என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Michaun Cyclone"
- வடமாநிலங்களில் இருந்து வரும் ஏழு ரெயில்கள் திருத்தணியில் நிறுத்தப்படும்.
- சென்ட்ரலில் இருந்து புறப்படும் சில ரெயில்கள் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை நகரை வெள்ளம் சூழ்ந்தது. பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்துவிட்டது. ஆனால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ் பகுதிகளில் தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீர இன்னும் வடியவில்லை. இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்கள் இயக்க முடியாத நிலை 4-வது நாளாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு குறித்து ரெயில் நிலையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. மைசூருவில் இருந்து நேற்று புறப்பட்ட காவிரி எக்ஸ்பிரஸ் பெரம்பூரில் நிறுத்தப்படும்.
2. மும்பையில் இருந்து சென்ட்ரலுக்கு புறப்பட்ட ரெயில் திருத்தணியில் நிறுத்தப்படும்.
3. டெல்லியில் இருந்து புறப்பட்ட ரெயில் திருத்தணியில் நிறுத்தப்படும்.
4. மொத்தம் ஏழு ரெயில்கள் திருத்தணி, சென்னை கடற்கரை நிலையத்தில் நிறுத்தப்பட உள்ளது.
5. சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை புறப்படும் வந்தே பாரத் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
6. ஷாலிமர் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலும் கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.