search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbai High Court"

    • எனக்கும், எனது கணவருக்கும் வாடகை தாய் மூலம் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரட்டை பெண் குழந்தை பிறந்தன.
    • குழந்தைகளை பார்க்க என்னை அனுமதிக்க வேண்டும்.

    மும்பை:

    மும்பை ஐகோர்ட்டில் 42 வயது பெண் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

    எனக்கும், எனது கணவருக்கும் வாடகை தாய் மூலம் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரட்டை பெண் குழந்தை பிறந்தன. அந்த குழந்தைகள் பிறக்க எனது தங்கை கருமுட்டையை தானமாக வழங்கியிருந்தார். தற்போது எனது கணவரும், தங்கையும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

    மேலும் எனது தங்கை கருமுட்டையை தானமாக வழங்கியதால் எனக்கு குழந்தைகள் மீது உாிமை இல்லை என கூறுகின்றனர்.

    குழந்தைகளை பார்க்க அவர்கள் என்னை விடுவதில்லை. எனவே, குழந்தைகளை பார்க்க என்னை அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    மனுவை நீதிபதி மிலிந்த் ஜாதவ் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விந்தணு அல்லது கருமுட்டையை தானமாக கொடுத்தவர் குழந்தையின் மீது சட்டப்படி உரிமை கோரவோ அல்லது குழந்தையின் பெற்றோர் எனவோ உரிமை கோர முடியாது என்றார். மேலும் நீதிபதி "இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு போடப்பட்ட வாடகைத்தாய் ஒப்பந்தத்தில் மனுதாரரும், அவரது கணவரும் தான் பெற்றோர் என கையெழுத்திட்டு உள்ளனர். எனவே வாடகைத்தாய் மூலம் பிறந்த இரட்டை குழந்தைகளின் தாய் மனுதாரர் என்பது தெளிவாக தெரிகிறது. கருமுட்டையை தானமாக வழங்கிய மனுதாரரின் தங்கைக்கு குழந்தையின் தாய் என உரிமைகோர எந்த சட்ட உரிமையும் இல்லை" எனக்கூறினார்.

    மனுதாக்கல் செய்த பெண்ணை வார இறுதிநாளில் 3 மணிநேரம் இரட்டை குழந்தைகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என அவரது கணவருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்தியாவுக்கு கொண்டு வந்து என்னை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று டி.வி. விவாதத்தில் பேசி வருவதால், என் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யுங்கள் என்று நகை வியாபாரி மெகுல் சோக்சி மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #MehulChoksi
    மும்பை:

    பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றி, ரூ.12 ஆயிரத்து 636 கோடி மோசடி செய்ததாக பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவருடைய உறவினரும், கீதாஞ்சலி குழும நிர்வாக இயக்குனருமான மெகுல் சோக்சி உள்ளிட்டோர் மீது சி.பிஐ. வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, நிரவ் மோடி, மெகுல் சோக்சி இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டனர். மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.

    அவற்றின் அடிப்படையில், கடந்த மே 22-ந் தேதி, மும்பை தனிக்கோர்ட்டு, மெகுல் சோக்சிக்கு எதிராக ‘பிடிவாரண்டு’ பிறப்பித்தது. அதை ரத்து செய்யக்கோரி, கடந்த ஜூன் மாதம் ஏற்கனவே அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், மெகுல் சோக்சி சார்பில் அவருடைய வக்கீல் சஞ்சய் அப்பாட், நேற்று மும்பை தனிக்கோர்ட்டில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-


    தேசிய செய்தி தொலைக்காட்சி ஒன்றில் சமீபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சி பார்த்தேன். அதில், தொலைபேசி மூலம் பேசிய 2 பேர், “தனிப்படை மூலம் என்னை பிடித்து இந்தியாவுக்கு கொண்டு வந்து சுட்டுக்கொல்ல வேண்டும். அப்போதுதான், இனிமேல் வங்கி மோசடிகளை நிறுத்த முடியும்” என்று பேசினர்.

    அதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். நிகழ்ச்சி தொகுப்பாளரும், விவாதத்தில் பங்கேற்றவர்களும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சிரித்தபடி இருந்தனர். இதனால், அவர்களும் அக்கருத்தை ஆதரிப்பது போல் உள்ளது.

    ஆகவே, இந்தியாவுக்கு கொண்டு சென்றால், என்னை சுட்டுக்கொல்லவோ, கும்பல் கொலை செய்யவோ வாய்ப்புள்ளது. இதை கருத்திற்கொண்டு, எனக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மெகுல் சோக்சி கூறியுள்ளார்.

    இதற்கு சி.பி.ஐ. பதில் அளிக்குமாறு கூறிய கோர்ட்டு, அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.  #pnbfraudcase #MehulChoksi #NiravModi
    ×