search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "O.panneer selvam"

    எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என குஷ்பு வலியுறுத்தியுள்ளார். #Congress #Khushboo
    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

    11. 15க்கு தொடங்கிய இந்த சந்திப்பு 11.45 வரை நேரம் நீண்டது. சந்திப்புக்கு பின் வெளியே வந்த குஷ்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:-

    கே:- ராகுல் காந்தியை சந்தித்த போது என்ன பேசினீர்கள்?

    ப:-ராகுல் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை பற்றி கேட்டு அறிந்தார். அ.தி.மு.க. ஆட்சி பற்றி பேசினோம்.

    கே:-தமிழக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க அனுமதி மறுத்தது பற்றி?


    ப:-ஒரு துணை முதல்-அமைச்சர் நேரில் சென்ற பிறகும் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. எம்.பி.யை பார்த்ததாக சொல்கிறார்கள். துணை முதல்-அமைச்சரை சந்திப்பதற்கும் எம்.பி.யை சந்திப்பதற்கும் வித்தியாசம் இல்லையா?

    கே:-ஓ.பி.எஸ். அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று கூறியிருக்கிறாரே?

    ப:-இந்த வார்த்தைகளுக்கு ஓ.பி.எஸ் விளக்கம் அளிக்க வேண்டும்.

    கே:-ஓ.பி.எஸ். தம்பி சிகிச்சைக்கு ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையாகி உள்ளதே?

    ப:-அவசரம், முக்கியம் என்னும்போது மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுவதில் தவறு இல்லை. ஆனால் இதே உதவி சாமானிய மக்களுக்கும் கிடைக்குமா என்பதை அரசு விளக்க வேண்டும்.

    கே:-ராகுல் பிரதம வேட்பாளர் பதவியை தியாகம் செய்ய துணிந்ததாக செய்தி வருகிறதே?

    ப:-காங்கிரசை பொறுத்தவரை ராகுல் தான் பிரதமர் வேட்பாளர். சில சந்தர்ப்பங்களில் வலுவான கூட்டணி அமைய அது விட்டுக்கொடுக்கப்படலாம். பதவி ஆசைக்காக காங்கிரஸ் கட்சி அரசியல் செய்யவில்லை.

    ஆனால் நேரம் வரும்போது தான் முடிவு செய்யப்படும். கட்சியை பொறுத்தவரை ராகுல் காந்தி தான் பிரதம வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

    ப:-இதை நான் முடிவு செய்ய முடியாது. கருத்து சொல்லவும் முடியாது. கட்சி தலைவர் என்ற பொறுப்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவர் தான் முடிவு செய்யவேண்டும்.

    கே:-தமிழக தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்படுவரா?

    ப:-அதை ராகுல் காந்தி தான் முடிவு செய்ய வேண்டும். ஒட்டுமொத்த இந்திய அளவிலும் ராகுல் காந்தி தலைமை பொறுப்புக்கு வந்தபிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் கேட்கும் கேள்விகள் எதற்குமே பா.ஜ.க.விடம் நேரடி பதில் இல்லை.

    2014-ல் மோடி கூறிய எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அப்போது அவருக்கு இருந்த செல்வாக்கில் பாதி கூட இப்போது இல்லை. அந்த பயம் பா.ஜ.கவினருக்கு ஏற்பட்டுவிட்டது. எனவே தான் ராகுல்காந்தி அறிக்கைக்காகவும் கேள்விக்காகவும் காத்திருந்து அரசியல் செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #congress #RahulGandhi #OPS
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டால் விசாரணை கமிஷன் முன்பு எடப்பாடியும், பன்னீர் செல்வமும் ஆஜர் ஆவார்கள் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் புதிய பஸ் நிலையத்துக்கு இன்று மதியம் அமைச்சர் சி.வி.சண்முகம் வந்தார்.

    பின்பு அவர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கும், விழுப்புரத்தில் இருந்து திருச்சி மற்றும் சேலத்துக்கும் இடைநில்லா பஸ்களை இயக்கி வைத்தார்.

    அதன் பின்னர் அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

    கேள்வி:- தமிழகத்துக்கு வந்திருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, அடுத்த தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என்று கூறியுள்ளாராரே?

    பதில்:- அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

    கே:- சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு அதிகம் எதிர்ப்பு உள்ளதே?

    ப:- இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவதூறாக கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். அரசும் இதை கண்காணித்து வருகிறது.


    கே:- டி.டி.வி.தினகரன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷன் முன்பு, இ.பி.எஸ்சும், ஓ.பி.எஸ்.சும் ஆஜராவார்களா என்று கேட்டுள்ளாரே?

    ப:- சம்மன் அனுப்பப்பட்டால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆஜராவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #Edappadipalanisamy #opanneerselvam
    நாகை, தேனி, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி அ.தி.மு.க. புதிய நிர்வாகிகளை ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமித்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எம்.ஜி.ஆர். இளைஞர் அணியின் கூடுதல் நிர்வாகிகளாகவும், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகிகளாகவும், கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

    நாகப்பட்டினம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்டச் செயலாளர்- திலீபன் (கஞ்சமலைக்காடு, புஷ்பவனம், வேதாரண்யம்).

    புதுக்கோட்டை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகிகள்.

    மாவட்ட தலைவர்- கார்த்திக் தொண்டைமான் (முன்னாள் எம்.எல்.ஏ., புதுக்கோட்டை), மாவட்ட துணைத் தலைவர்கள்- துரைராஜ் (எருதுபட்டி, ஈஸ் வரன்கோவில் ஊராட்சி, அன்னவாசல் ஒன்றியம்), கருப்பையா (சோத்துப்பாளை, புதுக்கோட்டை ஒன்றியம்).

    மாவட்டச் செயலாளர்- முத்தமிழ்செல்வன் (கீழக்குறிச்சி, அன்னவாசல் ஒன்றியம்)

    மாவட்ட இணைச் செயலாளர்கள்- ராஜ்குமார் (சம்பட்டிவிடுதி அஞ்சல், புதுக்கோட்டை ஒன்றியம், மணமோகன் (ஆலங்குடி, திருவரங்குளம் மேற்கு ஒன்றியம்).

    மாவட்ட துணைச் செயலாளர்கள்- செந்தில்குமார் (ராஜாளிப்பட்டி, விராலி மலை மேற்கு ஒன்றியம்), சாமிநாதன் (எல்லையாபட்டி, அன்னவாசல் ஒன்றியம்), மாவட்ட பொருளாளர்- சுப்பிரமணியன் (வீரமங்கலம், ஆவுடையார்கோவில் ஒன்றியம்).

    தேனி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்டச் செயலாளர்- பாண்டிராஜ் (சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர்).

    விருதுநகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்டச் செயலாளர்- ராஜவர்மன் (முள்ளிகுளம், மல்லி அஞ்சல், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா).

    சிவகங்கை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள்:-

    மாவட்ட செயலாளர்- பிர்லாகணேசன் (தளக்கா வயல், தேவகோட்டை தாலுகா), மாவட்ட இணைச் செயலாளர்கள்- சிரஞ்சீவி சீனிவாசன் (சூடாமணி நகர், காரைக்குடி), கருப்பையா (ஜெயங்கொண்டம் ஊராட்சி, சாக்கோட்டை ஒன்றியம்).

    ராமநாதபுரம் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர்- வின்சென்ட் ராஜா (காமராஜர் நடுத்தெரு, திருவள்ளுவர் நகர், பரமக்குடி நகரம்).

    தூத்துக்குடி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர்- பிச்சையா (கருங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர், விக்கிலாபுரம் அஞ்சல்).

    அ.தி.மு.க. தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK
    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.
    கோவை:

    சமூக வலை தளங்களில் வி.ஐ.பி.க்களின் உடல் பிட்னஸ் வீடியோக்கள் தான் தற்போது ஹாட்டாபிக்காக உள்ளது.

    மத்திய மந்திரி ராஜ்வர்தன் ரதோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டதோடு, கிரிக்கெட் வீரர்கள் கோலி, தோனி ஆகியோர் தங்களது பிட்னசை காட்ட வேண்டும் என சவால் விடுத்தார். இதை ஏற்று கோலி தனது பிட்னஸ் வீடியோவை வெளியிட்டதோடு, பிரதமர் மோடிக்கு சவால் விடுத்தார்.

    இதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி தனது உடல் பிட்னஸ் வீடியோவை வெளியிட்டார். மேலும், கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி தனது உடல் பிட்னசை காட்ட வேண்டும் என பிரதமர் மோடி சவால் விடுத்தார். மோடியின் பிட்னஸ் வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

    அதில், தமிழ்நாடு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் ஆகியோரும் பிட்னஸ் சவாலில் பங்கேற்க வேண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.


    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் உடல் ஆரோக்கியம் என்பது உடல் பலமாக இருக்க வேண்டும். அறிவு கூர்மையாக இருக்க வேண்டும். இதயம் மிருதுவாக இருக்க வேண்டும்.

    நான் முன்பு தினசரி விளையாட்டுகள் விளையாடுவது உண்டு. தற்போது நிறைய வேலைகள் இருப்பதால் நேரம் கிடைக்காமல் விளையாட முடியவில்லை. கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் அடி வரை உயரத்தில் உள்ள மலைகளுக்கு வருடத்தில் 2 முறை செல்வது உண்டு. அதுதான் எனக்கு உடல் பரிசோதனை.

    நான் மருத்துவ பரிசோதனை செய்வதில்லை. சர்வதேச யோகா தினமான இன்று இந்திய ராணுவ வீரர்களுக்கு அங்கமருதனா யோகா பயிற்சி கொடுத்துள்ளோம். இந்திய இளைஞர்கள் அனைவரும் அங்கமருதனா யோகா பயிற்சி பெற்று தங்கள் உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

    சத்குருவின் இந்த சவால் சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #JaggiVasudev #EdappadiPalanisamy #OPanneerSelvam #MKStalin
    அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்களுடன் துணை போகக் கூடாது என்று சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
    சென்னை:

    சட்டப்பேரவையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டம் குறித்து பேசியதாவது:-

    2017-18ஆம் ஆண்டில், மாநில அரசு பெற்ற மொத்த வரி வருவாய் 93,795 கோடி ரூபாயாகும். இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பள செலவு மட்டும் 45,006 கோடி ரூபாயாகும். இது தவிர, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகை 20,397 கோடி ரூபாய் என மொத்தம் 65,403 கோடி ரூபாய் நிர்வாகத்தை நடத்தும் அரசு ஊழியர்களுக்காக சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது. அதாவது, மொத்த வரி வருவாயில் சுமார் 70 சதவீதம் இவ்வாறு செலவு செய்யப்படுகிறது.

    பொது மக்களுக்கான நலத்திட்டங்களை, தொலை நோக்குத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தான் அரசு இருக்கிறது. அதை நிறைவேற்றத்தான் அரசு ஊழியர்கள் இருக்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது, அரசின் வருவாயில், நிர்வாகச் செலவு என்பது மிக அதிகமாக இருந்தால், திட்டங்களுக்கு நிதி ஒதுக்க இயலாது. இதை பொறுப்புணர்வுள்ள அரசு ஊழியர்களாகிய அனைவரும் நன்கு அறிவார்கள்.

    அரசு ஊழியர்கள் இந்த உணர்வுடன் செயல்பட்டால் தான் ஒரு நல்லாட்சியை வழங்கி பொது மக்களுக்கு நாம் அனைவரும் ஒன்று கூடி நன்மை செய்யமுடியும். ஊதிய உயர்வு வழங்கப்பட்ட பின்பு அதில் முரண்பாடுகள் ஏதேனும் இருப்பினும் அதையும் சரிசெய்ய அம்மாவின் அரசு ஒரு குழுவையும் அமைத்துள்ளது.

    இக்குழு பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களிடமிருந்து குறைகளைக் கேட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவும் விரைவில் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இதை அனைத்து அரசு ஊழியர்களும், ஊழியர் சங்கங்களும் நன்கு அறிவர்.

    தமிழ்நாட்டில் உள்ள மொத்த அரசு ஊழியர்கள்-12 லட்சம் பேர். ஓய்வூதியம் பெறுவோர் 7.42 லட்சம் பேர். மொத்தமாக இந்த 19.42 லட்சம் குடும்பங்களுக்கு அரசின் வரி வருவாயில் செலவிடப்படும் தொகை 70 சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உட்பட மொத்தமாக உள்ள 2 கோடி குடும்பங்களுக்கும் சேர்த்து, மாநில அரசின் வரி வருவாயில் மக்கள் நல திட்டத்திற்கும், வளர்ச்சித் திட்டத்திற்கும் செலவிடப்படும் தொகை 6 சதவீதம் மட்டுமே என்பதை அரசு ஊழியர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்.


    இந்த அளவு சம்பள உயர்வையும், பிற சலுகைகளையும் வழங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, மக்களின் நலன் கருதி அரசு ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு, பொறுப்புணர்வோடு கடமை ஆற்றுவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.

    சிறப்பான அரசு நிர்வாகத்தை வழங்க வேண்டியது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட நமது அனைவரின் கடமை என்பதை உணர்ந்து, மாநில அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, கோரிக்கைளை முன்நிறுத்தி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்களுடன் துணை போகக் கூடாது என்று நான் வேண்டுகோளும் விடுக்கிறேன்.

    தற்போதுள்ள சூழ்நிலையில் எந்தெந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும், எவை நிறைவேற்ற முடியாது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். நிதி நிலைக்கு உட்பட்டு, நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகளை இந்த அரசு என்றும் தயக்கம் காட்டாமல் செயல்படுத்தும் என்பதையும் கடந்த ஓராண்டு காலமாக இந்த அரசு எடுத்த நல்ல பல நடவடிக்கைகள் மூலம் நீங்கள் அறிவீர்கள்.

    ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி, 1.1.2006 அன்று பெற்ற மாதாந்திர சராசரி ஊதியம் மற்றும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை ஏற்றபின் 1.1.2016 அன்றைய மாதாந்திர சராசரி ஊதியம் மற்றும் ஆறாவது ஊதியக் குழு அமல்படுத்திய பின்னும், ஏழாவது ஊதியக் குழு அமல்படுத்திய பின்னும் ஏற்பட்டுள்ள சராசரி சம்பள உயர்வு எவ்வளவு என்பதை நான் குறிப்பாக சில பல உதாரணங்களை நான் சபைக்கு எடுத்துச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

    அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையிலும், 1.1.2016 முதல் புதிய ஊதியத்தை அமல்படுத்தி நிலுவைத் தொகை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சார்ந்த 1,176 பேர், 21.2.2018 அன்று, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் ஊர்வலமாக சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் தலைமைச் செயலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட போது, அவர்கள் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், அவ்வமைப்பினர் 24.2.2018 வரை அவர்களது மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    பின்னர், இவ்வமைப்பினர் மீண்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 8.5.2018 அன்று அரசு விருந்தினர் மாளிகை அருகே ஒன்று கூடி தலைமைச் செயலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த முற்பட்டபோது, காவல் துறையினர் அவர்களை தடுத்து, கைது செய்தனர். மேலும், இப்போராட்டத்தில் பங்கு பெறுவதற்காக மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து சென்னைக்கு வந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 7,546 பேர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    இருப்பினும் இவ்வமைப்பினர், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் 150 பேர், நேற்று (11.6.2018) எழிலகம் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    தற்போது, ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் 108 பேர், எழிலகம் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நான் இங்கே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி, தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறியுள்ளேன். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்து, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஆக்கபூர்வமாக செயல்பட்டு, மக்கள் நலனுக்காக சிறப்பான நிர்வாகத்தை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நான் அன்போடு அவர்களை கேட்டுக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார். #TNAssembly #OPanneerSelvam #JactoJio
    தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்க வேண்டாம் என சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். #TNAssembly #OPS
    சென்னை:

    சட்டசபையில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதற்கும், அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்ததற்கும் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, காமராஜ் ஆகியோர் பாராட்டு தெரிவித்து பேசினார்கள்.

    அப்போது பேசிய அமைச்சர் காமராஜ், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என குறிப்பிட்டார்.

    அப்போது குறுக்கிட்டு பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று குறிப்பிட வேண்டாம். எல்லோரும் என்னை இப்படி அழைத்தால் ஜல்லிக்கட்டு போட்டியை நான் வேடிக்கை பார்க்க சென்றாலும் ஜல்லிக்கட்டு நாயகன் வந்து விட்டார். அவர் காளையை அடக்குவார் என்று அறிவித்து விட்டால் என்பாடு திண்டாட்டம் ஆகிவிடும். எனவே என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்க வேண்டாம்” என்றார்.

    அதனால் சபையில் சிரிப்பலை ஏற்பட்டது. #TNAssembly #OPS
    நடிகர் குண்டு கல்யாணம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தென்சென்னை வடக்கு மாவட்டம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த நடிகர் குண்டு கல்யாணம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டி கேட்டுக்கொண்டதால், இன்று முதல் கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்.

    மேலும் இவர் ஏற்கனவே வகித்து வந்த தலைமைக் கழக நட்சத்திர பேச்சாளர் பொறுப்பில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #ADMK
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் ஓ.பன்னீர் செல்வத்தை விசாரிக்க முடிவு செய்துள்ளது- #JayaDeath #Jayalalithaa #OPanneerSelvam
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பினார்கள்.

    இதையடுத்து அதுபற்றி விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது உடன் இருந்தவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை அந்த ஆணையம் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரித்து வருகிறது. சசிகலா குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


    இதற்கிடையே சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன், ஆணையத்தில் ஆஜராகி வாதிட்டு வருகிறார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தெரிவித்தவர்களிடம் அவர் குறுக்கு விசாரணையும் நடத்தினார்.

    இந்த நிலையில், இந்த விசாரணைக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் அழைக்க வேண்டும் என்று வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் கோரிக்கை விடுத்தார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து ஓ.பி.எஸ். நிறைய குற்றச்சாட்டுக்களையும், சந்தேகங்களையும் வலியுறுத்தி கூறி இருப்பதால் அவரை அழைத்து விசாரிக்க வேண்டியது அவசியமாகும் என்று சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

    அவரது கோரிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி ஏற்றுக் கொண்டார். எனவே துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு விரைவில் விசாரணை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் அளிக்கும் வாக்குமூலம் இந்த விசாரணையில் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சரி, ஆஜராகி தகவல்கள் தெரிவிக்க தயார் என்று தெரிவித்தனர். #JayaDeath #Jayalalithaa #OPanneerSelvam
    முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளை சில இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலை அடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி நடந்த கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் திடீரென்று வன்முறை ஏற்பட்டு கலவரமாக மாறியது. கலவரத்தை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையிலும் தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.

    இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளை சில இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு.

    இதையடுத்து அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு வழக்கமாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை சீராகும் வரை இந்த பாதுகாப்பை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #Thoothukudifiring #TNCM #Edappadipalanisamy #OPanneerSelvam

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #KarnatakaElection2018 #BJP #EdappadiPalanisamy #OPanneerselvam
    சென்னை:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதேபோல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் வாழ்த்து கூறியுள்ளார்.

    சென்னையில் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாட்டுக்கும், பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கும் மக்கள் ஆதரவு தெரிவிப்பதாகவே இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

    இதற்காக பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் வாழ்த்து தெரிவித்து உள்ளேன். முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள எடியூரப்பாவையும் நேரில் சந்திப்பேன். அப்போது காவிரி பிரச்சனை சம்பந்தமாகவும் வலியுறுத்தி பேசுவேன்.

    காவிரி நீரை பெறுவதற்கு எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அம்மா காலம் வரை எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் உயிரோட்டமாக உள்ளது என்பதை அனைவரும் அறிவர். இப்போது காவிரி பிரச்சனை விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று விட்டது.


    மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளது. அதன் சாதக பாதகங்களை கூறுமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

    எனவே கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் உறுதியாக கிடைக்கும். நல்ல தீர்வு வரும்.

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றும் கடமை மத்திய அரசுக்கு உண்டு.

    சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினாலும் அரசு சார்பில் உரிய பதிலை அளிப்போம்.

    கேள்வி:- கர்நாடகத்தில் பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துள்ள வெற்றி தமிழகத்திலும் தொடரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறி இருக்கிறாரே?

    பதில்:- அது அவரது தனிப்பட்ட கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaElection2018 #BJP #EdappadiPalanisamy #OPanneerselvam
    ×