search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nikila vimal"

    • மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வந்த படம் வாழை.
    • வாழைத்தார் சுமக்கும் தொழிலாளியின் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது.

    மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வந்த படம் வாழை. தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் பகுதியில் வாழைத்தார் சுமக்கும் தொழிலாளியின் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது.

    படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், கிராமத்து பொதுமக்கள் பங்கேற்றனர்.

    விழாவிற்காக கிராம மக்கள் 2 பேருந்துகளில் வரவழைக்கப்பட்டிருந்தனர். விழாவில் மாரி செல்வராஜ் பேசியதாவது:-

    வாழை படம் இந்த அளவுக்கு நன்றாக வருவதற்கு காரணம் என் முந்தைய பட தயாரிப்பாளர்கள்தான். நான் படம் பண்ணும் போது அவ்வளவு சுதந்திரம் கொடுத்தார்கள்.

    வாழை படத்தை ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி பார்த்துவிட்டு வசூலாக எப்படி பண்ணும்னு தெரியல. ஆனால் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்று சொன்னார். படத்தின் இறுதிக்காட்சியில் பூங்கொடி டீச்சர் (நிகிலாவிமல்) ஏன் வரவில்லை என்று பலரும் கேட்டனர்.

    அவரது தேதி அப்போது கிடைக்கவில்லை. கடைசியில் அம்மா மடியில் சிவனானந்தன் படுத்திருப்பான். அம்மாவிற்கு பதில் டீச்சர் மடியில் படுத்திருக்கிற மாதிரிதான் காட்சி இருக்க ஆசைப்பட்டேன். விபத்தின் போது இஸ்லாமிய சகோதரர்கள்தான் காப்பாற்றினார்கள் என்ற உண்மை படத்தின் மூலமாக வெளிவந்துள்ளது.

    வாழை படத்தின் 2-ம் பாகத்தை நிச்சயமாக எடுப்பேன். முதல் பாகத்தின் பின்னால் இருக்கும் கதையை சிவனானந்தனை வைத்து எடுப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    எஸ்.பி.மோகன் இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த் - நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பஞ்சுமிட்டாய்’ படத்தின் முன்னோட்டம். #Panjumittai #MakaPaAnand
    தீபம் சினிமா வழங்கும் படம் ‘பஞ்சுமிட்டாய்’.

    இதில் மா.கா.பா.ஆனந்த் நாயகனாக நடிக்கிறார். நிகிலா விமல் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சென்ட்ராயன், பாண்டியராஜன், தவசி, வித்யுலேகா, பாண்டு, அர்ஜுனா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இசை - டி.இமான், ஒளிப்பதிவு - மகேஷ் கே.தேவ். திரைக்கதை - ஜே.பி.சாணக்யா, எழில்வரதன், கோபாலகிருஷ்ணன், எஸ்.செந்தில்குமார். தயாரிப்பு - எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார். இயக்கம் - எஸ்.பி.மோகன்.

    படம் பற்றி இயக்குநர் பேசியதாவது,

    இயல்பாக நடக்க முடியாத யதார்த்த நிகழ்ச்சிகளை முதல் முறையாக, மாய யதார்த்த யுத்தியில் சொல்லி இருக்கும் கதை ‘பஞ்சுமிட்டாய்’. இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கிராமத்தில் இருந்து சென்னை வரும் புரோட்டா மாஸ்டர். சென்ட்ராயன் சென்னையை சேர்ந்த டீ மாஸ்டர். ஆனந்த் ஜோடியாக வரும் நிகிலா கிராமத்து பெண்.



    2 நண்பர்கள், கணவன் - மனைவி உறவு, குடும்பம், சென்னை வாழ்க்கை, கிராம சூழ்நிலை ஆகியவற்றை நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கி இருக்கிறோம். எல்லா மனித உணர்வுகளும் வயது வித்தியாசம் இல்லாமல் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

    டி.இமான் இசையில் முதல் முறையாக உருவான முதல்-இரவு பாடல் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்துக்கான மாய காட்சிகளை ‘2.0’ படத்தில் பணிபுரியும் சீனிவாசமோகன் அமைத்திருக்கிறார். பஞ்சுமிட்டாய் படத்தை பார்த்த இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் மிகவும் பாராட்டினார்கள்” என்றார். #Panjumittai #MaKaPaAnand

    ×