என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "madurai meenakshi amman"
- டிக்கெட் பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்று, மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவை அளிக்க வேண்டும்.
- அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் 14-ந்தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.
மதுரை:
உலகப் புகழ்பெற்ற மதுரையில் முத்திரை பதிக்கும் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது.
விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் காலை, இரவு என இரு வேளைகளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளை வலம் வருவர். ஏப்ரல் 19-ந்தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 20-ந்தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.
சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண வைபவங்கள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் நடைபெறும்.
இந்தாண்டு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண வசதியாக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வைத்திருப்பவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையில் தெற்கு கோபுரம் வழியாக மொத்தம் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்கான கட்டண டிக்கெட் முன்பதிவானது கோவில் இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் இன்று (9-ந்தேதி) தொடங்கி வருகிற 13-ந்தேதி இரவு 9 மணி வரை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் இரண்டு ரூ.500 கட்டண டிக்கெட் மட்டுமே பெறமுடியும். ரூ.200 டிக்கெட்டை ஒருவர் 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 டிக்கெட்டுகளை பெற முடியாது. இந்த பதிவின்போது, பிறந்த தேதி சரியாக இருக்க வேண்டும்.
பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் கோவில் பணியாளர்கள் மூலம் ரூ.500, ரூ.200 டிக்கெட் முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டிக்கெட் பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்று, மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவை அளிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் 14-ந்தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.
அவ்வாறு டிக்கெட் உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்தவர்கள் வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்., இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண டிக்கெட்டை பெறலாம்.
டிக்கெட் பெற்றவர்கள், திருக்கல்யாண நாளான வருகிற 21-ந்தேதி காலை 7 மணிக்குள் கோவிலுக்கு வந்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அகிலத்தையே காக்கும் அந்த அங்கயற்கண்ணி கிளியை தனது கரத்தில் தாங்கி எப்போதும் தன்னோடே இருக்குமாறு வைத்துக்கொண்டாள் என ஒரு கர்ண பரம்பரை கதை சொல்லப்படுகின்றது. அதுமட்டுமல்ல, அன்னையை வேண்டி வணங்கும் பக்தர்களின் வேண்டுதல்களை மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொண்டு இந்த கிளி தான் அன்னையிடம் எப்போதும் சொல்லிக்கொண்டு இருக்குமாம்.
அதனால் தான் பக்தர்கள் அன்னை மீனாட்சியின் மீது மட்டுமல்ல, அவர் ஏந்திய அந்தக்கிளியின் மீதும் பக்தி கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில பக்தர்கள் அன்னை மீனாட்சியை வழிபடும் போது, அந்த கிளிளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.
மதுரை மீனாட்சி “பிசி”யாக இருப்பவள். எனவே உங்கள் வேண்டுதல்களை எதற்கும் அந்த கிளியிடம் சொல்லி வையுங்கள். அந்த கிளி உங்கள் வேண்டுதல்களை சரியான நேரத்தில் அன்னை மீனாட்சியிடம் எடுத்து சொல்லி உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவும். ஆகையால் கிளியை மறக்காதீர்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்குள்ள 19 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. மேலும் அப்பகுதியில் உள்ள மண்டபத்தின் மேற்கூரைகள், தூண்கள் சேதம் அடைந்தன. விபத்து நடந்த பகுதியை பழமை மாறாமல், ஆகம விதிப்படி புனரமைப்பு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை தொடர்ந்து அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று மீண்டும் திடீரென தீப்பற்றியது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் முதல் பிரகாரத்தின் வடக்கு பகுதியில் மகாலட்சுமி சன்னதி அமைந்துள்ளது. அதன் அருகே சிவாச்சாரியார்கள் தாங்கள் குலதெய்வமாக வணங்கும் பொற்படியான் சன்னதி அமைந்துள்ளது. சிவாச்சாரியார்கள் தங்கள் வீட்டு விசேஷங்கள் குறித்து அடிக்கும் பத்திரிகைகளை அந்த கதவு வழியாக உள்ளே போட்டு வழிபாடு செய்வது வழக்கம்.
அந்த சன்னதி பகுதியில் இருந்து நேற்று காலை திடீரென புகை வந்தது. தகவல் அறிந்ததும் கோவில் ஊழியர்கள் விரைந்து வந்து, தீயை உடனே அணைத்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விசாரணையில், பக்தர் ஒருவர் கொளுத்திய சூடத்தில் இருந்து பரவிய தீயானது, அங்கிருந்த பத்திரிகையின் மீது பட்டதால் தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. #MaduraiMeenakshiAmmanTemple
விழா நடைபெறும் 14-ந்தேதி வரை காலை, மாலையில் சந்தரசேகரர் உற்சவம் நடைபெறுகிறது. வருகிற 15-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம் நடைபெறுகிறது.
பின்னர் நாரைக்கு முக்தியளித்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொறிகிழி வழங்குதல், உலவாக்கோட்டை, பாணனுக்கு அங்கம் வெட்டியது ஆகிய திருவிளையாடல் அடிப்படையிலான விழாக்கள் நடைபெறுகின்றன.
வருகிற 20-ந் தேதி மாலை திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலைநாட்டிய லீலை நிகழ்த்திக்காட்டப்படுகிறது.
21-ந் தேதி சுந்தரேசுவரருக்கு சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 7.30 மணிக்கு கும்ப லக்கனத்தில் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை பூஜையானது 23-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் இருந்து அன்று காலை புறப்பாடாகும் சுவாமி, அம்மன் மற்றும் திருஞான சம்பந்தர் சுவாமிகள் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள புட்டுத் தோப்பு பகுதிக்கு செல்கின்றனர்.
சுவாமி-அம்மன் கோவிலில் இருந்து புட்டுத் தோப்பு பகுதிக்கு செல்வதை அடுத்து கோவில் நடையானது சாத்தப்படுகிறது. இருப்பினும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் பக்தர்கள் காலை 7.30 மணி முதல் வடக்கு கோபுரவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.
அவர்கள ஆயிரங்கால் மண்டபத்துக்குள் பகல் 12.30 மணி வரை செல்லலாம். பின்னர் மாலையில் கோவில் நடை வழக்கம் போல திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மானிட உருவில் ஒரு குடும்ப தலைவியாகப் பொறுப்பேற்று- அதே சமயம் ஒரு பேரரசியாக இருந்து தம் மக்கள் அனைவருடைய உள்ளத்தையும் தன் கருணை கடாட்சத்தால் ஆண்டு வழிகாட்டியவள் மதுரை மீனாட்சி.கயல்மீன் போன்ற அழகிய கண்களையுடைய தெய்வப்பெண் நின்று நிகழ்த்திய ஆட்சி என ஆட்சி மகிமையை முன்வைத்தே ‘மீனாட்சி’ என்ற பெயர் அன்னைக்கு ஏற்பட்டது.
தான் இடும் முட்டைகளை, எட்ட நின்று தன் கண்பார்வைத் திறத்தினாலேயே குஞ்சுகளைத் தோன்றச் செய்து, தனது பார்வை ஆற்றலினாலேயே அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பது மீனின் இயல்பாகும்.
அதேபோன்று தனது அருட்கருணைத் திருக்கண் பார்வையினாலேயே தம் பக்தர்கள் அனைவரையும் தோற்றுவித்து, வளர்த்து, காத்து ரட்சித்து வருகிறாள். அன்னையின் இந்த அருட்செயல் காரணமாக ‘மீனாட்சி’ என் பெருமையுடன் மகிமையுடன் அழைக்கப்பட்டாள்.
மதுரையிலே அம்மையும், அப்பனும் குடிகொண்டிருக்கும் திருக்கோவிலை சுந்தரேசுவரர் மீனாட்சி ஆலயம் என்று யாரும் கூறுவதில்லை. மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் எனத்தான் பக்திப்பெருமிதத்துடன் அழைக்கின்றனர்.
சக்தியின் அருள் இயக்கத்தை வைத்துதான் சிவத்தை அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது. இந்த ஆன்மிக தத்துவத்தை தான் மீனாட்சி சுந்தரேசுவரர் பிணைப்பிலே காணமுடிகின்றது.
கருவறையிலே அன்னை மீனாட்சி இரண்டு திருக்கரங்களுடன் கருணை பொங்கும் அருட்பார்வையுடன் காணப்படுகிறாள். சாதாரணமாக சிவாலயங்களில் அப்பனின் திருஉருவத்தை வழிபட்ட பிறகு தான் அம்மையைத் தரிசிக்க செல்வது வழக்கம். இங்கே மீனாட்சி அம்மனை தரிசித்து வழிபட்டு அருளாசியைப் பெற்ற பிறகு தான் சுந்தரேசுவரர் சன்னிதிக்கு சென்று அவரை வழிபடுவது வழக்கத்தில் இருக்கின்றது.
மதுரை மீனாட்சி அம்மனின் உருவத்தை நினைத்தாலே அவர் திருத்தோளில் இருக்கும் கிளியின் நினைவும் நமக்கு வந்து விடும். மீனாட்சி மதுரையம்பதியை ஆட்சி செய்து வந்த நேரத்தில் பறக்க முடியாத ஒரு கிளி மீனாட்சியை எண்ணி அழுததாம்.
அகிலத்தையே காக்கும் அந்த அங்கயற்கண்ணி கிளியை தனது கரத்தில் தாங்கி எப்போதும் தன்னோடே இருக்குமாறு வைத்துக்கொண்டாள் என ஒரு கர்ண பரம்பரை கதை சொல்லப்படுகின்றது. அதுமட்டுமல்ல, அன்னையை வேண்டி வணங்கும் பக்தர்களின் வேண்டுதல்களை மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொண்டு இந்த கிளி தான் அன்னையிடம் எப்போதும் சொல்லிக்கொண்டு இருக்குமாம்.
அதனால் தான் பக்தர்கள் அன்னை மீனாட்சியின் மீது மட்டுமல்ல, அவர் ஏந்திய அந்தக்கிளியின் மீதும் பக்தி கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சில பக்தர்கள் அன்னை மீனாட்சியை வழிபடும் போது, அந்த கிளியை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.
மதுரைமீனாட்சி “பிசி”யாக இருப்பவள். எனவே உங்கள் வேண்டுதல்களை எதற்கும் அந்த கிளியிடம் சொல்லி வையுங்கள். அந்த கிளி உங்கள் வேண்டுதல்களை சரியான நேரத்தில் அன்னை மீனாட்சியிடம் எடுத்து சொல்லி உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவும். ஆகையால் கிளியை மறக்காதீர்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்