search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parkash Singh Badal"

    • பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதல் நேற்று காலமானார்.
    • அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (95), மூச்சுத் திணறல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இந்நிலையில், பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரகாஷ்சிங் பாதல் மறைவு வருத்தமளிக்கிறது. நம் நாட்டிற்கு பெரிதும் பங்களித்த தலைவர்களில் ஒரு சிறந்த ஆளுமை மிக்க தலைவரை நமது தேசம் இழந்துவிட்டது. நெருக்கடியான காலங்களில் பஞ்சாப் மாநிலத்துக்காக அயராது உழைத்தார் என தெரிவித்தார்.

    • அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரான பிரகாஷ் சிங் பாதல் உயிரிழந்தார்.
    • இவர் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தார்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (95), மூச்சுத் திணறல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    2019 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில், பா.ஜ.க தலைவர் அமித் ஷா இன்று பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலை சந்தித்து பேசினார். #amitshah #ParkashSinghBadal
    காந்திநகர்:

    2014 பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்தது. அதன் பிறகு பா.ஜ.க மாநில அரசுகளை கைப்பற்றுவதில் வெற்றி கண்டது. இந்தியாவில் சுமார் 20 மாநிலங்களில் பா.ஜ.க நேரடியாகவும், கூட்டணியுடனும் ஆட்சி செய்து வருகிறது.

    பண பலம், மத்திய அரசின் செல்வாக்கினாலும் பா.ஜ.க. மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்ததாக அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    இதையடுத்து, பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து இருந்த கட்சிகள் கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்தன. சமீபத்தில் சிவ சேனா கட்சி இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்றும் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்தது. மேலும், பா.ஜ.க மீது பல்வேறு குற்றசாட்டுகளை நேரடியாகவே வைத்தது.

    அதற்கு முன்னதாக ஆந்திர முதல் மந்திரியும் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டார். அதுமட்டுமன்றி மாநில எம்.பி.க்களையும் ராஜினாமா செய்ய வைத்து, பா.ஜ.க. கூட்டணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

    இப்படி, படிப்படியாக பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்துகொண்டு இருப்பது அக்கட்சியின் தலைமைக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூட துவங்கி விட்டதால் பா.ஜ.க ஆட்டம் காண துவங்கியுள்ளது.

    எனவே, எதிர்வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிரமாக இருக்கும் பா.ஜ.க கூட்டணியை முறித்துக் கொண்ட கட்சிகளையும், இதர பிற கட்சிகளையும் சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை செய்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நேற்று சிவ சேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரேவை அவரது இல்லத்தில் அமித் ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து இன்று சண்டிகரில் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலை நேரில் சந்தித்து அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பாராளுமன்ற தேர்தலை மையப்படுத்தி, அதற்கான கூட்டணி அமைக்கவே இதுபோன்ற சந்திப்புகள் நிகழ்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். #amitshah #ParkashSinghBadal
    ×