search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "malaysia visit"

    பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியாவுக்கு செல்ல உள்ளார் என பாகிஸ்தான் வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ImranKhan #ImranKhanMalaysiavisit
    இஸ்லாமாபாத்:

    வல்லரசு போட்டியில் முதலிடத்தை பிடிக்க முயன்றுவரும் சீனா இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் மீது அளவுகடந்த பாசத்தை பொழிந்து வருகிறது.

    பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து வருகிறது.
     
    தற்போது கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியுள்ளது. அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக  சர்வதேச நிதியத்தின் அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா செல்ல உள்ளார். அப்போது அவர் மலேசிய பிரதமர் மகாதிர் மொகமதுவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என அந்நாட்டு வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    பிரதமராக பதவியேற்றபின் முதல் வெளிநாட்டு பயணமாக இம்ரான் கான் சீனாவுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. #ImranKhan  #ImranKhanMalaysiavisit
    இந்தோனிசியாவில் இருந்து மலேசியாவுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு எதிராக அங்கு வசிக்கும் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #ModimeetsMahathir #PMModi #SterliteProtest

    கோலாலம்பூர்:

    இந்தோனேசியா நாட்டுக்கு முதல் முறையாக அரசு முறை பயணமாக சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, உற்பத்தி குறித்து அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    அதைத்தொடர்ந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மோடி செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில் நேற்று மலேசியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் மகாதிர் முகம்மதுவை சந்தித்து வாழ்த்து கூறினார். அதைத்தொடர்ந்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    இதனிடையே மோடியின் வருகை குறித்து அறிந்த மலேசிய வாழ் தமிழ்மக்கள், ஸ்டெர்லைட் பிரச்னையை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஸ்டெர்லைட்டை தடை செய், தமிழர்களை கொல்லாதே, தமிழ் மண்ணை சிதைக்காதே, மோடி எங்கள் எதிரி என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி கரகோஷம் எழுப்பினர். 



    மலேசிய பயணத்தை முடித்துக்கொண்டு புறப்படும் மோடி, நாளை சிங்கப்பூரில் நடைபெற உள்ள பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். #ModimeetsMahathir #PMModi #SterliteProtest
    ×