search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Metro train service"

    • பயணிகளின் வசதிக்காக கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என அறிவிப்பு.
    • காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.

    கனமழை காரணமாக பயணிகளின் வசதிக்காக கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் ரெயில் சேவை இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், காலை 8 மணி முதல் 11 மணி வரை பச்சை வழித்தடத்தில் 5 நிமிட இடைவெளியிலும், நீல வழித்தடத்தில் 6 நிமிட இடைவெளியிலும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கடைசி சேவை இரவு 12 மணி வரை நீட்டிப்பு.
    • இரு நாட்களில் இரவு 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை இருக்கும்.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வரும் ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மெட்ரோ ரெயிலின் கடைசி சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரவு 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு ரெயில் சேவை இருக்கும் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் வண்ணாரப்பேட்டை-விமான நிலையம் வரை 23 கி.மீ தூரத்திற்கும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 22 கி.மீ தூரத்திற்கும் 2 வழித்தடங்களில் நிறைவேற்றப்படுகிறது.

    உயர்மட்ட பாதை மற்றும் சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரையிலும், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.சில் இருந்து விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.

    வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே சுரங்கப்பாதையிலும் ரெயில்களை இயக்குவதற்காக கடந்த சில மாதங்களாக பணிகள் மும்முரமாக நடந்து முடிந்துள்ளன. இதன்மூலம் 45 கி.மீ தூரத்திற்கான முதல் கட்ட மெட்ரோ பணிகள் முடிவடைந்தன.

    அதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதலில் வருகிற 30-ந்தேதி போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பாராளுமன்ற கூட்டம் நடைபெறுவதால் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் வசதிக்கேற்ப தொடக்கவிழா தள்ளி வைக்கப்பட்டது. அனேகமாக பிப்ரவரி 6 அல்லது 10-ந்தேதி வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் சேவை தொடங்க பரிசீலிக்கப்பட்டுள்ளது.

    அதற்கான விழா சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. மத்திய வீடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரி ஹர்தீப்சிங்பூரி, முதல்-மந்திரி எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கின்றனர்.

    இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் அவர் தற்போது இதில் பங்கேற்க மாட்டார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே 10 கி.மீ தூரத்துக்கான சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்தது. மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன் தலைமையிலான அதிகாரிகள் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் பார்த்தனர். அப்போது ரெயில் நிலையங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

    நாளை மறுநாள் (25-ந்தேதி) மீண்டும் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. அதில் திருப்தி ஏற்பட்டால் இறுதி முடிவு எடுக்கப்பட்டு சில நாட்களில் ரெயிலை இயக்க அனுமதி சான்றிதழ் வழங்கப்படும். இந்த மார்க்கத்தில் ரெயில்சேவை தொடங்கும் பட்சத்தில் முதல்கட்ட பணி நிறைவேறி 45 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ சேவை முழுமை அடையும். #MetroTrain
    வண்ணாரப்பேட்டை மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரெயில் சேவை இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். #chennaimetrotrain

    சென்னை:

    மெட்ரோ ரெயில் தலைமை பொது மேலாளர் வி.கே.சிங், இயக்குனர் நரசிம்ம பிரசாத் ஆகியோர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்ட்ரல், எழும்பூர் மற்றும் டி.எம்.எஸ் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதை தொடர்ந்து பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இலவச பயணம் அறிவிக்கப்பட்டதால் மக்கள் உற்சாகமாக பயணம் செய்தனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    கட்டணத்தை நாங்கள் குறைக்க முடியாது. இதற்கான ஆணையம் தான் முடிவு செய்யும். 5 நாட்கள் எந்தவித அசம்பாவித சம்பவமும் இல்லாமல் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்தனர். மெட்ரோ ரெயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    ஒவ்வொரு நிலையத்திலும் 50 முதல் 60 வரை சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பெண் பயணிகள் பாதுகாப்பு அவசியம் என்பதை கவனத்தில் கொண்டுள்ளோம்.

    சென்னையில் சுரங்கப் பாதையும், ரெயில் நிலையங்களும் அதிகம் உள்ளதால் மற்ற நகரங்களை விட திட்டச் செலவு அதிகமாகும். அதனால் மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக உள்ளது.

    வண்ணாரப்பேட்டை முதல் டி.எம்.எஸ்., ஏ.ஜி ஆபிஸ் வரையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வருடஇறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து சேவை தொடங்கும். வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் விரிவாக்க திட்டப் பணிகள் எல்லாம் முடிந்து முழுமையான மெட்ரோ ரெயில் சேவை 2020 மார்ச் மாதம் நடைபெறும்.

    2வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 3 வழித் தடங்களில் நிறைவேற்றப்படுகிறது. இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைத்து விடும். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. ஒட்டுமொத்த பணிகளும் முடிக்கப்பட்டு செயல் படுத்தும் போது மெட்ரோ ரெயிலில் தினமும் 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #chennaimetrotrain

    ×