என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » odi tri series
நீங்கள் தேடியது "ODI Tri-Series"
வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் பிரத்வி ஷா, ஹனுமா விஹாரி சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDAvWIA #WIAvINDA
லண்டன்:
இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
நேற்றைய லீக் போட்டியில் இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் பிரித்வி ஷா, ரஷப் பந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரிஷப் பந்த் 5 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டக்அவுட்டிலும் வெளியேறினார்கள்.
அதன்பின் பிரி்த்வி ஷா உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரித்வி ஷா 60 பந்தில் 16 பவுண்டரியுடன் 102 ரன்கள் சேர்த்தார். விஹாரி 131 பந்தில் 13 பவுண்டரி, 5 சிக்சருடன் 147 ரன்கள் விளாசினார். இருவரின் அபார சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது.
பின்னர் 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெர்மெய்னி பிளக்வுட் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். அதன்பின் களமிறங்கிய ஆண்ட்ரே மெக்கேர்தி 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதைத்தொடர்ந்து சந்தர்பால் ஹேம்ராஜ் - சுனில் அம்ப்ரிஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்ந்தனர். சந்தர்பால் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டெவான் தாமஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சுனில் 32 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரெய்மான் ரீபர் 26 ரன்னிலும், ராக்கீம் கார்ன்வால் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 37.4 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா ‘ஏ’ பந்துவீச்சில் அக்ஸார் பட்டேல் 4 விக்கெட்களும், தீபக் சஹார் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இந்தியா ‘ஏ’ அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியை வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்ற இந்தியா ‘ஏ’ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டி வருகிற ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது. #INDAvWIA #WIAvINDA
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X