என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "loksabha elections"
- பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி நட்டா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- அதில் பாராளுமன்ற தேர்தலுக்காக பல்வேறு மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:
வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்களை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி நட்டா இன்று அறிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:
தமிழகம்: அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி
அந்தமான் நிகோபார்: சத்யகுமார்
அருணாசலபிரதேசம்: அசோக் சிங்கால்
பீகார்: வினோத்தாவ்டே,தீபக்பிரகாஷ் எம்.பி
சண்டிகார்: விஜய்பாய்ரூபனி எம்.எல்.ஏ.
டாமன்-டையூ: புர்னேஷ் மோடி எம் எல்.ஏ.,துஷ்யந்த்பட்டேல்
கோவா: ஆஷிஷ்சூட்
அரியானா: பிப்லாப்குமார் தேவ் எம்.பி.,சுரேந்திரசிங் நாகர் எம்.பி.
இமாசல பிரதேசம்: ஸ்ரீகாந்த் சர்மா,சஞ்சய் தாண்டன்
ஜம்மு காஷ்மீர்: தரூண் ஷுக், ஆஷிஸ்சூட்
லடாக்: தருண் ஷுக்
ஜார்க்கண்ட்: லட்சுமிகாந்த் பாஜ்பாய்
கர்நாடகா: ராதாமோகன்தாஸ் அகர்வால் எம்.பி.,சுதாகர் ரெட்டி,
கேரளா: பிரகாஷ் ஜவடேகர்
லட்சத்தீவு: அரவிந்த் மேனன்
மத்திய பிரதேசம்: மகேந்திரகுமார் சிங், சதீஷ் உபாத்யாய
ஒடிசா: விஜய்பால் சிங் தோமர் எம்.பி,லதா உசேந்தி எம்.எல்.ஏ.
புதுச்சேரி: நிர்மல்குமார் சுரானா
பஞ்சாப்: விஜய்பாய் ரூபானி எம்.எல்.ஏ,நரேந்திரசிங்,
சிக்கிம்: திலீப் ஜெய்ச்வால்
உத்தர பிரதேசம்: பாய்ஜெயந்த் ஜெய்பாண்டே
உத்தரகாண்ட்: துஷ்யந்த்குமார் கவுதம்
மேற்கு வங்காளம்: மங்கல்பாண்டே, அமித் மல்வியா, ஆஷா லக்ரா
பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு வருகிற 26-ந்தேதி மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.
உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இவர் பாராளுமன்ற மேல்-சபையின் முன்னாள் துணை சபாநாயகர் ஷியாம்லால் யாதவின் மருமகள் ஆவார். காங்கிரசில் இருந்து ஷாலினி யாதவ் சமீபத்தில் விலகி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.
இதுபற்றி ஷாலினி யாதவ் கூறும் போது, எங்களது கட்சி தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையின் கீழ் பணியாற்றுவேன். அவரது வழி காட்டுதலின்படி செயல்படுவேன் என்றார். #Loksabhaelections2019 #PMModi #ShaliniYadav
விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அமைந்த ஒரு ராசியான கூட்டணிபோல் தற்போது இந்த பாராளுமன்ற தேர்தலிலும் ராசியான கூட்டணி அமைந்துள்ளது. இது மெகா கூட்டணி. மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக ஆட்சி அமைக்கப் போவது உறுதி.
நம்மை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி. தமிழின படுகொலைக்கு காரணமாக இருந்த தி.மு.க., காங்கிரசுக்கு ஒட்டுமொத்த மக்களும் ஓட்டுப்போட மாட்டார்கள். நம் தொப்புள்கொடி உறவுகளின் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்பதை தமிழக மக்கள் மறக்கவில்லை. இந்த தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி. 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் இப்படி அனைத்திலும் ஊழல் செய்த கூட்டணி. விஜயகாந்தை தொட்டவர்களின் கதி என்னவென்று துரைமுருகனை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், பெண்கள் நன்றாக இருக்க வேண்டும். பெண்கள் நல்லா இருந்தால் இந்த வீடு நல்லா இருக்கும். மேலும் ஆரணி தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற செஞ்சி ஏழுமலைக்கு இரட்டை சிலை சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்றார். #LokSabhaElections2019 #PremalathaVijayakanth
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்து மிகவும் அருவருப்பான அவமானகரமான கருத்து என பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திர மோகன் கண்டித்தார். இதைவிட தரம் தாழ்ந்த அரசியல் இருக்க முடியாது என்றும், சமாஜ்வாடி கட்சியின் உண்மையான முகத்தை இது காட்டுவதாகவும் அவர் கூறினார்.
ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கூறினார்.
ஆனால், காக்கி என்று ஆசம் கான் குறிப்பிட்டது, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அணியும் அரைக்கால் சட்டை என சமாஜ்வாடி கட்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #AazamKhan #LokSabhaElections2019
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்