search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ll India Forward Black Party"

    • கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் திருப்பூர் புறநகர் மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தேளி.கே.காளிமுத்து தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவரும், மாவட்ட தலைவருமான எஸ்.கர்ணன்,முன்னாள் மத்திய குழு உறுப்பினர் ராஜசேகர், திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மகேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். எஸ்.ராஜா அனைவரையும் வரவேற்றார். திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.கர்ணன் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக மத்திய குழு உறுப்பினர் தேளி.கே.காளிமுத்து தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். அவருக்கு நிர்வாகிகள், உறுப்பினர்கள் அவருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர். புறநகர் மாவட்ட தலைவராக தாமோதரன், பொருளாளராக ராமர், துணைத்தலைவராக லட்சுமணன், இணை செயலாளராக எஸ்.ராஜா, தொழிற்சங்க நிர்வாகிகளாக ஈஸ்வரன், ரமேஷ்முருகானந்தம், வெள்ளத்துரை, பிரபு, இளைஞர் அணி நிர்வாகிகளாக வீரமணி, ஜெயராம், சரவணன், மகாதிருநாவுக்கரசு, நவனேஷ், கார்த்திக், மாணவரணி நிர்வாகிகளாக ஜீவா, வினோத்குமார், பிரபாகரன்,பசுபதி, மணிகண்டன், தொண்டர் அணி நிர்வாகிகளாக ரகு,ராஜேஸ், முத்து உள்பட பல்வேறு அணி நகர,ஒன்றிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டில் கிராமப்புறத்தில் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற வகையில் எந்த திட்டமும் இல்லை. தமிழக அரசு சார்பில் திருப்பூரில் சுதந்திர போராட்ட வீரர் சுபாஸ்சந்திரபோசுக்கு திருஉருவ சிலை அமைக்க வேண்டும். திருப்பூரில் நடந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மோதல் போக்கை தடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், சமூக நல அமைப்புகள் இணைந்து ஆலோசனைக்கூட்டம் நடத்த வேண்டும். திருப்பூர் புறநகரில் பாதிப்படைந்து வரும் பனியன்,பவர் லூம் சிறு,குறு தொழில்களின் பின்னடைவுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணமாகும். இ்தற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×