search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motor cycles seized"

    சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசில் ஈடுபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
    ராயபுரம்:

    சென்னை மெரினா கடற்கரை சாலை மற்றும் ஈ.சி.ஆர். சாலைகளில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி ‘பைக்ரேஸ்’ நடந்து வருகிறது.

    இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து பைக்ரேசில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் மெரினா கடற்கரை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட வாலிபர்கள் சிக்கி உள்ளனர். மெரினா கடற்கரை சாலையில் நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிவேகத்தில் மோட்டார் சைக்கிள்கள் சீறிப்பாய்ந்தன. அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பைக்ரேசில் ஈடுபட்டது தெரிந்தது.

    இதையடுத்து 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசில் ஈடுபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    திருச்செந்தூர் பகுதியில் பைக் கொள்ளையில் ஈடுபட்டவனை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், தலைமை காவலர்கள் பாஸ்கர், மகேஸ்வரன் ஆகியோர் வீரபாண்டியன்பட்டணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் தலைவன்வடலியை சேர்ந்த பாஸ்கர் (வயது 29) என்பதும், இவர் ஆறுமுகநேரி கானியாளன் தெருவை சேர்ந்த துரைராஜ், வீரபாண்டியன் பட்டனத்தைச் சேர்ந்த சிவபெருமாள், திருச்செந்தூர் கல்யாண சுந்தரவிநாயகர் கோவில் தெருவில் உள்ள அம்மாள்தங்கம் மகன் ஆகிய 3 பேர் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பாஸ்கரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×