search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navjot Sidhu"

    • உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் 5 சிறந்த பவுலர்களை தேர்ந்தெடுங்கள்.
    • இந்த பையன் கொஞ்சம் பேட்டிங் செய்வார், கொஞ்சம் பவுலிங் செய்வார் என்று நினைத்து எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை தேர்வு செய்ய சமரசம் செய்யாதீர்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பை தொடரிலாவது இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. வரலாற்றில் முதலும் கடைசியுமாக டோனி தலைமையில் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பையை வென்றது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து ஆலோசனை கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் 5 சிறந்த பவுலர்களை தேர்ந்தெடுங்கள் என்பதே ராகுல் டிராவிட்டுக்கு என்னுடைய நேரடியான ஆலோசனையாகும். அணியின் சரிவு என்பது கேரக்டரில் இருந்து தான் உருவாகிறது. எனவே உங்கள் கேரக்டரில் நீங்கள் சமரசம் செய்யும் போது வெற்றி கிடைக்கிறது.

    உங்களிடம் ரவீந்திர ஜடேஜா, குல்தீப், ரவி பிஸ்னோய் ஆகிய 3 ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் 3 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுங்கள். ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் மயங் யாதவை தேர்வு செய்யலாம். கலீல் அகமது, மோசின் கான், முகேஷ் குமார் உட்பட இந்தியாவுக்காக விக்கெட் டேக்கிங் பவுலர்கள் ஏராளமாக இருக்கின்றனர். எனவே இந்த பையன் கொஞ்சம் பேட்டிங் செய்வார், கொஞ்சம் பவுலிங் செய்வார் என்று நினைத்து எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை தேர்வு செய்ய சமரசம் செய்யாதீர்கள்.

    இம்ரான் கான் அல்லது ஸ்டீவ் வாக் போன்ற மகத்தான கேப்டன்கள் எப்போதுமே விக்கெட் எடுக்கும் பவுலர்களுக்கு முன்னுரிமை கொடுத்தனர். அது தான் வெற்றிக்கான ரகசியமாகும். ஆனால் இந்த டெம்ப்ளேட்டை நம்முடைய அணி புறக்கணிக்கிறது. 6 பேட்ஸ்மேன்கள் உங்களுக்கு போட்டியை வென்று கொடுக்காமல் போனால் 7-வது பேட்ஸ்மேனாலும் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது.

    என்று சித்து கூறினார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தன்னை ஒருபோதும் பாகிஸ்தான் செல்லும்படி கூறவில்லை என பஞ்சாப் மந்திரி சித்து தெரிவித்துள்ளார். #Pakistan #NavjotSidhu #RahulGandhi
    புதுடெல்லி:

    பாகிஸ்தானின் கர்தார்பூரையும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் தேரா பாபா நானக் நகரையும் இணைக்கும் விதமாக சாலை அமைக்கப்படுகிறது. கடந்த புதன்கிழமை இதற்கான அடிக்கல் நாட்டு விழா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நடந்தது. இதில் இந்தியாவின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவும் பங்கேற்றார்.



    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய சித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் உத்தரவின் பேரில்தான் பாகிஸ்தான் சென்றதாக தெரிவித்தார். ஆனால் நேற்று இந்த விவகாரத்தில் அவர் திடீர் பல்டி அடித்தார்.

    ராகுல்காந்தி என்னை ஒருபோதும் பாகிஸ்தான் செல்லும்படி கூறவில்லை. இம்ரான்கான் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதால் பாகிஸ்தான் சென்று விழாவில் கலந்து கொண்டேன். இதை உலகமே அறியும் என்றார். மேலும், பஞ்சாப் முதல்-மந்திரியும் முன்னாள் ராணுவ கேப்டனுமான அமரீந்தர் சிங்கை மறைமுகமாக தாக்கும் விதமாக ராகுல்காந்தியை மட்டுமே கேப்டனாக கருதுகிறேன் என்றும் குறிப்பிட்டார்.

    இதுபற்றி கருத்து தெரிவித்த பஞ்சாப் மாநிலத்தின் மற்றொரு மந்திரியான ரஜீந்தர் சிங் கூறும்போது, அமரீந்தர் சிங்கை கேப்டனாக சித்து கருதவில்லை என்றால் அதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலகவேண்டும் என்றார்.  #Pakistan #NavjotSidhu #RahulGandhi 
    ×