என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » metoo india
நீங்கள் தேடியது "MeToo India"
சேலத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி ஐயர், மீ டூவை நல்ல விஷயத்துக்காக பயன்படுத்தலாம் என்றார். #MeToo #JananiIyer
சேலத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. பேரணியை மாநகரக் காவல் ஆணையாளர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் நடிகர் ‘தாடி’ பாலாஜி, நடிகை ஜனனி மற்றும் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனம் ஓட்டிப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின்போது மீ டூ விவகாரம் குறித்து ஜனனியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது அவர் கூறியதாவது, “மீ டூ விவகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல், செய்தி மற்றும் விளம்பரத்துக்காக மட்டுமல்லாமல் நல்ல விஷயத்துக்காக உபயோகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
சினிமா துறையில் மட்டுமில்லாமல் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவுகள் உள்ளன. நிறைய பெண்கள் அவர்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை வெளியில் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.
சினிமா துறையில் வெளிப்படையாகத் தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் காலம் கடத்தாமல் உடனே தெரிவிக்க வேண்டும். உடனடியாக வெளியே சொன்னால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க முடியும்” என்றார். #MeToo #JananiIyer
இயக்குநர் சுசிகணேசன் மீது லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டை வைத்த நிலையில், அதில் உண்மை இல்லை என்பதை நிரூபிக்க ஒரு ரூபாய் இழப்பீடு கோரி சுசிகணேசன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #MeToo #SusiGaneshan
‘மீ டூ’ மூலம் பிரபல நடிகைகள், பாடகிகள் உள்ளிட்ட பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, பிரபல இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை சுசிகணேசன் மறுத்து உள்ளார். மேலும், தன் மீது அவதூறு பரப்பும் லீனா மணிமேகலைக்கு எதிராக அவர் ஏற்கனவே, சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் சுசிகணேசன் சென்னை பெருநகர உரிமையியல் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை லீனா மணிமேகலை கூறி உள்ளார். சுயவிளம்பரத்திற்காக பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்தி உள்ளார். இதன்மூலம் எனக்கு ஏற்பட்டுள்ள மனஉளைச்சல் மற்றும் பாதிப்புக்கு நஷ்ட ஈடாக ஒரு ரூபாயை உரிமையியல் சட்டத்தின் கீழ் வழங்க லீனா மணிமேகலைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறி உள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. தன் மீதான புகாரில் உண்மை இல்லை என்பதை நிரூபிக்கவே ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக சுசிகணேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #MeToo #SusiGaneshan #LeenaManimegalai
நாடு முழுவதும் மீ டூ சர்ச்சை சூடுபிடித்துள்ள நிலையில், குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். #SusiGaneshan #LeelaManimegalai
இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை, இயக்குநர் சுசிகணேசன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து லீனா அவரது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
கடந்த 2005-ல் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த போது, நிகழ்ச்சியை முடித்து வீட்டிற்கு செல்லும் போது, சுசி கணேசன் தன்னை காரில் அழைத்து சென்றதாகவும், அப்போது சுசி கணேசன் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும், அப்போது தன்னிடம் இருந்த கத்தியை வைத்து அவரிடம் இருந்து தப்பித்ததாகவும் லீனா கூறியிருக்கிறார்.
லீனாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள இயக்குநர் சுசி கணேசன் கூறியிருப்பதாவது,
லீனா மணிமேகலை - உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. சேற்றில் உருளும் பன்றி, வெள்ளைச் சட்டையோடு சுற்றுபவர்களை பார்த்து எப்படி பொறாமைப்படுமோ அப்படி ஒரு சம்பவத்தை உங்கள் கற்பனைத் திறனோடு ஒரு கதை பண்ணியிருக்கிறீர்கள். இந்த உலகம் பொறுக்கிகளுக்கும், போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதை நீருபித்து விட்டீர்கள். உங்களோடு சகதியில் உருண்டு இருந்தால், ஒருவேளை இந்த பழியிலிருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ??? அரை மணிப் பேட்டிக்கு அறிமுகமான முதல் அறிமுகத்திலியே, ஒருவர் தனியாக காரில் ஏறச் சொன்னால் ஏறிக்கொள்ளும் புதுமைப் பெண்ணான நீங்கள், கத்தியை அந்த அப்பாவி (ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ) நெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர்.
அத்தைனையும் பொய் மூட்டைகள் என்பதை நிருபிக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அவற்றை வெளியிடுவதற்கு முன் என்னை கொச்சைப்படுத்திய அதே பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன். இல்லையென்றால் கோர்ட் மூலமாக மான நஷ்ட வழக்கு தொடர்ந்து வருகிற தொகையை, உன்னைப் போன்ற #metoo-இயக்கத்தை சுய பழிவாங்களுக்கு பயன்படுத்தும் "சமுதாய வைரஸ்களை" களை எடுப்பதற்கு பயன்படுத்துவதைத் தவிற வேறு வழியில்லை.
Social media நண்பர்களுக்கு - தயவுசெய்து metoo-இயக்கத்தை திசைதிருப்பும் இதுபோன்ற வக்ர புத்தி கொண்டவர்களை அடையாளம் கண்டு தவிறுங்கள். லீலா மணிமேகலை என்னிடம் கேட்டது இரண்டு உதவிகள் - உதவி இயக்குனர்/பாடல் ஆசிரியர். இரண்டும் என்னால் செய்ய முடியவில்லை. குடும்ப வாழ்க்கையில் தோற்று, கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில், சினிமா உலகம் அறியும் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரித் துப்பமுடியாமல், ஏனோ என்மீது வன்மைத்தை துப்பியிருக்கிறார். கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூரையாடியிருக்கிறார். என் குடும்பம், வேதனையோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட் மூலம் கழுவும் வரை எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள்.
என்று பதில் அளித்துள்ளார்.
பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ள சின்மயியிடம் சுசிலீக்ஸ் சர்ச்சை பற்றி பலரும் விளக்கம் கேட்ட நிலையில், வீடியோ வடிவில் சின்மயி தனது விளக்கத்தை தெரிவித்திருக்கிறார். #MeToo #Chinmayi
பாலிவுட்டில் மீடூ இயக்கம் வேகம் எடுத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தெரிவித்தார். அவர் ஆதாரம் இல்லாமல் விளம்பரம் தேட பொய் புகார் தெரிவிப்பதாக சிலர் விமர்சித்தனர்.
சமூக வலைத்தளத்தில் பாடகி சுசித்ரா, சுசி லீக்ஸின் ஒரு பகுதியாக சின்மயி குறித்து தெரிவித்ததை தேடிக் கண்டுபிடித்தனர்.
2016-ம் ஆண்டில் பாடகி சின்மயி 4 முறை கருவை கலைத்ததாக சுசித்ரா டுவீட் செய்திருந்தார். சின்மயி அட்ஜெஸ்ட் செய்து வாய்ப்புகள் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். சின்மயி குறித்து சுசித்ராவின் டுவீட்டுகள் மற்றும் வீடியோவை தேடிக் கண்டுபிடித்த சமூகவலைதளவாசிகள் முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்டனர்.
நெட்டிசன்கள் தன்னை தொடர்ந்து கேவலமாக விமர்சித்ததை பார்த்த சின்மயி சுசிலீக்ஸ் பற்றிய உண்மையை தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முடிவுசெய்து பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் 4 முறை கருகலைப்பு எல்லாம் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் சின்மயி.
Karthik Kumar
— Chinmayi Sripaada (@Chinmayi) October 14, 2018
Thank you! I have lived with these stories of the fictitious ‘4 abortions’, ‘adjusting for my career’ and threat of a ‘video’ that doesn’t exist for over a year.
I am grateful. It lifts the weight off.
Thank you. pic.twitter.com/mYTBE8D9UD
சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டிருந்தபோது என்னை பற்றி தவறாக பேசினார். அதில் உண்மை இல்லை. அதற்காக அவர் இமெயில் மூலம் மன்னிப்பு கேட்டார். அந்த இமெயிலை பப்ளிக்காக வெளியிட வேண்டும் என்று தோன்றவில்லை. இன்று சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் ஒரு டுவீட்டுக்கு பதில் அளித்துள்ளார். சுசித்ராவுக்கு மனநலம் சரியில்லாதபோது அவர் சின்மயி மீது புகார் தெரிவித்தார் என்று கார்த்திக் டுவீட் செய்துள்ளார் என்று சின்மயி குறிப்பிட்டு கூறுயுள்ளார். #MeToo #Chinmayi #SuchiLeaks
சின்மயி வெளியிட்ட வீடியோவை பார்க்க:
‘மீ டூ’ இயக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாலியல் புகாருக்கு ஆளான நடிகர்களுடன் பணியாற்ற மாட்டோம் என மும்பையில் பெண் இயக்குனர்கள் அறிவித்துள்ளனர். #MeToo #MeTooIndia
இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவை உலுக்கி வரும் இந்தப் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசு தனி குழு ஒன்றை நியமிக்கவுள்ளது. இது ஒருபுறம் இருக்க பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி குற்றம் நிரூபிக்கப்பட்ட நடிகர்களுடன் இனி இணைந்து பணிபுரிய மாட்டோம் என இந்தி பெண் இயக்குனர்கள் அறிவித்துள்ளனர்.
பிரபல இந்திப்பட பெண் இயக்குனர்களான கொங்கனா சென் சர்மா, நந்திதாதாஸ், மேக்னா குல்சார், கவுரி ஷிண்டே, சோயா அக்தர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
Let's make it a better world. #MeTooIndiapic.twitter.com/9AUXZrdQgA
— Alankrita Shrivastava (@alankrita601) October 14, 2018
பெண்கள் மற்றும் இயக்குனர்கள் என்ற முறையில் ஒன்று சேர்ந்து ‘மீ டூ’ அமைப்புக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறோம். பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் அதை வெளிப்படையாகச் சொல்ல தொடங்கியிருப்பது நிச்சயம் வரவேற்கத்தக்கப் புரட்சியாகும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகத் துணை நிற்போம். பெண்களுக்கு பணியிடங்களில் நேரும் கொடுமைகளுக்கு எதிராகவும், பாதுகாப்பு, சம உரிமை குறித்து இனி நாங்கள் பிரசாரம் செய்வோம். அதே நேரம் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுடன் இனி பணிபுரிய போவது கிடையாது.
இவ்வாறு அவர்கள் அறிவித்துள்ளனர். இவர்களின் நடவடிக்கைக்கு வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. #MeToo #MeTooIndia
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X