என் மலர்
நீங்கள் தேடியது "Parandhu Po"
- பறந்து போ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சோஷியல் மீடியா தளங்களில் வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ளது.
- இப்படம் இப்போது உலகளவில் பெரும் மரியாதைக்குரிய ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் பறந்து போ, மனதை இலகுவாக்கும் நகைச்சுவையுடன், மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சோஷியல் மீடியா தளங்களில் வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ளது.
ராமின் இயக்கத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், அடுத்த படமான 'பறந்து போ' படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இணைந்து வழங்குகிறது. இப்படம் இப்போது உலகளவில் பெரும் மரியாதைக்குரிய ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பிடிவாதமான பள்ளி மாணவனும், பண வசதி இல்லாத அவனது அன்பான அப்பாவும், கவலைமிக்க உலகிலிருந்து விடுபட, ஒரு ரோட் டிரிப் மேற்கொள்கிறார்கள். அவர்களின் பயணம் தான் இந்தப்படத்தின் கதை.
ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு 'பறந்து போ' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது குறித்து இயக்குநர் ராம் பேசுகையில்…, 'பேரன்பு' மற்றும் 'ஏழு கடல் ஏழு மலை' ஆகிய படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தின் பிரீமியர் ரோட்டர்டாம் (IFFR) திரைப்பட விழாவில் அரங்கேறியதைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச திரைப்பட விழாவான ரோட்டர்டாம் IFFR 2024 இல் 'ஏழு கடல் ஏழு மலை' திரையிடப்பட்டபோது, 'பறந்து போ' (ஃப்ளை அவே) திரையிடப்படுமா என்றும், ரோட்டர்டாமுக்கு வருவோமா? என்றும் மிதுல் ரியான் கேட்டார். ஒரு வருடம் கழித்து அவருடைய ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'பறந்து போ' (ஃப்ளை அவே) IFFR 2025 இன் லைம்லைட் பிரிவில் ப்ரீமியர் செய்யப்படுகிறது. சிவாவும் நானும் வரும் பிப்ரவரி 4, இரவு 8 மணிக்கு de Doelen Jurriaanse Zaal இல் நடக்கும் பிரீமியரில் கலந்து கொள்கிறோம் .
"இந்தத் திரைப்படம், காமெடி ஜானரில் வித்தியாசமான புதிய குழுவுடன் எனது முதல் முயற்சி. மலையாளத் திரையுலகில் பிரபலமான கிரேஸ் ஆண்டனி, இப்படத்தில் மிகச்சரியான ஒரு அற்புதமான பாத்திரத்தில் நடித்துள்ளார். எப்போதும் போல, அஞ்சலி மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அஜு வர்கீஸ் மற்றும் விஜய் யேசுதாஸ் இருவரும் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் ஆகியவற்றில், சிறப்பான பணியைச் செய்துள்ளனர். மாஸ்டர் மிதுல் ரியானை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஒரு திறமையான இளம் நடிகரின் இயல்பான நடிப்பு நிச்சயமாகப் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும். ஹாட்ஸ்டாருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது - அவர்கள் எனது பார்வையை நம்பி, எனது திரைக்கதைக்கு முழுமையான ஆதரவு தந்தனர். ஒட்டுமொத்த குழுவிற்கும், இப்படம் ஒரு அமைதியான மற்றும் இனிமையான பயணமாக அமைந்தது," என்று ராம் கூறினார்.
படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார், இசை சந்தோஷ் தயாநிதி. மதி VS படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த படத்திற்கு, NK ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சில்வா அமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.