search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national press day"

    • சமூக கட்டுக்கோப்பிற்கு பத்திரிகைகள் பெரிதும் உதவுகின்றன
    • நேர்மையாக செய்திகளை தரும் பணியில் பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர்

    ஜனநாயகத்தின் நான்காவது தூண் (Fourth Pillar of Democracy) என வர்ணிக்கப்படுபவை பத்திரிகைகள்.

    அரசியல், அதிகாரவர்க்கம், நீதித்துறை ஆகியவை பொதுமக்களின் நன்மைக்காக செயல்படும் அமைப்புகள். இவற்றினால் விளையும் நன்மை தீமைகள் குறித்து பொதுமக்கள் அறிவதற்கும், சிந்திக்கவும், ஆலோசிக்கவும் பத்திரிகைகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன.

    ஒரு சமூகம் கட்டுக்கோப்புடன் வளர்ச்சி பாதையில் செல்லவும், பல்வேறு சிந்தனைகள் மற்றும் சித்தாந்தங்களை கொண்ட பொதுமக்கள் ஒன்றுபட்டு நாட்டை முன்னோக்கி எடுத்து செல்லவும், விமர்சனங்கள், எதிர்கருத்துக்கள், ஆரோக்கியமான விவாதங்கள், செய்தி பரவுதல், கருத்து பரிமாற்றங்கள் உள்ளிட்டவை மிக அவசியம். இத்தகைய பெரும்பணியை பத்திரிகைகள் திறம்பட செய்கின்றன.

    ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் பல பத்திரிகைகள் மற்றும் அதன் ஆசிரியர்கள் அப்போதைய அரசாங்கத்தால் பெரும் அடக்குமுறையை சந்தித்து வந்தனர். அதையும் மீறி இந்திய சுதந்திர உணர்வை மக்களிடையே ஊக்குவிக்க அவர்கள் பாடுபட்டனர்.

    காகித வடிவிலான அச்சு பத்திரிகையிலிருந்து வானொலி, தொலைக்காட்சி என அடுத்த கட்டத்திற்கு சென்ற பத்திரிகைகள், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மின்னணு பேப்பர், டிஜிட்டல் வலைதளங்கள், மென்பொருள் செயலிகள் என நினைத்து பார்க்க முடியாத வடிவங்களை அடைந்திருக்கின்றன.

    அடுத்த கட்ட நவீனமயமாக்கலில் இணையதளத்தில் பெருகி வரும் சமூக வலைதளங்களின் மூலம் எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற கருத்து பரிமாற்றம் மற்றும் தகவல் தொடர்பு மேடைகளாகவும் மிகப்பெரும் பரிணாம வளர்ச்சியை பத்திரிகைகள் கண்டுள்ளன.

    பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பி.சி.ஐ.) எனப்படும் இந்திய பத்திரிகையாளர் கவுன்சில் நவம்பர் 16, 1966 அன்று உருவாக்கப்பட்டது.

    பொறுப்புள்ள, நேர்மையான, சுதந்திரமான, நடுநிலை உள்ள அமைப்பாக பத்திரிகைகள் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் தேதி இந்திய பத்திரிகை கவுன்சிலால் "தேசிய பத்திரிகை தினம்" கொண்டாடப்படுகிறது.

    ஒரு சட்டபூர்வமான அமைப்பாக இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய பத்திரிகை கவுன்சில், பத்திரிகைகள், தங்கள் தொழில் தர்மத்தை கடைபிடித்து, செய்திகளை நெறிப்படுத்தி செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்திலும் தேசிய பத்திரிகை தினத்தை கொண்டாடி வருகிறது.

    தேசிய பத்திரிகை தினத்தன்று, நேர்மையாக செய்திகளை மக்களுக்கு தருவதில் தங்கள் உயிரையும் தியாகம் செய்த பல பத்திரிகையாளர்கள் நினைவுகூரப்படுகின்றனர். சிறப்பாக பணியாற்றிய பத்திரிகையாளர்களை பாராட்டி கவுரவிக்கும் விதமாக பல நிகழ்ச்சிகள் இன்று நம் நாட்டில் பல அமைப்புகளால் நடத்தப்படும்.

    உலகெங்கிலும் பல நாடுகளில் வன்முறையின்றி, ரத்தம் சிந்தாமல் ஆட்சி மாற்றத்திற்கும் பல புரட்சிகளுக்கும் பத்திரிகைகள் வழிவகுத்தன என்பது பத்திரிகை துறையினர் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க பதிவாகும்.

    வருடம் முழுவதும் 24 மணி நேரமும், வெயில், மழை, பனி என பாராமல், ஓய்வின்றி மக்களுக்கு செய்திகளை வழங்க பத்திரிகையாளர்கள் பாடுபடுகின்றனர். உணவு, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை போல் பத்திரிகைகளின் சேவையும் பொதுமக்களுக்கு அவசியமாகி விட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம்.
    • சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம்.

    சென்னை:

    தேசிய பத்திரிகை தினத்தையொட்டி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில்,

    "உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர், எனவே, தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம். அரசியல் அழுத்தங்களுக்கு சிலர் அடிபணியும் இக்காலத்தில், சாய்வற்ற நேர்மையான ஊடகவியலை முன்னெடுத்து, சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.

    தேசிய பத்திரிகை தினத்தையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #NationalPressDay #cmEdappadipalanisamy

    சென்னை:

    தேசிய பத்திரிகை தினத்தையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு நடுநிலையோடு எடுத்துரைத்து, அவர்தம் அறிவுக்கண்ணை திறக்கும் உயரிய பணியை ஆற்றுவதால் பத்திரிகை துறை ஜன நாயகத்தின் நான்காவது தூணாக போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க பத்திரிகை மற்றும் ஊடகத்துறையின் பணியினை கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ந்தேதி தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #NationalPressDay #cmEdappadipalanisamy

    ×