search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nilgiris District Administration"

    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் அமைக்கப்பட்ட மின் வேலிகளை 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பொக்காபுரம், வாழைத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் யானை வழித்தடத்தை மறைத்து ரிசார்ட்டுகள் (ஓட்டல்கள்) கட்டப்பட்டு உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதி யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள ரிசார்ட்டுகளை ஆய்வு செய்து அதனை சீல் வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து யானை வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 39 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் மின் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    இதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மின் வேலிகளை அகற்ற கோரி சுற்றறிக்கை வழங்கி வருகிறார்கள்.

    48 மணி நேரத்திற்குள் யானைகள் வழித்தடத்தில் உள்ள மின் வேலிகளை அகற்றாவிட்டால் அந்தந்த அதிகாரிகளே அகற்றுவார்கள் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து யானைகள் வழித்தடத்தில் அமைக்கப்பட்ட மின் வேலிகளை அகற்றும் பணியில் சம்பந்தப்பட்டவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews
    ×