search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padhmanaban"

    • பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால் தீராத வினைகளெல்லாம் தீரும்.
    • அளவிட முடியாத ஐஸ்வர்யங்கள் வந்து சேரும்.

    புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசியன்று அனந்த பத்மநாதனைத் தியானித்துக் கடைப்பிடிக்கவேண்டிய விரதம், அனந்த விரதம்.

    விரத நாளன்று காலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மொழுகி, ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு, தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனைத் தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

    பூஜையின்போது, ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்ய வேண்டும்.

    இவற்றில் 14 அதிரசங்களை வேதியர்களுக்குத் தந்து, தாம்பூலம் மற்றும் தட்சிணையும் வழங்க வேண்டும்.

    மீதியை நாம் உண்ண வேண்டும்.

    அதேபோன்று, பூஜைக்குரிய பொருள்கள் அனைத்தும் 14 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

    பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால் தீராத வினைகளெல்லாம் தீரும்.

    அளவிட முடியாத ஐஸ்வர்யங்கள் வந்து சேரும்.

    14 வருடங்கள் இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து வழிபடும் அன்பர்களுக்கு நல்லன யாவும் வசமாகும்.

    அவருக்குத் தோல்வி என்பதே இல்லை என்கின்றன ஞான நூல்கள்.

    மிக அற்புதமான இந்த விரதத்தைக் கண்ண பரமாத்மா, பாண்டவர்களுக்கு உபதேசித்தார்.

    கண்ணன் சொன்ன விரதம் இது. இதன்படி விரதம் இருந்து, சகல பாக்கியங்களையும் பாண்டவர்கள் பெற்றார்கள்.

    இதை அனந்த சதுர்த்தசி விரதம் என்றும் சொல்வார்கள்.

    ×