search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "older people"

    • தியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் வருடாவருடம் புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • கிராம ஊராட்சிகளை சார்ந்த முன்கள பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 150 நபர்களுக்கு வழங்கினார்.

    திருப்பூர் :

    தீபாவளியை முன்னிட்டு திருப்பூர் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் ஏழை எளிய மக்கள், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் வருடாவருடம் புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் வெட்டையன் கிணறு, துடுப்பதி, திருவாச்சி, கந்தாம்பாளையம், முள்ளம்பட்டி ஆகிய கிராம ஊராட்சிகளை சார்ந்த முன்கள பணியாளர்கள் மற்றும் அங்குள்ள மாற்றுத்திறனாளிகள் சுமார் 150 நபர்களுக்கு இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் இந்திராசுந்தரம் நேரடியாக சென்று துடுப்பதி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அன்பரசு, திருவாச்சி ஊராட்சி மன்ற தலைவர் சோலி பிரகாஷ், வேட்டையன் கிணறு ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். இந்நிகழ்வில் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் ராஜா முஹம்மது, மற்றும் நிர்வாகிகள் பூர்ணிமா, சதீஷ்குமார் சுரேஷ், ஈஞ்சம்பாளையம் திவ்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

    தமிழக வாக்குச்சாவடிகளில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக 67 ஆயிரத்து 720 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    சென்னை:

    தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர்கள் 3 லட்சத்து 27 ஆயிரத்து 903 பேருக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களில் 47 ஆயிரத்து 610 பேரிடம் இருந்து வாக்களிக்கப்பட்ட தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன.

    தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் அல்லாதவர்களுக்கும் தேர்தல் பணி சான்றிதழ் வழங்கப்படுகின்றன. அவர்களும் வாக்குப்பதிவு நாளன்று சொந்த தொகுதிக்குள் வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க முடியும். அந்த வகையில் மொத்தம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 51 தேர்தல் பணி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ வீரர்களுக்கான சர்வீஸ் ஓட்டுகள் 67 ஆயிரம் உள்ளன. அவர்களுக்கு சர்வீஸ் ஓட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டுவிட்டன.



    தேர்தல் பணியில் இருக்கும்போது ஊழியர் யாருக்காவது மரணம் நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும். தேர்தல் பணி காலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்து கொலை செய்யப்பட்டுவிட்டால், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும். இந்த தொகையை மத்திய அரசு அளிக்கும். போலீஸ் ஓட்டுகள் (விண்ணப்பித்தவர்கள்) 24 ஆயிரத்து 971 உள்ளன. அவர்களில் 10 ஆயிரத்து 657 பேர் தேர்தல் பணி சான்றிதழ் பெற்றுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி மீறல்களுக்காக 4 ஆயிரத்து 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வேலூரில் நடந்த வருமான வரித்துறையின் சோதனை குறித்து அவர்களின் அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. அனேகமாக அதை அவர்கள் அளித்திருக்க வேண்டும். அதுபோல ஆணையம் கோரியபடி போலீசில் அறிக்கையும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நான் எந்த அறிக்கையையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை.

    அது மிகுந்த ரகசியத்துக்கு உட்பட்ட அறிக்கை என்பதால் அதுபற்றி வெளிப்படையாக பேசிவிட முடியாது. அந்த அறிக்கையில் உள்ள கருத்துகளின்படி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்.

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க. முன்வைத்துள்ளது. அதுபற்றி தேர்தல் ஆணையத்துடன் பேசிக்கொண்டிருக்கிறோம்.

    இந்த தேர்தலில் மொத்தமுள்ள 67 ஆயிரத்து 720 வாக்குச்சாவடிகளில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு சக்கர நாற்காலி வைக்கப்பட்டு இருக்கும். அதை இயக்குவதற்கு ரூ.250 சம்பளத்தில் தன்னார்வலர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பார். எனவே மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் தேவைப்பட்டால் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெற்றோர் மீதான பாசம் என்பது தூரமாகி கொண்டிருக்கிறது. வயதான பெற்றோரை, பாரமாக கருதும் மனப்போக்கு ஏற்பட்டுள்ளது.
    சுவாசிப்பதை போல நேசிப்பதே நிஜமான அன்பு. இத்தகைய அன்புக்கு சொந்தக்காரர்களாக இருப்போர் நம் பெற்றோர். இவர்களை தெய்வங்களாக தொழுவோரும் உள்ளனர். அதேசமயத்தில், முதுமையை சுமையாக கருதி பெற்றோரை தூக்கி எறிவோரும் இருக்கிறார்கள்.

    பண்டைக்காலத்தில் முதியோரின் சொல் மந்திரமாக மதிக்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் எந்தவொரு முடிவையும் அவர்களே எடுத்தனர். அதன் விளைவு, சிறந்த பயனை தந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறி விட்டது. முதியோரின் வார்த்தைகள் அலட்சியப்படுத்தப்படுவதோடு, தங்களது மகன், மகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள் என அனைவராலும் அவர்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர்.

    கணவன், மனைவி, குழந்தைகள் என குறுகிய வட்டத்தில் வாழ்க்கை பயணம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அனுபவம் வாய்ந்த முதியோரின் அறிவுரை பேரன், பேத்திகளுக்கு கிடைப்பதில்லை. தாத்தா, பாட்டியின் அரவணைப்பு இல்லாததால், வளர்ந்து வாலிபர்கள் ஆனவுடன் கால்போன போக்கில் சென்று தங்களது வாழ்க்கை பயணத்தை வீணாக முடித்து கொள்கின்றனர். அன்பு இன்றி இதயம் இறுகி விடுகிறது.

    உலகில் உதித்த நாளில் இருந்து, நம்மை சீராட்டி பாராட்டி வளர்க்கும் பெற்றோரின் உழைப்பை அட்டைப்பூச்சியாய் உறிஞ்சு வளர்கிறார்கள். ஆனால் அவர்கள் தள்ளாடும் போது, தவிக்க விட்டு விடுகின்றனர்.



    பெற்றோரின் சொத்துக்கள், தங்களுக்கு தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடி எடுத்து கொள்கின்றனர். அதன்பிறகு தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவோரும் உண்டு. வயதான காலத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தனது மகன் அல்லது மகள் அன்பாக, ஆறுதலாக ஒரு வார்த்தை பாசமாக பேச மாட்டார்களா? என்ற ஏக்கத்தில் இருப்பார்கள். ஆனால் அது கிடைக்காத பட்சத்தில், மனம் நொந்து வெந்து விடுகிறது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெற்றோர் மீதான பாசம் என்பது தூரமாகி கொண்டிருக்கிறது. வயதான பெற்றோரை, பாரமாக கருதும் மனப்போக்கு ஏற்பட்டுள்ளது.

    எத்தனையோ முதியோர்கள் சொத்துகளை எழுதி வாங்கி கொண்டு மகனும், மகளும் செய்த கொடுமைகளை மனதுக்குள்ளே பூட்டி வைத்து புழுங்கி கொண்டிருக்கின்றனர். ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல், பிறரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தனக்கு தராவிட்டாலும் பரவாயில்லை தனது மகனோ, மகளோ சந்தோஷமாக வாழட்டும் என்ற எண்ணத்தில் நடமாடும் பிணமாக வாழ்ந்து வருகிறார்கள்.

    இவர்களை போன்றோரை கணக்கெடுத்து, அவர்களின் நிலையை மாற்றுவது என்பது கடினம் தான். அதேநேரத்தில் சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டு சொந்தம் இல்லை என்று உதறி தள்ளும் கல்நெஞ்சம் படைத்த மகனுக்கும், மகளுக்கும் இதுபோன்ற சவுக்கடி கொடுப்பது அவசியம் தான். அன்பு, பாசம், நேசம் ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்க முடியாது. இது, மனநிலை சார்ந்த விஷம் ஆகும்.

    பெற்றோரின் முதுமை அவர்களின் மகன், மகள்களுக்கு சுமையாக தெரிகிறது. உண்மையாகவே அது சுமை அல்ல. அவர்களை சுமப்பது ஒரு சுகமான அனுபவமே. பல்வேறு பிரச்சினைகளுக்கு முதியோரால் முற்றுப்புள்ளி வைக்க முடியும். எனவே மனதை இளக வைத்து, அதில் முதுமையை மகுடம் சூட்ட வேண்டும். அப்போது தான் கண்ணன்-பூங்காவனம் போன்றோர் உருவாகாமல் தடுக்க முடியும்.

    -தாமிரன்
    கணவன்-மனைவி, குழந்தைகளுக்கென வீடுகளில் தனித்தனி அறைகள் அமைக்கப்படுவதைப் போல் முதியவர்களுக்கும் தனி அறை அமைப்பது அவசியமாகிவிட்டது.
    கணவன்-மனைவி, குழந்தைகளுக்கென வீடுகளில் தனித்தனி அறைகள் அமைக்கப்படுவதைப் போல் முதியவர்களுக்கும் தனி அறை அமைப்பது அவசியமாகிவிட்டது. முதுமை எல்லோருக்கும் வரும் என்பதால் பெற்றோருக்காகவோ, தாத்தா-பாட்டிகளுக்காகவோ கட்டும் அறைகள் பிற்காலத்தில் நமக்கு உதவும் என்ற தொலைநோக்கு யோசனையும் தேவை. சரி, முதியவர்களுக்கான அறை, அதில் வசதிகள் எப்படி இருக்க வேண்டும்?

    தரையை அழகாய் வடிவமைக்கிறார்கள். அழகழகான டைல்ஸ்கள் வீட்டின் தோற்றத்தை எடுப்பாகக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், டைல்ஸ் தரைகளால் முதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றே சொல்லலாம். வழுக்குத் தன்மையுள்ள டைல்ஸ் தரைகளில் முதியவர்கள் நடக்கும்போது வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம். குறிப்பாகக் காலை நனைத்து விட்டு வரும்போது விழும் வாய்ப்புகள் அதிகம். முதியவர்கள் கீழே விழுவது அவர்களின் உடல் நலத்துக்குக் கேடு விளைவித்துவிடும். எனவே வழுக்கும் தன்மையுள்ள டைல்ஸ்களுக்குப் பதிலாக, சொரசொரப்புத் தன்மையுள்ள டைல்ஸ்களைப் பதிக்கலாம்.

    மாடிகள் நல்ல வி‌ஷயம். ஆனால் இது வயதானவர்களுக்கு ஏற்றதல்ல. முடிந்த அளவுக்கு வீட்டுக்குள் உள்ள மாடி படிக்கட்டுகளைச் சாய்வு தளமாக அமைப்பது முதியவர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் படிக்கட்டுகளின் ஓரத்தில் நிச்சயமாகக் கைப்பிடி அமைக்க வேண்டும். மாடிப் படிக்கட்டுகளில் டைல்ஸ்கள் பதிப்பதைத் தவிர்க்கலாம். குளியலறையில் சொரசொரப்புத் தன்மையுள்ள டைல்ஸ்களைப் பயன்படுத்துவது முதியவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஏற்றது.



    குளியலறை அலமாரிகளை குறைந்த உயரத்தில் அமைப்பது நல்லது. குளியலறையில் பொருத்தப்பட்டுள்ள கைப்பிடிகள் வலுவாக இருப்பதை அடிக்கடி உறுதி செய்யவும்.

    கழிவறையில் இந்திய பாணிக் கழிவறைகள்தான் சிறந்தது. ஆனாலும் நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு மேற்கத்திய பாணிக் கழிப்பிடங்களே ஏற்றது. இந்திய பாணிக் கழிப்பிடங்கள் முதியவர்களுக்குக் க‌ஷ்டத்தையே கொடுக்கும்.

    முதியவர்கள் உட்கார்ந்து எழ மிகவும் க‌ஷ்டப்படுவார்கள் என்பதால் சுவர்களின் பக்கவாட்டில் கைப்பிடிகள் அமைப்பது அவர்களுக்குப் பயனளிக்கும். மேற்கூறிய அனைத்து அறைகளும் முதியவர்கள் விழுவதற்கும், காயம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ள பகுதிகள். எனவே முதியவர்களுக்கான வசதிகள் கண்டிப்பாக தேவை. மற்ற அறைகளிலும், முதியவர்களுக்கு ஏற்ற வகையில் வசதிகளைச் செய்து கொடுப்பதும் நல்லதுதான். 
    ×