search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maoists attack"

    • தெலுங்கானாவில் போலீசார் என்கவுண்டர் நடத்தினர்.
    • இதில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொதகுடம் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக போலீசாரும் அவர்கள் மீது சரமாரி துப்பாக்கியால் சுட்டனர்.

    இந்த என்கவுண்டரில் 2 பெண்கள் உள்பட 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசார் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மறைவிடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கடந்த இரு தினங்களுக்கு முன் சத்தீஸ்கரின் பீஜப்பூர் எல்லைப்பகுதியில் பாதுகாப்புப்படை நடத்திய என்கவுன்டரில் 9 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிரடிப்படையினர் மற்றும் போலீசார், வனத்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • வனத்தையொட்டிய தோட்டங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பாட்டவயல் அருகே கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் உள்ளது.

    இங்கு கம்பலை எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் மலையாளிகள் மட்டுமின்றி, தமிழர்களும் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அங்கு இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சம்பவத்தன்று, இரவு இந்த பகுதிக்கு மாவோயிஸ்டுகள் 6 பேர் சென்றனர். அவர்கள் அங்குள்ள அரசு அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    பின்னர் கதவை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த பொருட்களையும் சூறையாடி உள்ளனர். அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

    பின்னர் வெளியில் செல்லும் போது, அலுவலகத்தின் சுவர் பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். கம்பலை தோட்டம், ஆதிவாசிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சொந்தம் என்பன உள்பட பல தகவல்கள் தமிழ் மற்றும் மலையாள மொழி கலந்து எழுதப்பட்டு இருந்தது. மேலும் வந்தவர்கள் மாவோயிஸ்ட் கபினி கொரில்லா குழு என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும், கேரள மாநில தண்டர்போல்டு அதிரடிப்படையினர் மற்றும் போலீசார், வனத்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கேரளாவில் அரசு அலுவலகம் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலை அடுத்து அதனையொட்டி உள்ள தமிழக எல்லையான நீலகிரி மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்ட எல்லையான கக்குச்சி, நாடுகாணி உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இதுதவிர அதிரடிப்படை போலீசார் தமிழக எல்லைப்பகுதிகளிலும், வனத்தையொட்டிய தோட்டங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் பெண் கமாண்டோ படைப்பிரிவில், முன்னாள் பெண் மாவோயிஸ்டுகள் 10 பேர் இடம்பெற்று, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான வேட்டையில் களமிறங்கி உள்ளனர். #Chhattisgarh #WomenCommandoUnit #SurrenderedMaoists
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறை தாக்குதல்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்கும் வனப்பகுதிகளில், உள்ளூர் போலீசாருடன் சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.

    அதேசமயம் பயங்கரவாதப் பாதையில் இருந்து திரும்பி திருந்தி வாழ விரும்பும் மாவோயிஸ்டுகளுக்கு, புனர்வாழ்வு பணிகளுக்கான ஏற்பாடுகளையும் அரசு செய்து கொடுக்கிறது. மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தால் அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அதனை ஏற்று ஏராளமான மாவோயிஸ்டுகள் குடும்பத்தினருடன் சரண் அடைந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் திருந்தி வாழ அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான வேட்டையில் ஈடுபடும் தண்டேவாடா மாவட்ட ரிசர்வ் படையில், 30 பேர் கொண்ட பெண் கமாண்டோ பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதுதான் மாநிலத்தின் முதல் பெண் கமாண்டோ பிரிவாகும். சரண் அடைந்த பெண் மாவோயிஸ்டுகள் 10 பேர், இந்த கமாண்டோ படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


    பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப் போல், அடர்ந்த வனப்பகுதியில் மறைந்திருக்கும் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து இந்த முன்னாள் மாவோயிஸ்டுகள் நன்கு அறிந்திருப்பார்கள். எனவே, மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதற்கு, இவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தண்டேவாடா மாவட்டத்தில் ரிசர்வ் படைப் பிரிவுகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அபிஷேக் பல்லவா கூறுகையில், “மாவட்ட ரிசர்வ் படைக்கு உள்ளூர் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சரண் அடைந்த மாவோயிஸ்டுகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது உருவாக்கப்பட்டுள்ள 30 பேர் பெண் கமாண்டோ படையில், சரண் அடைந்த 10 மாவோயிஸ்டுகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், மாவோயிஸ்டுக்கு எதிரான கிளர்ச்சி இயக்கத்தில் இருந்த 10 பெண்கள் உதவி கான்ஸ்டபிள்களாக இணைந்துள்ளனர். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இன்றைய நடவடிக்கையிலும் பெண் கமாண்டோ படை இடம்பெற்றிருந்தது” என்றார்.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 3 மாவோயிஸ்டு கமாண்டர்களை இந்த பெண் கமாண்டோக்கள் சுட்டுக்கொன்றிருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். #Chhattisgarh #WomenCommandoUnit #SurrenderedMaoists
    ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் பகுதியில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளால் தேர்தல் பணிபுரிய வந்த பெண் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #LokSabhaElections2019 #Maoists
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் பாராளுமன்றத் தொகுதியில் இரண்டாம் கட்டத்தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. 

    புல்பானி சட்டசபை தொகுதிக்கு உள்ளிட்ட பகுதியில் தேர்தல் பணிபுரிய வந்த சஞ்சுக்தா திகால் என்ற பெண் அதிகாரியை மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொலை செய்தனர்.

    தேர்தல் பணிபுரிய வந்த பெண் அதிகாரியை மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்றது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #LokSabhaElections2019 #Maoists
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். #LoksabhaElections2019 #BJP #AmitShah
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் கடந்த 9ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்கள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்பட பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, ராஜ்நந்தகாவ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா,  சத்தீஸ்கரின் தண்டேவாடாவில் நடைபெற்ற நக்சலைட்கள் தாக்குதலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி கொல்லப்பட்டார்.

    பீமா மாண்டவி கொல்லப்பட்டது அரசியல் சதி.  எனவே, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு சத்தீஸ்கர் முதல் மந்திரி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.  #LoksabhaElections2019 #BJP #AmitShah
    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். #NaxalAttack #BJP #BHimaMandavi
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்கள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். எம் எல் ஏவுடன் சென்ற பாதுகாப்பு படையினர் நக்சலைட்கலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.



    இந்த தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து, சம்பவ இடத்துக்கு கூடுதலாக பாதுகாப்பு படைவீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
    #NaxalAttack #BJP #BHimaMandavi
    ×