search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Notice To Remove Houses"

    திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை 21 நாட்களுக்குள் காலி செய்து கொள்ளுமாறு கோட்டாட்சியர் ரத்னா நோட்டீஸ்களை வழங்கினார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஏரி 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது இதில், ஏரியைச் சுற்றிலும், 200 க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் ஏரியில் நீர் ஆதாரத்தை ஏற்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையில் மழைநீரை சேகரிக்கவும், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை உடனே அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து காக்களூர் ஏரிக்கரை பகுதியை திருவள்ளூர் கோட்டாட்சியர் ரத்னா, வட்டாட்சியர் தமிழ்செல்வன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    பின் அங்கு வீடு கட்டியுள்ளவர்களிடம் நீதிமன்ற உத்தரவினை எடுத்துக் கூறி தங்களது வீடுகளை 21 நாட்களுக்குள் காலி செய்து கொள்ளுமாறு கோட்டாட்சியர் ரத்னா நோட்டீஸ்களை வழங்கினார்.

    மேலும் வீடுகளை இழந்தோருக்கு பட்டரைபெரும்புதூரில் மாற்று இடம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
    ×