என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Linda Yaccarino"
- மஸ்க், 2022ல் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டுவிட்டரை வாங்கினார்
- மஸ்கின் அதிரடி நடவடிக்கைகளை கண்டு விளம்பர நிறுவனங்கள் தயங்குகின்றன
அமெரிக்காவில் 2006ல் தொடங்கப்பட்ட உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று டுவிட்டர். பயனர்கள் ஒருவருக்கொருவர் உரையாட வழிவகுக்கும் வலைதளமான இதில், அவர்கள் தங்கள் கருத்துக்களை வார்த்தைகள், ஆடியோக்கள், வீடியோக்கள் மற்றும் கோப்புகள் என பல வடிவங்களில் பதிவிடலாம்.
உலகின் நம்பர் 1. கோடீசுவரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், கடந்த 2022 அக்டோபர் மாதம், 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டுவிட்டரை வாங்கினார். அந்நிறுவனத்தை முன்னிறுத்த பல அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு வரும் மஸ்க், அதன் பெயரை 'எக்ஸ்' என மாற்றினார்.
அவர் வாங்கியதில் இருந்து ஒவ்வொரு மாதமும் எக்ஸ் நிறுவனத்தின் வருமானம், மாதாமாதம் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருடாந்திர வருமானம் ஆண்டுக்கு 55 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. விளம்பர நிறுவனங்கள் மஸ்கின் அதிரடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் சிந்திப்பதால் விளம்பரங்களை தர தயங்குகின்றனர் என தெரிகிறது.
அமெரிக்காவில் பெறப்படும் விளம்பர வருமானம், 2021 டிசம்பரில் இருந்ததை விட 2022 டிசம்பரில் 78% குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் வரை மொத்த விளம்பர வருமானம் ஆண்டுக்காண்டு 60 சதவீதம் குறைந்துள்ளது.
விளம்பர வருவாய் குறைந்து வருவதை ஓப்பு கொண்ட எலான் மஸ்க் ஒரு சில சமூக ஆர்வலர்கள் விளம்பர நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதுதான் இதற்கு காரணம் என குற்றம் சாட்டினார்.
தற்போதைய தலைமை செயல் அதிகாரியான லிண்டா யாக்கரினோ எக்ஸ் நிறுவனத்தை விட்டு வெளியே சென்ற விளம்பர நிறுவனங்களில் 90 சதவீதம் பேர் மீண்டும் எக்ஸ் நிறுவனத்திற்கு திரும்பி விட்டதாகவும், அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து எக்ஸ் லாபம் ஈட்ட தொடங்கும் எனவும் தெரிவித்தார்.
- லிண்டா யாக்கரினோவை டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி.
- லிண்டா யாக்கரினோ என்பிசியுனிவர்சல் நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவராக பணியாற்றி வந்தார்.
டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் தனது சமூக வலைதள நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியை நியமனம் செய்து விட்டதாக அறிவித்து இருந்தார். மேலும் புதிய சிஇஒ பெண் என்று மட்டும் கூறி, அவர் யார் என்பது பற்றி எந்த தகவலும் வழங்கவில்லை.
இதைத் தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ என்று கூறி ஏராளமான தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த வரிசையில், இணையத்தில் வெளியான தகவல்களை உண்மையாக்கும் விதமாக டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ என்று எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
"லிண்டா யாக்கரினோவை டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். லிண்டா யாக்கரினோ வியாபார பணிகளில் கவனம் செலுத்துவார். நான் பிராடக்ட் டிசைன் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பிரிவில் கவனம் செலுத்த இருக்கிறேன்."
"இந்த தளத்தை X-ஆக, எல்லாவற்றுக்குமான செயலியாக மாற்றும் நோக்கில் லிண்டாவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்," என்று எலான் மஸ்க் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
லிண்டா யாக்கரினோ என்பிசியுனிவர்சல் நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவராக பணியாற்றி வந்தார். என்பிசியுனிவர்சல் நிறுவனத்தில் இருந்து லிண்டா வெளியேறுவதாக அந்நிறுவனம் இன்று காலை அறிவித்து இருந்தது. எனினும், இதற்கு முன்பிருந்தே லிண்டா டுவிட்டர் நிறுவனத்தில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்