search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nitingadkari"

    நாக்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி நிதின் கட்கரி, தனக்கு காங்கிரஸ் கட்சியினரின் ஆதரவும் இருப்பதாக கூறியுள்ளார். #Loksabhaelections2019 #Nitingadkari #BJP
    நாக்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் நீர்வள ஆதாரங்கள் மற்றும் கங்கை தூய்மைபடுத்துதல் துறைகளின் மந்திரியான நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    நேற்று நாக்பூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கட்கரி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

    நான் சாதி, மதம், மொழி, மற்றும் எந்த கட்சியினைச் சார்ந்தவர் என பாராமல் அனைத்து மக்களையும் சமமாக கருதி பணியாற்றி உள்ளேன். இதன் விளைவாக காங்கிரசின் ஆதரவாளர்களும், அலுவலகங்களில் பணியாற்றும் பலரும் எனக்கு போன் செய்து, நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். நாங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பணியாற்றலாம். ஆனால் எங்கள் இதயம் உங்களின் சேவை குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கும் என கூறுகின்றனர். இதனால் எனக்கு எல்லா இடங்களிலும் ஆதரவு இருப்பது  உறுதியாக தெரிகிறது.



    மேலும் பாஜகவினர் மக்களிடம் சென்று நம்பிக்கையுடனும், பணிவுடனும் வாக்குகளை சேகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் நம்பிக்கைக்கும், அத்துமீறிய செயல்களுக்கும் இடையே உள்ள வேற்றுமையை அறிய வேண்டும். மக்களிடையே கனிவான முறையில் நம் ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்குகளை பெற வேண்டுமே தவிர, கடுமையாக நடந்துக் கொள்ளக் கூடாது.

    நான் மக்களிடம் சென்று, பிற கட்சியினரின் பெயர்களை  கூறி, அவதூறு பேசி வாக்கு சேகரிக்க விரும்பவில்லை. என்னால் என்னென்ன சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதோ, அதை மட்டுமே கூறி பிரசாரம் மேற்கொள்வேன். கடந்த தேர்தலில் என்ன வாக்குறுதிகள் கொடுத்தோமோ அதனை நிறைவேற்றியுள்ளோம். நாங்கள் சொல்வதை தான் செய்வோம்.

    மக்கள் திறமையானவர்கள், அவர்களுக்கு எல்லாம் தெரியும். மக்களுக்கான பணிகளை செய்து அவர்களின் இதயங்களை வென்றுள்ளோம். இந்த முறையும் பாஜக வெற்றி பெறும் என்பது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Loksabhaelections2019 #Nitingadkari #BJP #Congress



    ×