என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » motorists are suffering
நீங்கள் தேடியது "Motorists are suffering"
போச்சம்பள்ளி பகுதிகளில் தொடர் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் காலை 8 மணிவரை முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஓட்டி செல்கின்றனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர் பனியாக உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள அரசம்பட்டி, புலியூர், மஞ்சமேடு, பண்ணந்தூர், பாரூர், பாப்பானூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது.
எப்போதும் லேசன பனிப் பொழிவு ஏற்படும் இப்பகுதிகளில், தற்போது அதிகஅளவு பனிப் பொழிவு நாலுக்கு நாள் உள்ளது. கடந்த 4 தினங்களாக தொடர் பனிப் பொழிவு வழக்கத்திரற்கு மாறாக ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் மட்டுமே தொடர் பனிப் பொழிவு ஏற்படும் நிலையில், இப்பகுதிகளில் அதிகாலை முதலே பனிப் பொழிவால் வாகன ஓட்டிகள் ரோடு தெரியாமல் வாகனத்தை ஆமைபோல் இயக்குகின்றனர். காலை 8 மணிவரை முகப்பு விளக்கு எரிய விட்டவாறு ஓட்டி செல்கின்றனர்.
மேலும், வீடுகளில் வைக்கப்பட்டுள்ள ரோஜா போன்ற பூக்கள் கருக தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சூளகிரி பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனி பொழிவினால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
வேப்பனஹள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக கடும் பனி பொழிவு இரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை நீடித்தது. இதனால் வீடுகளின் ஜன்னல், கதவுகள் மூடப்பட்டு இருந்தும் பெரும் பனியாக உணரப்பட்டது. வாகனங்கள் மீது பனி துளி விழுந்து, வாகனங்களை கழுவியதுபோல இருந்தது. வாகன ஓட்டிகள் சொட்டர் - குல்லா அணிந்தவாறு வாகனங்களை ஓட்டினர்.
தேசிய நெடுஞ்சாலையில் பத்து அடிக்கு முன்பு என்ன வருகிறது என்பது தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர். பனி அதிகமாக கொட்டுவதால் விவசாயம் பாதிப்புக்குள்ளாகும், பொதுமக்களுக்கு பல்வேறு நோய் ஏற்படும் என்ற அச்சத்துடன் உள்ளனர்.
சூளகிரி பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனி பொழிவினால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
×

X