என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Moving stairs"
- சாதாரண படிக்கட்டில் ஏற முடியாதவர்கள் தான் பெரும்பாலும் இந்த நகரும் படிக்கட்டுகளை பயன்படுத்துவார்கள்.
- ரெயில்வே ஊழியர்கள் நகரும் படிக்கட்டுகளின் இயக்கத்தை அவ்வப்போது நிறுத்தாமல் இருக்க வேண்டும்.
தென் மாவட்ட ரெயில்கள் அதிகம் வந்து செல்லும் முக்கிய ரெயில் நிலையமாக சென்னை எழும்பூர் ரெயில் முனையம் திகழ்கிறது. இங்கு 11 நடைமேடைகள் உள்ளன. இதில் 1 முதல் 3 நடைமேடைகள் எழும்பூர் ரெயில் நிலையத்தின் தெற்கு ஓரத்தில் அமைந்துள்ளன. 4-வது நடைமேடையே எழும்பூர் ரெயில் நிலையத்தின் பிரதான நடைமேடையாக உள்ளது.
எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடைகளில் இருந்து ரெயில் நிலையத்தின் முன்பகுதி மற்றும் பின் பகுதி செல்வதற்கு என 2 பிரதான நடைமேம்பாலங்கள் உள்ளன. இந்த 2 நடைமேம்பாலங்களையும் சென்றடையும் வகையில் ஒவ்வொரு நடைமேடையில் இருந்தும் படிக்கட்டுகள் உள்ளன. நடைமேடைகளில் உள்ள இந்த படிக்கட்டுகளின் ஒரு பகுதி, நகரும் படிக்கட்டுகளாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், பெரும்பாலான பயணிகள் நடைமேடை 4-ல் உள்ள நகரும் படிக்கட்டின் வழியாக நடைமேம்பாலத்தில் ஏறியே 5 முதல் 11 வரையிலான நடைமேடைகளுக்கு செல்வது வழக்கம். நடைமேடை 4-ன் அருகில் லிப்ட் வசதி இருந்தாலும் அதில் குறைந்த அளவிலான பயணிகளே ஏறிச் செல்லமுடியும். நகரும் படிக்கட்டு அளவிற்கு லிப்ட்டில் பயணிகள் ஏறி செல்ல முடியாது. அதே நேரத்தில் ரெயில் நிலையத்தின் மேற்கு பகுதியில், வெளியில் இருந்து நேரடியாக பயணிகள் நடைமேம்பாலத்தில் ஏறும் வகையிலும், இறங்கும் வகையிலும் 2 நகரும் படிக்கட்டுகள் உள்ளன.
இந்த நகரும் படிக்கட்டுகளை பயணிகள் நேரடியாக பயன்படுத்த முடியாத வகையில் இரும்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்ட உள்ளதால் பயணிகள் சற்று சுற்றி வந்தே அதனை பயன்படுத்தும் நிலை உள்ளது. இருப்பினும் அதிக அளவிலான மக்கள் இந்த நகரும் படிக்கட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த பிரதான நகரும் படிக்கட்டுகள் பெரும்பாலான நேரங்களில் நகராமல் நிற்கும் நிலையே காணப்படுகிறது.
இதனால், பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தாங்கள் பயணிக்க இருக்கும் ரெயில்களின் புறப்பாடு நேரத்தின் மிக குறுகிய கால அளவில் வேக வேகமாக வரும் பயணிகள் நகரும் படிக்கட்டுகள் வழியாக விரைந்து சென்று தங்கள் ரெயில்களை பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் அங்கு வரும் போது, நகரும் படிக்கட்டுகள் நகராமல் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அதன்பிறகு, வேறு வழியின்றி தாங்கள் கொண்டு வந்த மூட்டை முடிச்சுகளுடன் நகராமல் நிற்கும் அந்த நகரும் படிக்கட்டுகள் வழியாக மூச்சிறைக்க ஏறி தங்கள் நடைமேடைகளுக்கு ஓடுகின்றனர். இதனால், சில நேரங்களில் ரெயில்களை தவற விடும் நிகழ்வுகளும் நடக்கிறது.
இதுகுறித்து தாம்பரத்தை சேர்ந்த சுனிதா என்ற பெண் பயணி கூறியதாவது:-
சாதாரண படிக்கட்டில் ஏற முடியாதவர்கள் தான் பெரும்பாலும் இந்த நகரும் படிக்கட்டுகளை பயன்படுத்துவார்கள். மக்களின் வசதிக்காக ரெயில்வே நிர்வாகம் இத்தகைய நகரும் படிக்கட்டுகளை அமைத்து கொடுத்த பிறகும், அதனை இயக்கும் ஊழியர்களின் மெத்தனத்தால், நகராமல் நிற்கும் இந்த படிக்கட்டுகள் வழியாக நடந்தே ஏற வேண்டி உள்ளது. இது என் போன்றவர்களுக்கே கால்கள் கடுக்கிறது. மூச்சு இறைக்கிறது. அப்படியானால், இன்னும் வயதானவர்கள் என்ன பாடுபடுவார்கள்.
இது தவிர, வெளியூர் செல்லும் பயணிகள் தங்களுடன் மூட்டை முடிச்சுகளையும் அதிக அளவில் கொண்டு வருவார்கள். அவர்கள் தங்களின் உடைமைகளுடன் இந்த படிக்கட்டுகளில் ஏறுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. எனவே, ரெயில்வே ஊழியர்கள் நகரும் படிக்கட்டுகளின் இயக்கத்தை அவ்வப்போது நிறுத்தாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போன்று, 5 முதல் 9-வது வரையிலான நடைமேடைகளில் உள்ள நகரும் படிக்கட்டுகளும் பல நேரங்களில் நகராமல்தான் நிற்கின்றன. இது சில சமயங்களில், பயணிகள் தங்கள் ரெயில்கள் வழக்கமாக நிற்கும் நடைமேடையில் வந்து ரெயில்களுக்காக காத்து இருப்பார்கள். ஆனால், அன்று பார்த்து ஏதோ தொழில்நுட்ப காரணங்களால் அந்த ரெயிலானது புறப்பாடு நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் ரெயில் நிலையத்திற்குள் கொண்டு வரப்பட்டு வழக்கமான நடைமேடையில் இல்லாமல் 2, 3, நடைமேடைகள் தாண்டி நிறுத்தப்படும்.
அதுபோன்ற சமயங்களில் வழக்கமான நடைமேடையில் காத்திருக்கும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நகரும் படிக்கட்டுகளானது நகராமல் இருப்பது கடும் அவஸ்தையை அளிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
இது ஒருபுறம் இருக்க 10-வது நடைமேடையில் உள்ள நகரும் படிக்கட்டும், ரெயில் நிலையத்தின் பின்பகுதியில் கிழக்குப்பகுதி நடைமேம்பாலத்திற்கு செல்வதற்கான நகரும் படிக்கெட்டும் நீண்ட நாட்களாக இயங்காமல் பராமரிப்பு இன்றி கிடப்பதாலும் பயணிகள் கடும் அவதியை அடைகின்றனர். எனவே, இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே நிர்வாகமானது இதில் தனிக்கவனம் செலுத்தி நகரும் படிக்கட்டுகளை முழுமையாக இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பெரும்பாலான ரெயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
- பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டது
- பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையத்தின் 6-வது மற்றும் 7-வது நடை மேடையில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தானி யங்கி நகரும் படிக்கட்டுகள் பல மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டு வராமலேயே காட்சி பொருளாக வைத் துள்ளனர்.
கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து இதனை பயணிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்