என் மலர்
நீங்கள் தேடியது "Music Album"
- இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.
- கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம்.
தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் ஷாம்.
தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, 'வரும் வெற்றி' என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.
SIR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார்.
அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார்.
கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம்.
பிரபலமான டி சீரிஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிட்டுள்ளது.
- மதன் கார்க்கி ‘முடிவிலி’ என்னும் இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.
- முடிவிலி ஆல்பத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
கவிஞர் வைரமுத்து மகனான மதன் கார்க்கி திரை உலகில் பாடல் ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகங்கள் கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.
பல படங்களுக்கு பாடல்களை எழுதி வரும் மதன் கார்க்கி தற்போது 'முடிவிலி' என்னும் புதிய இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இது பற்றி மதன் கார்க்கி கூறியதாவது:-
நான் உருவாக்கியுள்ள முடிவிலி ஆல்பத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. காதல் சம்பந்தப்பட்ட பாடல்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தில் கிராமிய காதல், நகர காதல் என முழுவதும் காதலை மையமாகக் கொண்டு ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆல்பத்திற்கு நானே இசையமைத்துள்ளேன். ஆல்பத்தில் சிறப்பு அம்சமாக பாடலை பாடகர்கள் பாடவில்லை. முழுவதும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் 10 பாடல்களையும் உருவாக்கியுள்ளேன். தமிழகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு இசை ஆல்பம் முழுவதும் உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
வருகிற 26-ந் தேதி ஸ்பார்ட்டி பைவ் மற்றும் சில வலைதளங்களில் இந்த இசை ஆல்பம் வெளியாகிறது. என் தந்தை வைரமுத்து ஆல்பத்தை கேட்டு விட்டு நன்றாக பாராட்டினார்.
மேலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தி பாடல்களை உருவாக்கி இருப்பது பற்றி வியந்து கேட்டார்.
ஏ.ஐ. தொழில் நுட்பத்தால் ஆபத்து கிடையாது. கிராம போன் வரும்போது பாடகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
எதிர்ப்புகளை மீறி கிராமபோன் அறிமுகமானது. ஏ.ஐ. தொழில்நுட்பம் தவிர்க்க முடியாதது. ஆனால் எல்லாவற்றையும் அதில் பண்ணி விட முடியாது. அதற்கும் மனிதன் தேவைப்படுகிறான்.
மனிதனின் கட்டளைப்படி தான் ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் எதையும் உருவாக்க முடியும். புதிதாக அனிமேஷன் கிராபிக்ஸ் பணிகளுக்கு அடையாறில் 'பா' என்ற பெயரில் ஸ்டுடியோ தொடங்கியுள்ளேன்.
திரைப்படங்களுக்கான கிராபிக்ஸ் பணிகள் இங்கு நடைபெறுகிறது. புராண கதையில் இந்தியில் உருவாகும் கர்ணா படத்துக்கு வசனம் எழுதியுள்ளேன். படத்தில் சூர்யா, ஜான்வி கபூர் இணைந்து நடிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






