search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Papaya Ginger Soup"

    நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு பப்பாளி மருந்தாக அமைகிறது. இன்று சத்தான பப்பாளியை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பப்பாளி பழம் - சிறியது  
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    வெங்காயம் - ஒன்று
    காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப்
    மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்ற சூடானதும் வெங்காயம், இஞ்சி, பப்பாளி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.

    ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீருடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி... மிளகுத்துள், கொத்தமல்லி தூவி பருகவும்.

    சூப்பரான பப்பாளி இஞ்சி சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×