search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muthukumaraswamy"

    • அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடு பழனி.
    • இன்று முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற தைப்பூசத்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு தேவையான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

    தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில் தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி புறப்பாடு நடந்து வருகிறது.

    6-ம் நாளான இன்று இரவு 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை முதல் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் பழனியை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், மேளதாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக வருவதால் பழனி நகரின் அனைத்து சாலைகளும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது.

    • பெருமை பெற்று விளங்கும் வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.
    • பாறையில் உள்ள முருகப்பெருமானின் திருப்பாதத்துக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.

    கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் கோவை மாநகரில் இருந்து தெற்கே

    சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது கிணத்துக்கடவு.

    இந்த ஊரின் நடுவே உள்ள பொன்மலையில் மூர்த்தி, தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும்

    பெருமை பெற்று விளங்கும் வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.

    ஞானப்பழத்திற்காக பெற்றோரான சிவ பெருமான் உமையாளுடன் கோபித்துக் கொண்டு

    பழனியில் குடிகொண்ட முத்துக்குமார சுவாமி இந்தபொன்மலையில் பாதம் பதித்ததாக இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.

    எனவே இங்கு மூலவரான வேலாயுத சுவாமிக்கு பூஜை நடத்துவதற்கு முன்பாக,

    பாறையில் உள்ள முருகப்பெருமானின் திருப்பாதத்துக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.

    திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில்

    தனி மண்டபத்தில் உள்ள முருகப் பெருமானின் திருப்பாதங்களை தரிசித்தால்,

    விரைவில் விருப்பங்கள் நிறைவேறும் என்கிறார்கள்.

    மேலும் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.

    ×