என் மலர்
நீங்கள் தேடியது "Movement of trains"
- பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் வருகிற 18-ந்தேதி மட்டும் பையனூர் வரை இயக்கப்படும்.
- கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு அகல்யாநகரி எக்ஸ்பிரஸ் (எண்:22646) வாரந்தோறும் இயக்கப்படுகிறது.
திருப்பூர்:
நீண்ட தூரம் பயணிக்க கூடிய அகல்யாநகரி, ஸ்வர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ெரயில்கள், பயணிகள் பாதுகாப்பு கருதி எல்.எச்.பி., பெட்டிகள் கொண்டதாக மாற்றப்படுகிறது.கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு அகல்யாநகரி எக்ஸ்பிரஸ் (எண்:22646) வாரந்தோறும் இயக்கப்படுகிறது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி , நிஜாமுதீனுக்கு ஸ்வர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் (எண்:12643) வாராந்திர சிறப்பு ெரயிலாக இயக்கப்படுகிறது.கொச்சுவேலி ெரயிலில் வருகிற செப்டம்பர் 9ம் தேதி முதலும், நிஜாமுதீன் ெரயிலில் செப்டம்பர் 5-ந்தேதி முதலும் எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
இது குறித்து ெரயில்வே பொறியியல் பிரிவினர் கூறியதாவது:-
அகல்யா நகரி, ஸ்வர்ண ஜெயந்தி ெரயில்கள் நீண்ட தூரம் பயணிக்க கூடிய ெரயில்களின் பட்டியலில் உள்ளதால் பாதுகாப்பு, பயணிகள் சவுகரியம் கருதி எல்.எச்.பி., பெட்டிகள் கொண்டதாக மாற்றப்படுகிறது.நவீன தொழில்நுட்பத்தை கொண்ட எல்.எச்.பி., பெட்டிகளை பொருத்துவதால் அதிவேகத்தில் ெரயில்கள் பயணிக்கும் போதும் அதிர்வுகள் பெரிய அளவில் உணரப்படாது. கூடுதல் இடவசதி, பயோடாய்லெட் வசதி கொண்ட இப்பெட்டிகள் விபத்தின் போது எளிதில் கவிழாத வகையில் பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
கோவை- மங்களூர் இடையே இயக்கப்படும் ெரயில், பராமரிப்பு பணி காரணமாக பகுதியாக ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ெரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி கோவை - மங்களூர் (22610) ெரயில், காலை 6 மணிக்கு புறப்படுகிறது. பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் வருகிற 18-ந்தேதி மட்டும் பையனூர் வரை இயக்கப்படும்.
அதே போல், கோவை - மங்களூர் (16323) ெரயில், கோவையிலிருந்து காலை 7:50 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் 18-ந் தேதி சர்வாத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
அரக்கோணம்- காட்பாடி ெரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ெரயில் தண்டவாளத்தில் பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், ெரயில் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ெரயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
கோவை சந்திப்பு - எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 12680), கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். அதே போன்று சென்னை சென்ட்ரல் ெரயில் நிலையத்தில் இருந்து கோவை சந்திப்பு வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 12679) காட்பாடியில் இருந்து தான், கோவை புறப்படும்.இந்த மாற்றம் நாளை 9 மற்றும் 10 -ந்தேதிகளில் அமலில் இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.