search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "narmada river"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாம்பு பைப்லைனுக்குள் புகுந்து கொண்டதால் மக்கள், அதனுள் நீரை செலுத்தினர்
    • பாம்பின் வாய் மீது தன் வாயை வைத்து அதுல் பலமாக ஊதினார்

    மத்திய பிரதேச மாநிலத்தின் நர்மதா நதிக்கரையை அடுத்து உள்ள நகரம் நர்மதாபுரம்.

    நர்மதாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் ஒரு பாம்பு நுழைந்தது. அது அப்பகுதியில் உள்ள பைப்லைன் ஒன்றில் நுழைந்து விட்டதால், அதனை விரட்ட அங்குள்ள குடியிருப்புவாசிகள் முயன்றனர். ஆனால், உள்ளே சென்ற பாம்பு வெளியே வராததால், பூச்சிகொல்லி மருந்தை நீரில் கலந்து அந்த பைப்லைனில் உள்ளே செலுத்தினர்.

    இதில் மயங்கிய அந்த பாம்பு உள்ளேயே சுருண்டு கிடந்தது. இதை கண்டு செய்வதறியாது திகைத்த மக்கள் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதுல் சர்மா (Atul Sharma) எனும் கான்ஸ்டபிள் அங்கு விரைந்து வந்தார். அவர் அந்த பாம்பின் நிலையை சிறிது நேரம் கூர்ந்து கவனித்தார்.

    பிறகு மெதுவாக அதை கையில் பிடித்து அதன் வாயில் தன் வாயை வைத்து வேகமாக ஊதினார். அவ்வப்போது நீரையும் அதன் மேல் தெளித்தார். சுற்றி நின்று அவரது நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கும் போதே அந்த பாம்பு மெதுவாக நகர ஆரம்பித்தது. விஷத்தன்மையற்றதாக கூறப்படும் அந்த பாம்பு, சிறிது நேரத்தில் அங்கிருந்து ஊர்ந்து சென்றது.

    இதை கண்ட அப்பகுதி மக்கள் அதுல் சர்மாவை மிகவும் பாராட்டினர்.

    இது குறித்து பேசும் போது, இந்த வித்தையை "டிஸ்கவரி" சேனலை பார்த்து கற்று கொண்டதாகவும், இது போல் எண்ணற்ற பாம்புகளை தாம் காப்பாற்றியுள்ளதாகவும், அதுல் தெரிவித்தார்.

    அதுல் இவ்வாறு கூறினாலும், கால்நடை மருத்துவர்கள் அவர் கடைபிடித்த "சிபிஆர்" (Cardiopulmonary Resucitation) எனப்படும் இந்த முறையில் பாம்பை உயிர் பெற செய்ய முடியாது என்றும் இச்சம்பவத்தில் அப்பாம்பிற்கு தானாகவே நினைவு திரும்பியிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2007ல் வெளிவந்த "சிவாஜி" திரைப்படத்தில் இந்த சிகிச்சை முறையை கையாண்டு நடிகர் ரகுவரன் உயிர் மீட்கும் காட்சிகள் பிரபலமாக பேசப்பட்டது. சில நாட்களுக்கு முன் ஒரு குரங்கு இதே முறையில் காப்பாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

    தற்போது அதுலின் இந்த நடவடிக்கை அங்குள்ளவர்களால் படமாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்து மதத்தில், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஷண்மத மார்க்கங்களை நிறுவியவர்
    • ஓம்காரேஷ்வர் நகரில்தான் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஆரம்ப வேதக்கல்வி பயின்றார்

    இந்து மதத்தின் தற்போதைய கட்டமைப்பை உருவாக்கிய இந்து மத குருக்களில் முதன்மையானவர்களாக கருதப்படும் பலரில் ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீமத்வாச்சாரியார் ஆகியோருடன் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஒருவர். இந்துக்களுக்கு வைணவம், சைவம், ஸாக்தம், கவுமாரம், காணாதிபத்யம் மற்றும் சவுரபம் என 6 பிரதான வழிகளில் ஷண்மத வழிபாட்டு மார்க்கங்களை நிறுவியவர்.

    இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் காந்த்வா மாவட்டத்தில் காந்த்வா நகருக்கருகே மந்தாதா பகுதியில் உள்ளது ஓம்காரேஷ்வர் கோவில். இது ஒரு புகழ் பெற்ற இந்து மத சைவ கோயில். இக்கோவில் நர்மதை நதிக்கரை ஓரம் உள்ளது. ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஓம்காரேஷ்வர் நகரில்தான் ஆரம்ப வேதகல்வியை பயின்றார்.

    இப்பகுதியில் உலகெங்கும் உள்ள இந்துக்களால் மதிக்கப்படும் மத குருவான ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் அவர்களுக்கு 108 அடியில் மிக பெரிய சிலை ஒன்று நிறுவப்பட்டு ம.பி. மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகன் அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைத்த முதல்வர், இங்கு முறைப்படி பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.

    அப்போது உரையாற்றிய அவர் கூறியதாவது:

    கலாச்சார ரீதியாக ஸ்ரீ ஆதி குரு சங்கராச்சார்ய மகராஜ் நாட்டை ஒருங்கிணைத்தார். வேதங்களின் சாரம் சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் பரவ தீவிரமாக செயல்பட்டார். நமது நாட்டின் 4 மூலைகளிலும் 4 மடங்களை நிறுவினார். அவரது உயரிய, சிறந்த முயற்சியினால்தான் நாடு இத்தனை ஆண்டுக்காலம் ஒன்றாக, ஒற்றுமையாக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இப்பகுதிக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ம.பி.யின் இந்தோர் நகரிலிருந்து 80 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த இடத்தை அடையலாம்.


    மகாராஷ்டிரா மாநிலத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாபமான உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #NandurbarBoatcapzise
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பர் மாவட்டத்தில் நர்மதை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் படகு சவாரி நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில், நர்மதை ஆற்றில் இன்று சென்ற படகில் சுமார் 60க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். ஆற்றின் நடுவில் சென்றபோது படகு நிலைதடுமாறி கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

    தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 39 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

    காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #NandurbarBoatcapzise
    ×