search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nellikai urugai"

    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெல்லிக்காய் ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய நெல்லிக்காய் - 10
    எலுமிச்சம்பழம் - 5
    வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - 1/4 கோப்பை
    மிளகாய்த்தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    நெல்லிக்காயை சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வைத்து வேக வைக்கவும்.

    நெல்லிக்காய் சூடு ஆறியதும், பல் பல்லாக உதிர்த்து கொட்டை நீக்கவும்.

    அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

    வெந்தயம், சீரகம் ஆகியவற்றை தனியே வறுத்து ஆறியதும் தூளாக அரைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து, அதனுடன் வெந்தயம் மற்றும் சீரகத்தூளைச் சேர்க்கவும்.

    தாளித்த பொருட்களை ஊறுகாயுடன் சேர்த்து உடனடியாக பரிமாறவும்.

    சூப்பரான நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×