search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Anti-Doping Agency"

    • அரியானா சட்டசபை தேர்தலில் ஜூலான் தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ள்ளதால் பங்கேற்க முடியவில்லை.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் பதக்க வாய்ப்பு பறிபோனது.

    இதை தொடர்ந்து வினேஷ் போகத் மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது அப்பீல் மனுவும் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

    நாடு திரும்பிய வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் அரியானா சட்டசபை தேர்தலில் ஜூலான் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் வினேஷ் போகத் கடந்த 9-ந் தேதி ஊக்க மருந்து சோதனையில் பங்கேற்கவில்லை.இதனால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    ஆனாலும் ஒரு ஆண்டில் 3 முறைக்கு மேல் ஊக்க மருந்து தடுப்பு சோதனை பங்கேற்காமல் இருந்தால் மட்டுமே விளையாட்டு வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    வினேஷ் போக தற்போது தான் முதல் முறையாக அந்த சோதனையில் பங்கேற்கவில்லை. அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ள்ளதால் பங்கேற்க முடியவில்லை.

    வினேஷ் போகத்தின் தேர்தல் பிரச்சாரத்தை தடுக்கும் விதமாக அவருக்கு இவ்வாறு பிரச்சினை ஏற் படுத்துவதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    • இந்த தடைக்காலத்தில் அவரால் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது.
    • அஞ்சலி தேவி கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தோகா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை அஞ்சலி தேவி சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தால் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் உள்ள ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட சோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில், அஞ்சலி தேவிக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (NADA) உத்தரவிட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் அவரால் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது. இதற்கு முன் அஞ்சலி தேவி கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தோகா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தடகளத்தில் அதிகபட்சமாக 49 பேர் ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளனர்.
    • சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா உள்பட 13 கிரிக்கெட் வீரர்கள் சிகிச்சை பயன்பாடு விலக்கு கேட்டு இருப்பதாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடம் ஊக்க மருந்து சோதனை மேற்கொண்டு வருகிறது.

    கடந்த 2022 ஏப்ரல் மாதம் முதல் 2023 மார்ச் வரை இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளில் 142 பேர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 4342 விளையாட்டு வீரர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. போட்டியில் பங்கேற்ற 2596 பேரிடமும், போட்டிக்கு வெளியே 1746 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டது.

    தடகளத்தில் அதிகபட்சமாக 49 பேர் ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக பளுதூக்குதலில் 22 பேரும் மல்யுத்தத்தில் 17 பேரும், சிக்கியுள்ளனர். சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா உள்பட 13 கிரிக்கெட் வீரர்கள் சிகிச்சை பயன்பாடு விலக்கு கேட்டு இருப்பதாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

    • சீனாவில் வருகிற 23-ந் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய தடகள அணியில் இடம் பெறவில்லை.
    • கடந்த 12 மாதங்களில் தனது இருப்பிடம் குறித்த தகவலை 3 முறை அளிக்க தவறியதால் அவர் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனையான ஹிமா தாஸ் காயம் காரணமாக சீனாவில் வருகிற 23-ந் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய தடகள அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்துவதற்கு வசதியாக தான் இருக்கும் இடத்தை ஊக்க மருந்து தடுப்பு முகமைக்கு தெரிவிக்காமல் விதிமுறையை மீறியதாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் ஹிமா தாஸ் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    கடந்த 12 மாதங்களில் தனது இருப்பிடம் குறித்த தகவலை 3 முறை அளிக்க தவறியதால் அவர் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதனால் அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    அசாமை சேர்ந்த 23 வயதான ஹிமா தாஸ் 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், 400 மீட்டர் கலப்பு அணிகள் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×