search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mylapore mundakanni amman"

    நாகதோஷம் நீங்குவதற்கு தமிழ்நாட்டிலேயே சக்திவாய்ந்த தலமாக விளங்கிவரும் முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயில் சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கிறது.
    நாகதோஷம் நீங்குவதற்கு தமிழ்நாட்டிலேயே சக்திவாய்ந்த தலமாக விளங்கிவரும் முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயில் சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கிறது. சென்னைப் பட்டணம் தோன்றுவதற்கு சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த அம்மன் அவதரித்ததாக ஆலய வரலாறு கூறுகிறது. ஆனால், அதையும் தாண்டி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியிருக்கக் கூடும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த ஆலயத்தின் மகிமையே, அம்மன் சுயம்புவாக வடிவெடுத்து இருப்பதுதான்.

    நாகதோஷம் இருப்பவர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வழிப்பட்டு, நாகக்கன்னி சிலை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாட்களுக்கு நீரிலேயே நாகக்கன்னியை வைத்திருந்து, அதை ஆலயத்தின் முகப்பில் இருக்கிற மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு பாலாபிஷேகமும் வழிபாடும் நடத்தி வழிபடுவது இந்த ஆலயத்தின் விசேஷம். அதேபோல ஆடி மாதம் அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் காப்பு மற்றும் அன்னாபிஷேகம் செய்வதும் இங்கு விசேஷம்.

    ஆடிப்பூரத்துக்கு 1008 மலர் கூடைகள் எடுத்துவந்து அம்மனுக்கு பூச்சுடுதல் நடக்கும். நவராத்தி 10 நாளும் உற்சவ புறபாடு இருக்கும். 10 நாளும் 10 அலங்காரத்தில் அம்மன் காட்சி தருவாள். எல்லா விசேஷ நாளிலும் அம்மனுக்கு தங்கக் கவசம் சாற்றி வழிபாடு நடக்கும்.
    ×