search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Location of Amman Temple"

    • அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு மேற் கொண்டார்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம மேல்மலையனூரில் அமை ந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு மேற் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- 

    வருகிற 17-ந் தேதி ஆடி அமாவாசை நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் ஒவ்வொரு துறையினரும் விழிப்புடன் செயல்பட வேண்டும். அதன்படி காவல்துறையினர் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். சுகாதார துறையினர் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க கிருமிநாசினி தெளிப்ப தோடு தெருக்களில் கொட்ட ப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்களைக் கொண்டு அவ்வப் போது அகற்ற வேண்டும்.

    மின்சார துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும். தீயணைப்பு துறையினர் கோவில் வளாகம் மற்றும் அக்னி குளம் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும். கோவில் சார்பில் பக்தர்களுக்கு குடிதண்ணீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவை ஏற்படுத்தித்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து கோவிலுக்கு அருகில் தற்காலி கமாக அமைக்கப்படும் பஸ் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சகாய், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், திண்டிவனம்சப்- கலெக்டர் கட்டா ரவி தேஜா, தாசில்தார் பாலசுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி,சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×