடிவமாக காட்சி தருகிறார்.

    இங்கு பக்தர்கள் முன்னிலையில் தெய்வ பிரசன்னம் பார்க்கப்பட்டது.

    அப்போது லட்சுமி நரசிம்மர் சுயம்பாக இங்கு எழுந்தருளியது பிரசன்னத்தில் தெரிய வந்தது.

    லட்சுமி நரசிம்மரின் மகிமையால் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    திருமணம் தடைபட்டவர்கள் நெய் தீபம் ஏற்றி அரச மரத்தில் மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிற்றை கட்டி 12 நாள், 12 முறை (பிரதட்சனம்) வலம் வந்துபக்தியோடு பூஜை செய்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அரச மரத்தில் தொட்டில் கட்டி 12 நாள் 12 முறை வலம் வந்து நெய் தீபம் ஏற்றினால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் கூறுகிறார்கள்.

    பக்தர்கள் இங்கு தொழில் அபிவிருத்தி, கல்வியில் வெற்றி பெற நோய்களில் இருந்து விடுபட கடன் தொல்லை நீங்க தொடர்ந்து ஹோமங்களும், பூஜைகளும் நடந்து வருகிறது.

    ×