search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ornamental Pool"

    • மானாமதுரை-தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்காரகுளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-தாயமங்கலம் ரோட்டில் உள்ளது அலங்காரகுளம். இந்த குளத்தில் பாசன வசதி ஏதும் கிடையாது. ஆனால் ஆண்டு தோறும் ஆடிதிருவிழாவில் வீர அழகர் கோவில் தீர்த்த வாரி இங்கு நடைபெறும். விநாயகர் சதுர்த்தி நாளில் வைக்கப்படும் சுவாமி சிலைகள் இந்த குளத்தில் கரைக்கப்படும். முக்கிய கோவில்களுக்கு இங்கு இருந்து தீர்த்தம் எடுத்து செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அலங்காரகுளத்தில் தண்ணீர் எப்போதும் வற்றாது. இந்த குளத்தை சீரமைக்கும்படி மானா மதுரை பகுதி மக்கள் தமிழரசி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் பொதுப்பணித்துறை மூலமாக குளத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். முதற்கட்டமாக குளத்தை சுற்றி 200 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட ப்பட்டது. இதன் தொடக்க விழாவில் தமிழரசி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

    இதுதவிர அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சந்தனமரம், செம்மரம், மா, கொய்யா, வேப்ப மரகன்றுகளை வழங்கினார். அப்போது மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா அலங்காரம் குளம் கரையில் பேவர் பிளாக் சாலை அமைத்து குளத்தை சுற்றி வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றியசெயலாளர் ராஜாமணி, இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், ஒன்றிய துணைத்தலைவர் முத்துசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராதாசிவச்சந்திரன், நகராட்சி கவுன்சிலர் இந்துமதி திருமுருகன் மற்றும் வனத்துறை அலு வலர்கள், பொதுபணிதுறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×