search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbai Cricket Association"

    • 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
    • முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    மும்பை:

    மும்பை - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை தனது முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சர்பராஸ் கான் 222 ரன் எடுத்தார்.

    இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 121 ரன் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 5-வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

    போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த மும்பை அணி இரானி கோப்பையை வென்றது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், 27 ஆண்டுக்கு பிறகு இரானி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்த மும்பை அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

    மும்பை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து சமீர் திக்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். #MCA
    இந்தியாவின் தலைசிறந்த உள்ளூர் அணிகளில் ஒன்று மும்பை. ரஞ்சி டிராபி தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணி கீப்பரான சமீர் திக்கே இருந்து வந்தார். ஒரு சீசன் மட்டுமே பணிபுரிந்த இவர், தனது சொந்த வேலைக் காரணமாக பதவியை ராஜினாமா செய்துள்ளார்.



    இந்திய அணிக்காக 6 டெஸ்ட் மற்றும் 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சமீர் திக்கே ஒப்பந்தம் குறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் கூறுகையில் ‘‘நாங்கள் அவருடன் ஒரு வருடத்திற்குதான் ஒப்பந்தம் போட்டிருந்தோம். அவரிடம் பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டோம். ஆனால், குடும்ப சூழ்நிலைக் காரணமாக நீட்டிக்க விரும்பவில்லை என்றார். நாங்கள் விரைவில் புதிய பயிற்சியாளரை நியமிக்க இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.
    ×