search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Norwegian PM"

    நார்வேயில் பிறப்பு வீதம் குறைவாக இருந்தால் இனி வரும் காலத்தில் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் நாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் தேவை என பிரதமர் கூறி உள்ளார். #NorwegianPM
    ஆஸ்லோ:

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் எர்னா சோல்பெர்க் என்ற பெண் தலைவர் பிரதமராக உள்ளார்.

    சமீபத்தில் அவர் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி விடுத்தார். அந்தச் செய்தியில் அவர், “நமது நாட்டுக்கு இப்போதைய தேவை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள்தான். இதை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன்” என கூறி உள்ளார்.

    மேலும் “இனி வரும் காலத்தில், இதேபோல் நாடு இருந்தால் (பிறப்பு வீதம் குறைவாக இருந்தால்) நாம் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்” எனவும் அவர் எச்சரித்தார்.

    இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுவாக நார்டிக் நாடுகள் என்று அழைக்கப்படக்கூடிய நார்வே, சுவீடன், டென்மார்க் , பின்லாந்து, ஐஸ்லாந்து நாடுகளில் குழந்தைகள் பிறப்பு வீதம் குறைவாக உள்ளது. #NorwegianPM
    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். #PMModi #NorwegianPM #ErnaSolberg
    புதுடெல்லி:

    நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் நார்வே அரசின் உயரதிகாரிகள் குழுவும் வந்துள்ளது.

    ஜனாதிபதி மாளிகையில் சிகப்பு கம்பளம் விரித்து, முப்படை அணிவகுப்பு மரியாதையுடன் நார்வே பிரதமருக்கு இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் இருநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனர்.



    இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது, பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. பின்னர், எர்னா சோல்பர்க்,  நரேந்திர மோடி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

    நார்வே பிரதமருடனான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேலும் பலப்படுத்தும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்திருந்தது என்று குறிப்பிட்டார்.

    பிரதமரை சந்திப்பதற்கு முன்னதாக இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை  எர்னா சோல்பர்க் சந்தித்து பேசினார். #PMModi #NorwegianPM #ErnaSolberg

    ×