என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » murli manohar joshi
நீங்கள் தேடியது "murli manohar joshi"
- பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது.
- அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, பாரத ரத்னா விருது குறித்து அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரத ரத்னா விருது எனது லட்சியங்களுக்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை. இன்று எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை மிகப் பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து, பாரத ரத்னா விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை தேசிய தலைவர் அமித் ஷா இன்று திடீரென்று சந்தித்தது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #AmitShah #AmitShahmet #AmitShahmetJoshi #AmitShahmetAdvani
புதுடெல்லி:
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பளிக்கவில்லை. அத்வானி தற்போது எம்.பி.யாக பதவி வகிக்கும் குஜராத் மாநிலம், காந்தி நகர் தொகுதியில் இந்த முறை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார்.
இதேபோல், உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் தொகுதி எம்.பி.யாக பதவி வகிக்கும் முரளி மனோகர் ஜோஷிக்கு பதிலாக சத்யதேவ் பச்சவுரி நிறுத்தப்பட்டுள்ளார்.
பாஜக தலைவராக அமித் ஷா பொறுப்பேற்ற பின்னர் ஆரம்பகாலத்தில் இருந்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப்படுவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது.
இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை சந்தேகிக்கும் எதிர்க்கட்சியினர் நாட்டு நலனுக்கு எதிரானவர்கள் என்று பிரதமர் மோடி பேசி வருகிறார். அவரது கருத்துக்கு மாறுபட்ட வகையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி எதிர்கருத்து ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.
கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை தேச விரோதிகள் என்று சித்தரிக்க கூடாது என்னும் வகையில் அவர் தெரிவித்த கருத்து பாஜகவில் நிலவிவரும் பனிப்போரின் உச்சகட்டமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை அவர்களின் இல்லங்களை தேடிச்சென்று தேசிய தலைவர் அமித் ஷா இன்று மாலை சந்தித்தார்.
இந்த சந்திப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #AmitShah #AmitShahmet #AmitShahmetJoshi #AmitShahmetAdvani
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X