என் மலர்
நீங்கள் தேடியது "nanjil sambath"
- நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டார்.
- பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு பொறுப்பு வழங்கி விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாஞ்சில் சம்பத்திற்கு தவெகவின் பரப்புரைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர், சிறந்த பேச்சாளர், அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர். அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்கள், தம்மைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டுள்ளார்.
மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்கள், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவர், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார். கழக நிர்வாகிகளும் தோழர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பெரியாரின்,அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.
- டெல்லியில் ஆட்சியிலிருக்கும் திமிரில் இன்றைக்கு சில ஆட்டுக்குட்டிகள் கத்துகின்றன.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், பெரியார், அண்ணா, ஆகியோரது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பெரியார் சுப்பிரமணி தலைமை வகித்தார். அங்ககுமார், குமாரவேல், முன்னிலை வகித்தனர். திருமூர்த்தி வரவேற்றார். இதில் கலந்துகொண்டு நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-
பெரியாரின்,அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.டெல்லியில் ஆட்சியிலிருக்கும் திமிரில் இன்றைக்குச் சில ஆட்டுக்குட்டிகள் கத்துகின்றன.பயந்து நடுங்கும் கட்சியல்ல தி.மு.க. இந்த நாட்டில் நன்றாக உள்ள கட்சியை உடைத்து,அதில் உள்ள குள்ள நரிகளை வைத்து ஆட்சியை பிடிக்கும் பா.ஜ.க.வின் நரித்தனம் தமிழகத்தில் பலிக்காது.இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில அமைப்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மற்றும் மு.சுப்பிரமணியம், காவி.பழனிச்சாமி, சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






