search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modern Face Shield"

    • நிம்மதியான தூக்கம் உடல் ஆரோக்கியம் மகிழ்ச்சியை கொடுக்கும்.
    • தூக்கமின்மைக்கு நிரந்தர தீர்வுகாண முடியும்.

    நிம்மதியான தூக்கம் உடல் ஆரோக்கியம் மகிழ்ச்சியை கொடுக்கும். என்ன நடந்தாலும் நிம்மதியாக தூங்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படக்கூடியது.

    தூக்கக் கோளாறுகள் இயல்பான உடல், மன அழுத்தம் உணர்ச்சி செயல்பாடுகளில் தலையிடும் அளவுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

    பாலிசோம்னோ கிராபி மற்றும் ஆக்டிகிராபி ஆகிய சோதனை மூலம் தூக்கக் கோளாறுகளை கண்டறிகின்றனர்.

    இந்த சோதனைகள் கடினமானது. இவற்றின் மூலம் ஒருவருக்கு எந்த விதமான தூக்க குறைபாடு உள்ளது என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது கடினம்.

    தூக்கமின்மை குறித்து ஆய்வு செய்வதற்காக ஐதராபாத் ஐஐஐடி-எச் ஆராய்ச்சியாளர்கள் நவீன முக கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த முக கவசம் வழக்கமான முக கவசம் போல் தோற்றமளிக்கிறது. இதில் பல்வேறு விதமான மின்முனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த முக கவசத்தை ஒருவருக்கு அணிய செய்தால் அவருக்கு எந்த விதமான தூக்கமின்மை உள்ளது என்பதை 80 சதவீதத்திற்கு மேல் துல்லியமாக கண்டறிய முடியும். இது கண் மற்றும் கால் இயக்கம் ஆக்சிஜன் அளவு இதயத்துடிப்பு சுவாச முறை மற்றும் மூளை போன்ற பல்வேறு உடல் உறுப்புகளை கண்காணிக்க கூடியது.

    இந்த முகமூடி மூலம் வெவ்வேறு விதமான தூக்க குறைபாடுகளை கண்டறிந்து அதன் மூலம் சிகிச்சை அளித்து தூக்கமின்மைக்கு நிரந்தர தீர்வுகாண முடியும்.

     நமக்கு ஏன் தூக்கம் வர மாட்டேங்குது என நினைப்பவர்கள் நிம்மதியாக தூங்க இந்த முக கவச சோதனையை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    ×