search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohsin Naqvi"

    • பாகிஸ்தான் சென்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்தியா மறுப்பு.
    • நாளை நடைபெறும் ஐசிசி- பிசிபி கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுத்துவிட்டது. அதேவேளையில் தொடரை ஹைபிரிட்டாக நடத்த பாகிஸ்தானும் மறுப்பு தெரிவித்து வருகிறது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் ஐசிசி-க்கு சுமார் 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.

    இதனால் தொடரை ஹைபிரிட் மாடலாக நடத்துங்கள் ஊக்கத்தொகை தருகிறோம் என ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக நாளை ஐசிசி- பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு எடுக்க இருக்கிறது. அதன்பிறகு போட்டிக்கான அட்டவணை இறுதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் இனிமேல் பாகிஸ்தான் இந்தியா சென்று விளையாட வாய்ப்பில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நக்வி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி கூறுகையில் "இந்திய அதிகாரிகள் அவர்களுடைய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு வந்து விளையாட அனுப்ப தயாராக இல்லாதபோது, இந்தியாவில் நடைபெறும் அனைத்து தொடர்களிலும் பாகிஸ்தான் சென்று விளையாட வாய்ப்பில்லை.

    இந்திய அணி பாகிஸ்தான் வர மறுப்பு தெரிவிக்கும்போது, பாகிஸ்தான் அணி மட்டும் இந்தியா செல்லும் சமநிலையற்ற சூழ்நிலையை நாங்கள் கொண்டிருக்க முடியாது. ஐசிசி உடனான கூட்டத்தில் என்ன நடந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நல்ல செய்திகள் மற்றும் முடிவுகளுடன் நாங்கள் வெளிவருவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்றார்.

    • இந்த போட்டிக்கு தகுதி பெற்ற மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு வர தயாராக உள்ளன.
    • இந்திய அணிக்கு இங்கு வந்து விளையாடுவதில் ஏதாவது சிக்கல் இருந்தால், அவர்கள் எங்களிடம் பேசட்டும்.

    லாகூர்:

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. 1996-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் நடக்கும் முதல் ஐ.சி.சி. தொடர் இதுவாகும்.

    2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத இந்திய அணி, இப்போதும் அங்கு செல்ல மறுத்து விட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய இந்திய கிரிக்கெட் வாரியம் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதே நிலைமை ஏற்பட்ட போது, இந்திய அணியின் ஆட்டங்கள் இலங்கைக்கு மாற்றப்பட்டது.

    ஆனால் இந்த முறை இந்திய அணியின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. இந்திய அணி வராவிட்டால் ஐ.சி.சி. மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இன்னொரு பக்கம் போட்டிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி நேற்று லாகூரில் நிருபர்களிடம் கூறுகையில், 'பாகிஸ்தானுக்கு வந்து விளையாடமாட்டோம் என்று இந்தியா மறுத்தது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுதி உள்ளோம். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். விளையாட்டையும், அரசியலையும் தனித்தனியாக பார்க்க வேண்டும். எந்த நாடும் அவற்றை ஒன்றாக கலக்கக்கூடாது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் விஷயத்தில் எல்லாமே சரியாக நடக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

    மேலும் நக்வி கூறுகையில், 'எங்களை பொறுத்தவரை பாகிஸ்தானின் கவுரவமும், மதிப்பும் மிகவும் முக்கியம். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும். அவற்றில் ஒரு பகுதி ஆட்டங்களை வேறு நாட்டில் நடத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

    இந்த போட்டிக்கு தகுதி பெற்ற மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு வர தயாராக உள்ளன. அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே இந்திய அணிக்கு இங்கு வந்து விளையாடுவதில் ஏதாவது சிக்கல் இருந்தால், அவர்கள் எங்களிடம் பேசட்டும். அவர்களின் கவலையை எங்களால் எளிதில் தீர்க்க முடியும். அவர்கள் இங்கு வராததற்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை.

    எனவே போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுவதில்லை என்ற எங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூடிய சீக்கிரம் போட்டி அட்டவணையை வெளியிடும்' என்றார்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் வரும் என மோசின் நக்வி கூறினார்.
    • 3 முறை பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாடியுள்ளதால் இம்முறை இந்திய அணி நிச்சயம் எங்களை ஏமாற்றாது.

    கராச்சி:

    2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

    மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து ஐ.சி.சி இன்னும் முடிவு செய்யவில்லை.

    மறுபுறம் இந்தியா வரவில்லை என்றால் அவர்களைப் புறக்கணித்து விட்டு மற்ற அணிகளை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை தங்களது நாட்டிலேயே நடத்த பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. ஆனால் அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாக கலக்காமல் தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவிற்கு தொடர்ந்து பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் வரும் என நம்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

    நீண்ட இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தானில் நடக்க உள்ள ஐசிசி தொடர் என்பதால் பலத்த பாதுகாப்புடன் தொடரை நடத்த ஆயத்தமாகி வருகிறோம். எனவே அடுத்த ஆண்டு அனைத்து நாடுகளும் பாகிஸ்தான் வந்து விளையாடும் என்பதால் நிச்சயம் இந்திய அணியும் பாகிஸ்தான் வந்து விளையாடும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு ஜூலைக்கு பிறகு 3 முறை பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாடியுள்ளதால் இம்முறை இந்திய அணி நிச்சயம் எங்களை ஏமாற்றாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருந்து வருகிறார்.
    • ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்ய உள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா ஐசிசி தலைவராக ஒருமனதாக தேர்வாகியுள்ளார். டிசம்பர் மாதத்தில் இருந்து ஐசிசி தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.

    பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருந்து வருகிறார். தற்போது ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவராக இருக்கும் மெஹ்சின் நக்வி அடுத்த ஆசிய கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கான போட்டியில் அவர் முன்னிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த வருட இறுதியில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருட இறுதியில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது அடுத்த இரண்டு வருடத்திற்கு தலைவராக நியமிக்கப்படுவது உறுதியாகும்.

    பிசிசிஐ-யின் செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்ய இருப்பதால், புதிய செயலாளராக அருண் ஜெட்லியின் மகன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்திய கிரிக்கெட் அணி குறித்து நான் தற்போது எந்த கருத்தும் கூறமாட்டேன்.

    2025-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

    அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.

    இதில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வருகிறது. அதுமட்டுமின்று கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டன. இதனால் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணி மோதும் ஆட்டம் மட்டும் வேறு இடத்தில் நடைபெறும் என்ற எதிர்பார்க்கள் எழுந்துள்ளது.

    இந்நிலையில் சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுவதுமாக பாகிஸ்தானில் மட்டும் தான் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடத்தப்படும். இந்திய கிரிக்கெட் அணி குறித்து நான் தற்போது எந்த கருத்தும் கூறமாட்டேன். ஆனால் இன்ஷா அல்லாஹ் பாகிஸ்தானுக்கு இந்தியா வருவது குறித்து நல்ல செய்தியை கேட்க விரும்புகிறேன்.

    என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மார்ச் 01-ம் தேதி லாகூரில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது குறித்து எந்த முடிவையும் பிசிசிஐ இதுவரை இறுதிசெய்யவில்லை. 

    • டிசம்பர் 2022 முதல் வாரிய விவகாரங்களை நடத்தி வந்த இடைக்கால நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் கடந்த 4-ம் தேதி முடிவடைந்தது.
    • சையது மொஹ்சின் ரசா நக்வி 3 வருட காலத்திற்கு இந்த பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக பஞ்சாப் மாகாணத்தின் தற்காலிக முதல் - மந்திரி மொஹ்சின் நக்வி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சையது மொஹ்சின் ரசா நக்வி 3 வருட காலத்திற்கு இந்த பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 2022 முதல் வாரிய விவகாரங்களை நடத்தி வந்த இடைக்கால நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் கடந்த 4-ம் தேதி முடிவடைந்ததை அடுத்து தற்போது கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சையது மொஹ்சின் ரசா நக்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் மிகவும் பெருமையும், பணிவும் அடைகிறேன். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் நன்றி கூறுகிறேன்.

    நாட்டில் விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதற்கும், பாகிஸ்தானில் கிரிக்கெட் நிர்வாகத்தில் நிபுணத்துவத்தை கொண்டு வருவதற்கும் நான் முழுமையாக கடமைப்பட்டுள்ளேன்.

    இவ்வாறு மொஹ்சின் நக்வி கூறினார்.

    ×