என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Latcharchanai"
- ஓதுவார்கள் ஒரு லட்சம் முறை அம்மன் திருநாமத்தை கூறினர்.
- குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி 25-ந் தி நடக்கிறது.
மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை நாட்கள், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த கோவிலுக்கு கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தன்று ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த வருடத்திற்கான 30-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது. குண்டம் திருவிழாவினை முன்னிட்டு நேற்று கோவில் வளாகத்தில் தமிழ்முறைப்படி லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம் நடைபெற்றது.
இதனை கோவில் அறங்காவலர் வசந்தா சம்பத், தாரணி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். லட்சார்ச்சனை நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வனபத்ரகாளியம்மனுக்கு பல வண்ண மலர்களால் தமிழ் முறையில் ஓதுவார்கள் ஒரு லட்சம் முறை அம்மன் திருநாமத்தை வணங்கினர். அன்னைத்தமிழ் லட்சார்ச்சனையை முலத்துறை சக்திவேல், குழந்தைவேல் ஆகியோர் நடத்தி வைத்தனர்.
உபயதாரர்கள் பாக்கியலட்சுமி குடும்பத்தார்கள், கர்த்திக், கனகாச்சலம், நந்தினி, ஜெகதா, பிரபு, பூர்ணிமா உள்ளிட்டோர் லட்சார்ச்சனைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் கோவில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தினமும் 4 ஆயிரம் அர்ச்சனைகள் நடக்கிறது.
- 25 நாட்களில் 1 லட்சம் அர்ச்சனைகள் கோவிலில் நடைபெறுகிறது.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடிமாத பிறப்பையொட்டி, லட்சார்ச்சனை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி தினமும் 4 ஆயிரம் அர்ச்சனைகள் வீதம், 25 நாட்களில் 1 லட்சம் அர்ச்சனைகள் கோவிலில் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று பெரியநாயகி அம்மன் சன்னதியில் கோவில் குருக்கள்கள் அர்ச்சனைகள் செய்து வழிபாடு நடத்தினர். மேலும் ஆடி மாத வெள்ளிக்கிழமைதோறும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடு நடைபெறுகிறது. குறிப்பாக முத்தங்கி அலங்காரம், மீனாட்சி அலங்காரம், சந்தனகாப்பு அலங்காரம், வெள்ளிகவச அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரம் செய்யப்படுகிறது.
இதேபோல் ஆடி மாத பிறப்பையொட்டி பழனி மாரியம்மன் கோவில், ரண காளியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில் என அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் மலைக்கோவில் ஆனந்த விநாயகர் சன்னதியில் ஆடி மாத பிறப்பையொட்டி சுவாமிக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகம், 16 வகை அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
- விழாவில் ஒரு லட்சம் ஆஞ்நேய நாமங்கள் ஜெபிக்கப்பட்டது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் அருகே ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு 108 அடி உயரத்தில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் கோவில் புனரமைக்கும் பணிகள் மற்றும் சிலை அமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இக்கோவிலில் நேற்று ஆஞ்சநேய சித்தர் தலைமையில் மகா ஆஞ்சநேய லட்சார்ச்சனை விழா நடந்தது. அபிஷேகம், பூஜைகள், சிறப்பு தீபாராதனை தொடர்ந்து நடைபெற்ற லட்சார்ச்சனை விழாவில் ஒரு லட்சம் ஆஞ்நேய நாமங்கள் ஜெபிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் கோவில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பிருந்தா ஸ்ரீகுமார், செயலாளர் ஸ்ரீகுமார், பொருளாளர் அஷ்வந்த் ஸ்ரீகுமார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.
- ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும்.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுவர்.
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தையொட்டி லட்சார்ச்சனை விழா நடைபெற்று வருகிறது. அப்போது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுவர்.
இந்த ஆண்டுக்கான லட்சார்ச்சனை விழா, ஆடி மாதப்பிறப்பையொட்டி வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மேலும் வெள்ளிக்கிழமை தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடு நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- குருப்பெயர்ச்சி நாளை மீன ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
சோழவந்தான் அருகே குருவித்துறையில் சித்திரரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் குருபகவான் சுயம்புவாக இந்த கோவிலில் வீற்றிருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.
இங்கு ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி நாளை(சனிக்கிழமை) இரவு 11.24 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு இடம் பெயருவதால் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
இந்த ஆண்டு குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று காலை 10.45 மணிக்கு மேல் ஸ்ரீதர்பட்டர், ரெங்கநாதபட்டர், சடகோபபட்டர், ஸ்ரீபாலாஜிபட்டர், ராஜாபட்டர், கோபால்பட்டர் உள்பட 12 பேர் லட்சார்ச்சனை நடத்தினர். லட்சார்ச்சனையுடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்கியது.
நேற்று வியாழக்கிழமை என்பதால் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசித்தனர். விழாவையொட்டி சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி லட்சார்ச்சனை நடைபெறும். அதன்பிறகு இரவு 9 மணிக்கு பரிகார மகாயாகம் நடைபெறுகிறது. இரவு 11.24 மணி அளவில் மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு குரு ப்பெயர்ச்சி ஆவதால் குரு பகவானுக்கு 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் பரிகார யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெறும்.
இதையொட்டி காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய் துறை, தீயணைப்புத் துறை, அரசு போக்குவரத்துதுறை மற்றும் அறநிலையத்துறை குருப்பெயர்ச்சிவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
- இன்று கடைசி சனிக்கிழமை என்பதால் மிகவும் விசேஷமாகும்.
- அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இன்று கடைசி சனிக்கிழமை என்பதால் மிகவும் விசேஷமாகும்.
குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பிரசித்தி பெற்ற கோவில்களான வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மது சூதனப்பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் ஆகிய கோவில்களில் லட்சார்ச்சனை வழிபாடு நடக்கிறது. இந்த லட்சார்ச்சனை பூஜை வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து கொள்ளலாம். ரூ.200 செலுத்தினால் பக்தர்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து கொள்வதுடன், நெய்வேத்திய பிரசாதமாக எவர் சில்வர் பாத்திரத்தில் லட்டு, பழம், வெற்றிலை, பாக்கு, சிறப்பு பிரசாதம் ஆகியவை வழங்கப்படுகிறது.
வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தீபாராதனை, அன்ன பிரசாதம் வழங்குதல், கோ பூஜை போன்றவை நடக்கிறது. காலை 10.45 மணி முதல் மதியம் 3 மணி வரை அன்னதானமும், மாலையில் புஷ்பாபிஷேகமும், இரவு அலங்கார தீபாராதனையுடன் கருட சேவையும் நடைபெறும்.
பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உச்ச தீபாராதனை, மதியம் 12.30 மணிக்கு உச்சகால பூஜை, 1 மணிக்கு அன்னதானம், இரவு 8 மணிக்கு கருடசேவை போன்றவை நடக்கிறது.
திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் காலை அபிஷேகம், சிறப்புஅன்னதானம், சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவு கருட சேவையும், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு அஷ்டாபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு உச்சகால பூஜை, இரவு 8 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது.
இதுபோல் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், ஆசிராமம் திருவேங்கட விண்ணவரம் பெருமாள் கோவில், தக்கலை பெருமாள் கோவில், தக்கலை பார்த்த சாரதி கோவில், தோவாளை பாலகிருஷ்ண சாமிகோவில், வடசேரி பாலகிருஷ்ணன் கோவில், சுசீந்திரம் இரட்டை தெரு குலசேகர பெருமாள் கோவில், கோட்டார் வாகையடி பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
- காமாட்சியம்மனுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.
- அம்மனுக்கு குங்குமம் சாத்தப்பட்டது.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் சிரவண மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று காமாட்சிதேவிக்கு குங்கும லட்சார்ச்சனை செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவில் மண்டபத்தில் உள்ள மகாலட்சுமி தாயார், சரஸ்வதி தாயார், காமாட்சியம்மனுக்கு சிறப்புப்பூஜைகள், குங்கும லட்சார்ச்சனை செய்யப்பட்டது. முதலில் கலச ஸ்தாபனம், கணபதி பூஜை, புண்யாஹவச்சனம், கலச ஆராதனம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு குங்குமம் சாத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கோவில் கூடுதல் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார் ரெட்டி, கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி சீனிவாசலு, கோவில் அதிகாரி பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்