search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madhya Pradesh Assembly Elections"

    • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சரியான எண்ணிக்கை எங்குமே இல்லை
    • பா.ஜ.க.வின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரம் எதுவும் இல்லை

    மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகன் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் 230 சட்டசபை இடங்களுக்கான பொதுத்தேர்தல், வரும் நவம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும்.  ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தீவிரமாக களமிறங்கியுள்ளது.

    இன்று, அம்மாநிலத்தின் ஷாஜாபூர் மாவட்டத்தில், களபிப்பல் பகுதியில் ஒரு பொது கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் சரியான எண்ணிக்கை தெரிய வரும். இதுவரை அவர்களின் சரியான எண்ணிக்கை எங்குமே இல்லை. நாட்டின் கொள்கைகளையும், சட்டங்களையும் வகுப்பதற்கு பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.க்களுக்கோ எம்.பி.க்களுக்கோ எந்த அதிகாரமோ பங்களிப்போ இல்லை. கேபினெட் செயலர்கள் மற்றும் 90 அதிகாரிகளை கொண்டுதான் நாடே இயக்கப்படுகிறது. அதிகாரவர்க்கமும், ஆர். எஸ்.எஸ். பிரதிநிதிகளும்தான் நாட்டையே வழிநடத்துகிறார்கள். ஊழலின் ஊற்றுக்கண்ணாக மத்திய பிரதேச மாநிலம் திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் 3 விவசாயிகள் மாநிலத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு ராகுல் அறிவித்தார்.

    எல்லோரின் வங்கிக்கணக்குகளிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக வாக்குறுதி அளித்து விட்டு, பிரதமர் மோடி மக்களுக்கு துரோகம் செய்து விட்டார் என்று மத்தியபிரதேச தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார். #RahulGandhi #Congress
    சாகர்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் 28-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு தொடர்ந்து 15 ஆண்டுகளாக பா.ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த முறை அந்த ஆட்சியை வீழ்த்தி, வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் அங்கு சாகர் மற்றும் தாமோ ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அவர் பிரதமர் மோடியை ஆவேசமாக தாக்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்துள்ள கருப்பு பணத்தை இங்கே மீட்டு வந்து எல்லோரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி வாக்குறுதி வழங்கி பிரசாரம் செய்தார்.

    அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு 2 கோடிப்பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் பிரசாரம் செய்தார்.

    ஆனால் சொன்னபடி செய்யாமல் அவர் மக்களுக்கு துரோகம் செய்து விட்டார்.

    அடுத்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்று மோடிக்கு பயம் வந்து விட்டது. அதனாலேதான், அவர் மனதில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

    மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கண்ணியமாக பேசுகிறார். அவர் ஊழலில் ஈடுபட்டிருந்தாலும், எங்களுக்கு எதிராக எதையும் சொன்னால்கூட அவர் கண்ணியமாகப் பேசுகிறார்.

    அந்த கண்ணியம் மோடியிடம் இல்லாததால்தான், காங்கிரசையும், எனது குடும்ப உறுப்பினர்களையும் தாக்குகிறார். ஆனால் நான் எப்போதும் கண்ணியமாகத்தான் பேசுவேன்.

    மோடியின் பேச்சை நீங்கள் கேட்டால், அவர் தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதையும், வெறுப்புணர்வுடன் பேசுவதையும் கேட்க முடியும். அவர் பொய் பேசுகிறார். அவர் மீது மக்களும், இளைய தலைமுறையினரும் வைத்திருந்த நம்பிக்கை போய் விட்டது.

    மோடி பொய் பேசுகிறார் என்று இப்போது மக்களே சொல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #RahulGandhi #Congress

    ×