search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Morning Consult"

    • உலக தலைவர்களில் 69 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபசுக்கு 2-வது இடத்தில் உள்ளார்.

    புதுடெல்லி:

    உலக அளவில் புகழ்பெற்ற தலைவர்கள் குறித்த கருத்துக்கணிப்பை மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

    இந்நிலையில், மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை சமீபத்தில் நடத்தியது.

    இதில், பிரபலமான உலக தலைவர்களில் 69 சதவீத ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    இந்திய பிரதமர் மோடிக்கு 69 சதவீதம் பேர் ஆதரவு அளித்திருந்தனர். மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபசுக்கு 63 சதவீதம் பேர் ஆதரவளித்ததால் 2-ம் இடம் பிடித்தார்.

    அர்ஜென்டினா அதிபர் ஜாவிர் மிலே 60 சதவீதம் பேர் 3-ம் இடத்திலும், சுவிட்சர்லாந்தின் வையோலா அம்ஜெர்ட் 52 சதவீதத்துடன் 4-ம் இடத்திலும் உள்ளார்.

    அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் 47 சதவீதத்துடன் 5வது இடத்திலும், பிரிட்டன் பிரதமர் கெய்ரி ஸ்ட்ராமர் 45 சதவீதத்துடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் 45 சதவீதத்துடன் 7-ம் இடத்திலும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனேசி 42 சதவீதத்துடன் 8-ம் இடத்திலும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 40 சதவீதத்துடன் 9-ம் இடத்திலும், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி 40 சதவீதத்துடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.

    கடந்த ஆண்டும் பிரதமர் மோடி முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகின் பிரபல தலைவர்களில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
    • ஏற்கனவே நடத்திய கருத்துக் கணிப்புகளிலும் பிரதமர் மோடி முதலிடம் பிடித்திருந்தார்.

    புதுடெல்லி:

    உலகளவில் புகழ்பெற்ற தலைவர்கள் குறித்த கருத்துக் கணிப்பை மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

    இந்நிலையில், மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை கடந்த ஜனவரி 30-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை ஒரு வார காலம் நடத்தியது.

    இதில் இந்திய பிரதமர் மோடிக்கு 78 சதவீதம் பேர் ஆதரவு அளித்திருந்தனர். மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபசுக்கு 65 சதவீதம் பேர் ஆதரவளித்ததால் 2-ம் இடம் பிடித்தார்.

    அர்ஜென்டினா அதிபர் ஜாவிர் மிலே 63 சதவீதம் பேர் 3-ம் இடத்திலும், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் 52 சதவீதத்துடன் 4-ம் இடத்திலும், சுவிட்சர்லாந்தின் வையோலா அம்ஜெர்ட் 51 சதவீதத்துடன் 5-ம் இடத்திலும் உள்ளார்.

    பிரேசில் அதிபர் டி சில்வா 6-ம் இடத்திலும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனேசி 7-ம் இடத்திலும், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி 8-ம் இடத்திலும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 9-ம் இடத்திலும், பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரு 10-ம் இடத்திலும் உள்ளார்.

    • உலகின் பிரபல தலைவர்களில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
    • ஏற்கனவே நடத்திய கருத்துக் கணிப்புகளிலும் பிரதமர் மோடி முதலிடம் பிடித்திருந்தார்.

    புதுடெல்லி:

    உலகின் மிக பிரபலமான தலைவர்களின் பட்டியலை 'தி மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

    தி மார்னிங் கன்சல்ட் தகவலின்படி உலகில் மிக பிரபலமான தலைவர்கள் தரவரிசையில் பிரதமர் மோடிக்கு 76 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 2வது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூரஸ் மானுவல் லோபஸ் 66 சதவீதம், சுவிட்சர்லாந்து அதிபர் அலெய்ன் பெர்சட் 58 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    4வது இடத்தில் பிரேசில் அதிபர் லுாலா டி சில்வா 49 சதவீதத்துடனும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40 சதவீதத்துடன் 7-வது இடத்திலும் நீடிக்கிறார்.

    கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பிலும் பிரதமர் மோடி முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • உலகின் பிரபல தலைவர்களில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் வகித்து வருகிறார்.
    • ஏற்கனவே நடத்திய கருத்துக்கணிப்புகளிலும் பிரதமர் மோடி முதலிடம் பிடித்திருந்தார்.

    புதுடெல்லி:

    உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலை 'தி மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

    தி மார்னிங் போஸ்ட் தகவலின் படி உலகில் மிக பிரபலமான தலைவர்கள் தரவரிசையில் பிரதமர் மோடிக்கு 76 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 2வது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூரஸ் மானுவல் லோபஸ் 61 சதவீதம், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ் 55 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    4-வது இடத்தில் இத்தாலி பிரதமர் மெலோனி 49 சதவீதம், 5-வது இடத்தில் பிரேசில் அதிபர் லுாலா டி சில்வா 49 சதவீதத்துடன் உள்ளார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 41 சதவீதத்துடன் 6வது இடத்தில் நீடிக்கிறார். பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் 34 சதவீத ஆதரவுடன் 10-வது இடத்தில் உள்ளார்.

    கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்திய கருத்துக்கணிப்பிலும் பிரதமர் மோடி முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • உலகின் பிரபல தலைவர்களில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார்.
    • கடந்த ஆண்டு நவம்பர், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்திய கருத்துக்கணிப்பிலும் பிரதமர் மோடி முதலிடம் பிடித்திருந்தார்.

    புதுடெல்லி:

    உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலை 'தி மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

    தி மார்னிங் போஸ்ட் தகவலின் படி உலகில் மிக பிரபலமான தலைவர்கள் தரவரிசையில் பிரதமர் மோடிக்கு 75 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    2வது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூரஸ் மானுவல் லோபஸ் 63 சதவீதம், 3வது இடத்தில் இத்தாலி பிரதமர் மரியோ டிராஹி 54 சதவீதம், 4வது இடத்தில் பிரேசில் அதிபர் போல்சனரோ 42 சதவீதம், 5வது இடத்தில் அமெரிக்க அதிபர் பைடன் 41 சதவீதம் பேர் ஆதரவு

    தெரிவித்துள்ளனர்.

    பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 25 சதவீத ஆதரவுடன் 10வது இடத்தில் உள்ளார்.

    கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    உலக தலைவர்கள் தரவரிசை தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் வெளியான பட்டியலிலும் பிரதமர் மோடி 70 சதவீத ஆதரவு பெற்றிருந்தார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவிய தலைமைத்துவ அங்கீகார மதிப்பீட்டாளரான மார்னிங் கன்சல்ட் நிறுவனம், உலக நாடுகளின் அரசியல் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு வாராந்திர அடிப்படையில் தலைவர்களை மதிப்பிட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் எடுக்கப்படும் ஆய்வுகள் மூலம் இந்த மதிப்பீடு வெளியிடப்படுகிறது.

    இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய 13 நாடுகளின் தலைவர்களுக்கான அங்கீகார மதிப்பீட்டு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது.

    இந்நிலையில், கடந்த 4-ம் தேதி நிலவரத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் 70 சதவீத ஆதரவு பெற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

    மெக்சிகோ, இத்தாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டுத் தலைவர்களை பின்னுக்குத் தள்ளி பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.

    உலக தலைவர்கள் தரவரிசையில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதற்கு பா.ஜ.க. தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்தப் பட்டியலில் பிற முக்கிய தலைவர்களான மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடார் (66 சதவீதம்), இத்தாலி பிரதமர் மரியோ டிராகி (58 சதவீதம்), ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் (54 சதவீதம்), ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் (47 சதவீதம்), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (44 சதவீதம்), கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (43 சதவீதம்), இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (40 சதவீதம்) இடம்பிடித்துள்ளனர்.

    ×