search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new announcements"

    • தேவஸ்தானத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.
    • தங்கும் விடுதிகள் முன்பதிவு செய்வதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதன்மை செயல் அலுவலராக சியாமளா ராவ் பதவி ஏற்றார். இவர் பதவியேற்ற பிறகு திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    சியாமளா ராவ் அன்னதான கூடம், லட்டு தயாரிக்கும் இடம், பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் வரிசை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    பக்தர்கள் பயன் பெறும் வகையில் தேவஸ்தானத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. லட்டு மற்றும் பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானத்தில் தரம் மற்றும் சுவையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களின் தரிசன வரிசையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். தங்கும் விடுதிகள் முன்பதிவு செய்வதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

    பிரசாதத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தை பரிசோதித்து அங்கீகரிப்பதற்காக ஆய்வகம் அமைக்கப்படும். நாராயணிகிரி தோட்டத்தில் ஒரே நேரத்தில் 6 ஆயிரம் பேர் தங்கக்கூடிய வகையில் புதிய கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காக தற்போது வழங்கப்படும் நேர ஒதுக்கீடு டோக்கன்கள் 1.05 லட்சத்தில் இருந்து 1.47 லட்சம் டோக்கன்களாக அதிகரிக்கப்படும்.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தனியாக 3 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரிசையில் தரிசனத்திற்கு செல்லும் குழந்தைகளின் பசியை போக்க மீண்டும் பால் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆர்ஜித சேவைகளில் முன்பதிவில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதியில் நேற்று 75, 963 பேர் தரிசனம் செய்தனர். 26, 956 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.99 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 16 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ×