search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leg swelling"

    • நின்று கொண்டே வேலை செய்பவர்களுக்கும் கால்கள் வீங்குவதுண்டு.
    • கால்களில் உள்ள ரத்த நாளங்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது.

    நீண்ட தூர கார், பஸ், ரெயில், விமானப் பயணங்களில் இவ்வாறு கால்களும் பாதங்களும் வீங்குவது சகஜம் தான் ஆசிரியர், காவல் துறையினர், பாதுகாப்பு பணியினர் இவர்களைப் போன்று நாள் முழுக்க நின்று கொண்டே வேலை செய்பவர்களுக்கும் கால்கள் வீங்குவதுண்டு.

    உடல் இயக்கம் இருந்தால்தான். உடலிலுள்ள ரத்தம் மேலே ஏறிச்சென்று இதயத்தை அடையும். இல்லை என்றால் ரத்தம் மேலே ஏறுவதற்கு சற்று சிரமப்படும். தாமதப்படும். தொடர்ந்து நீண்ட நேரம் உட்கார்ந்துகொண்டே இருக்கும்போது கால்களில் உள்ள ரத்த நாளங்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் ரத்தத்திலுள்ள நீர் ரத்தத்தை விட்டு வெளியேறி ரத்த நாளங்களைச் சுற்றியுள்ள திசுக்களில் சேர ஆரம்பித்துவிடுகிறது.

    இதனால் உடலின் கீழ்ப்பகுதியான பாதம், கணுக்கால், கால் களின் கீழ்ப்பகுதி இவைகளில் லேசாக நீர் தேங்க ஆரம்பிக்கும். இதைத்தான் நாம் கால் வீக்கம் என்கிறோம்.

    நீண்ட பயணத்திற்குப் பிறகு இரண்டு கால்களுமே வீங்கியிருந்தால் கவலைப்படத் தேவையில்லை.

    மறுநாள் இரண்டு கால்களையும் சற்று உயரே தூக்கி வைத்துப் படுத்திருந்தாலே கால் வீக்கம் சுத்தமாக வற்றிவிடும்.

     நீங்கள் பயணம் செய்யும்போதும் கால்கள் வீங்குகிறது என்றால் பின்னாளில் இது 'வேரிகோஸ் வெயின்ஸ்' என்று சொல்லக்கூடிய 'விரிசுருள்சிரை நோயில் கொண்டுபோய் விட்டுவிடக்கூடாது. பயணத்தின் போது அடிக்கடி கால் வீக்கம் வருபவர்கள் இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தநாளக் குழாய்களின் 'ரத்த ஓட்ட மதிப்பீடு' சோதனையை செய்வது நல்லது.

     உங்கள் கால்களின் மேல் பாதியில் மட்டும் வீக்கம் இருந்தாலோ, ஒரு காலில் மட்டும் தான் வீக்கம் இருக்கிறது என்றாலோ, வலியுடன் வீக்கம் உள்ளது என்றாலோ, கால்களின் மேல் தோல் நிறம் கறுப்பு, பழுப்பு, சிவப்பு நிறத்தில் மாறியிருந்தாலோ நீங்கள் உடனடியாக சிறப்பு ரத்தக் குழாய் சிகிச்சை நிபுணரைச் (வேஸ்குலார் நிபுணர்) சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில் இது 'ஆழ்சிரை ரத்த உறைவு நோயாக (டி.வி.டி.) இருந்து விடக்கூடாது.

    இதய நோய், கல்லீரல், சிறுநீரக நோய், தைராய்டு கோளாறு, புற்றுநோய், கர்ப்ப காலம், அதிக உடல் எடை உள்ளவர்கள், தூக்கமின்மை நோய் உள்ளவர்கள், உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொள்பவர்கள், நுரையீரல் நீர் வீக்க நோய் உள்ளவர்கள் இவர்களுக்கெல்லாம் கூட ஒரு காலோ அல்லது இரண்டு கால்களுமோ வீங்குவதும் பின் வற்றுவதும் காணப்படும்.

    இது தவிர எப்பொழுது பயணம் செய்தாலும் இரண்டு கால்களும் வீங்குகிறது என்றால் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சிறப்பு ரத்த சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோனை பெறுங்கள்.

    ×