search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Examination Agency Notification"

    • நீட் தேர்வை மீண்டும் நடத்த வாய்ப்பு இல்லை.
    • இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    புதுடெல்லி:

    நீட் தோ்வு முடிவுகள் பாராளுமன்றத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பெற்றது பெரும் சா்ச்சையானது.

    'நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது' என்று சில மாணவா்கள் புகாா் தெரிவித்தனா்.

    இதை மறுத்த என்.டி.ஏ., 'என்சிஇஆா்டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப் பட்ட சில மாற்றங்களாலும் தோ்வு மையங்களில் சில தோ்வா்கள் நேரத்தை இழந்ததாலும் கூடுதல் மதிப் பெண்கள் வழங்கப்பட்டது' என்று விளக்கம் அளித்தது.

    இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் மறு ஆய்வு செய்யப்படும் என என்.டி.ஏ. நேற்று அறிவித்தது.

    இதுகுறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் என்.டி.ஏ. தலைவா் சுபோத் குமாா் சிங் கூறியதாவது:-

    நீட் தோ்வு எழுதியவா்க ளில் 1,500-க்கும் அதிகமான தோ்வா்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமா்ப்பிக்க மத்திய பணியாளா் தோ்வாணைய (யு.பி.எஸ்.சி.) முன்னாள் தலைவா் தலைமையில் 4 போ் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது.

    கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, தோ்வின் தோ்ச்சிக்கான மதிப்பெண்ணில் எந்தவித தாக்கத்தை யும் ஏற்படுத்த வில்லை. மேலும், தோ்வு முடிவுகள் மறு ஆய்வு, இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறு தோ்வு நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், "உயா்நிலைக் குழுவிடம் அறிக்கை கேட்டு இருக்கிறோம். என்றாலும் நீட் தேர்வை மீண்டும் நடத்த வாய்ப்பு இல்லை" என்றாா். மேலும், நீட் வினாத்தாள் கசிந்தது தொடா்பான புகாரை அவா் மறுத்தாா்.

    ×