search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliament session"

    • இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தைக் கையில் ஏந்தி பாராளுமன்ற வளாகத்துக்கு முன்னாள் திரண்டு அணிவகுத்தபடி உள்ளே சென்றனர்.
    • நீட் முறைகேடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்தியா கூட்டணி என்.டி.ஏ அரசை நோக்கி குரல் உயர்த்தும்

    பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி இந்தியாவில் மீண்டும் ஆட்சியமைத்துள்ள 3 வது முறையாக இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற 71 அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில் புதிய அரசு அமைந்ததற்குப் பிறகு இன்று முதல் பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியுள்ளது. பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கும் இன்று பதவிப்பிரமாணம் நடக்கிறது. முதலாவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற உறுப்பினராக உறுதியேற்றுக்கொண்டார். மேலும் புதிய எதிர்கட்சி எம்.பிக்கள் பாராளுமன்றத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ள ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் சேர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தைக் கையில் ஏந்தி பாராளுமன்ற வளாகத்துக்கு முன்னாள் திரண்டு அணிவகுத்தபடி உள்ளே சென்றனர்.

    நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் நீட் முறைகேடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்தியா கூட்டணி என்.டி.ஏ அரசை நோக்கி குரல் உயர்த்தும் என்று எதிராபகப்படுகிறது. நீட் முறைகேடு தவிர, அதிகரிக்கும் விலைவாசி, உணவு பற்றாக்குறை, வெப்ப அலையால் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள், நீட் PG தேர்வு ரத்து, UGC NET தேர்வு விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி என்.டிஏ அரசை வலியுறுத்தும் என்று தெரிகிறது.

     

     

    இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சென்றமுறையை விட அதிக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளதால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குரல் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இன்று [ஜூன் 24] தொடங்கியுள்ள 18 வது பாராளுன்றக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாரதீய ஜனதா கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

    காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு 234 இடங்கள் கிடைத்தன. பாராளுமன்றத்தில் 240 எம்.பி.க்களுடன் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாரதீய ஜனதா இந்த தடவை ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் கிடைக்காததால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள தெலுங்கு தேசம், 12 எம்.பி.க்கள் வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்து இருக்கிறது. நரேந்திர மோடி கடந்த 9-ந்தேதி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.

    அவருடன் மத்திய மந்திரிகளும் பதவி ஏற்றனர். இந்தநிலையில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கவும், சபாநாயகர், துணை சபா நாயகரை தேர்வு செய்யவும் பாராளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கூடியது. இன்றும், நாளையும் முதல் 2 நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்க உள்ளனர்.

    முன்னதாக இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் தற்காலிக சபாநாயகருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பாராளுமன்ற தற்காலிக சபாநாயகராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 7 தடவை தொடர்ந்து வெற்றிபெற்ற எம்.பி.யான பா.ஜனதா எம்.பி. பர்த்ரு ஹரி மகதாப் பதவி ஏற்றுக்கொண்டார்.

    அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். இந்த எளிய விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அதன்பிறகு தற்காலிக சபாநாயகர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து புறப்பட்டு பாராளுமன்ற கட்டிடத்துக்கு வந்தார்.

    இதையடுத்து புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா தொடங்கியது. பர்த்ருஹரி மகதாப் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து இன்றைய கூட்டத்தை தொடங்கினார். முதலில் மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து பாராளுமன்ற ஆளும் கட்சி தலைவர் என்ற முறையில் எம்.பி.யாக பதவி ஏற்க பிரதமர் மோடிக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று முதல் நபராக பிரதமர் மோடி எம்.பி.யாக பதவி ஏற்றார்.

    இதைத் தொடர்ந்து தற்காலிக சபாநாயகருக்கு உதவுவதற்கு 5 எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக் கப்பட்டது. அந்த குழுவில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த எம்.பி. கொடிகுன்னில் சுரேஷ், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோ பாத்யாய, பா.ஜ.க.வை சேர்ந்த ராதாமோகன் சிங், பகன்சிங் குலஸ்தே ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    பாராளுமன்றத்தில் உள்ள 543 எம்.பி.க்களுக்கும் தற்காலிக சபாநாயகரால் மட்டுமே பதவி பிரமாணம் செய்து வைக்க இயலாது என்பதால் அவருக்கு உதவ இந்த 5 எம்.பி.க்கள் குழு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த 3 எம்.பி.க்கள் அந்த குழுவில் இடம் பெற மறுத்துவிட்டனர்.

    இதையடுத்து தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப்பும், பா.ஜ.க. எம்.பி.க்கள் இருவரும் புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய மந்திரிகள் புதிய எம்.பி.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆங்கில எழுத்து வரிசை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு புதிய எம்.பி.க்களாக பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இன்று மாலை வரை புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ளது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) புதிய எம்.பி.க்கள் பதவிஏற்பு தொடர்ந்து நடைபெறும். நாளையுடன் அனைத்து எம்.பி.க்களும் பதவி ஏற்று விடுவார்கள். அதற்கேற்ப மாநிலம் வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    • பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
    • அனல் பறக்கும் வகையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.

    பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பி.க்களும், இந்தியா கூட்டணியின் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஓரளவு சம பலத்துடன் இருக்கிறார்கள். இதன் காரணமாக பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடக்கத்தில் இருந்தே மிக கடுமையாக அனல் பறக்கும் வகையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

    இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 23 கட்சி களும் தேர்தலின் போது பல தொகுதிகளில் ஒருங்கி ணைந்து செயல்பட்டதால் வெற்றி பெற முடிந்தது. அந்த அடிப்படையில் பாராளுமன்றத்துக்குள்ளும் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்து இருக்கி றார்கள்.

    குறிப்பாக முக்கிய கொள்கைகளில் ஒருமித்த கருத்துடன் செயல்பட எதிர்க்கட்சி தலைவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். அதை இன்றுமுதல் அரங கேற்றும் நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் மேற்கொண்டனர்.

    அவர்களது திட்டப்படி இன்று பகல் 11 மணிக்கு பாராளுமன்ற கூட்டம் தொடங்கும் முன்பு கூட்டணியில் உள்ள 234 எம்.பி.க்களும் பாராளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டனர். வழக்கமாக பாராளுமன்ற கூட்டத்துக்கு எம்.பி.க்கள் ஒவ்வொருவராக வருவது உண்டு.

    அதை மாற்றி எதிர்க் கட்சிகள் தங்களுக்கு இருக்கும் வலிமையை முதல் நாளே ஆளும் கட்சிக்கும், நாட்டு மக்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக வித்தியாசமான நடை முறையை கையில் எடுத்தன. அதன்படி அவர்கள் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு காந்தி சிலை இருந்த பகுதியில் ஒன்று திரண்டு அணிவகுத்தனர்.

    பிறகு அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக அணி வகுத்து பாராளுமன்றத்துக்கு சென்றனர். அவர்கள் கைகளில் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஏந்தி இருந்தனர். இதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்தை ஆளும் கட்சி இஷ்டத்துக்கு மாற்றி அமைக்க முடியாது என்பதை சூசகமாக உணர்த்தும் வகையில் தங்களது செயலை வெளிப்படுத்தினார்கள்.

    பாராளுமன்றத்துக்குள் சென்று அமர்ந்ததும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். முதல் நாளே இன்று அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    தற்காலிக சபாநாயகருக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த தலா ஒரு எம்.பி.க்கள் சேர்க்கப்பட்டு இருந்தனர். ஆனால் அந்த குழுவில் இடம் பெற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மறுத்துவிட்டனர்.

    இதுதான் ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ள முதல் ஒருங்கிணைந்த எதிர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதே பாணியில் தொடர்ந்து செயல்பட எதிர்க்கட்சி தலைவர்கள் சம்மதித்து உள்ளனர்.

    எனவே பாராளுமன்றம் நடக்கும் நாட்களில் கூச்சல்-குழப்பம் மற்றும் விவாதத்துடன் கூடிய அமளிக்கு பஞ்சமே இருக்காது.

    • சபாநாயகர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் வருகிற 24-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை நடைபெறும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும் பான்மை இல்லாத நிலையில் வருகிற 26-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற சபாநாயகர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2014, 2019 பாராளுமன்ற தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று இருந்தது. அக்கட்சியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் இந்தூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சுமித்ரா மகாஜனும், 2-வது ஆட்சிக்காலத்தில் ராஜஸ்தானின் கோட்டா தொகுதி பா.ஜ.க. எம்.பி. ஓம்பிர்லாவும் பாராளுமன்ற சபாநாயகர்களாக செயல்பட்டனர்.

    ஆனால் தற்போது பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை (272) இல்லாத நிலையில், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் (16), பீகாா் முதல்-மந்திரி நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் (12) உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் அக்கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

    கடந்த இரு தோ்தல்களைப் போல் இல்லாமல், இம்முறை எதிரணியின் பலம் கணிசமாக அதிகரித்துள்ளது.

    பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் வருகிற 24-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி வரை நடைபெறும் நிலை யில் முதல் இரண்டு நாட்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனா். இதையொட்டி, இடைக்கால பாராளுமன்ற சபாநாயகர் நியமிக்கப்ப டுவாா்.

    பின்னா், வருகிற 26-ந் தேதி பாராளுமன்ற சபா நாயகர் தோ்தல் நடைபெற இருக்கிறது. ஜூன் 25-ந் தேதி பிற்பகலுக்குள் வேட்பாளா் பெயா்களை எம்.பி.க்கள் பரிந்துரைக்க மக்களவைச் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்ததில் 'கிங் மேக்கா்களாக' மாறிய தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் பாராளு மன்ற சபாநாயகர் பதவி யைப் பெற முனைப்புக் காட்டுவதாகவும், முக்கி யத்துவம் வாய்ந்த இப்பதவி யை விட்டுக் கொடுக்க பா.ஜ.க. விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்த விவகாரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வருகிற 22 அல்லது 23-ந்தேதி டெல்லியில் கூடி ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் கள், தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    ஆலோசனை முடிவில் சபாநாயகர் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே பாராளு மன்ற சபாநாயகர் பதவிக்கான வேட்பாளா் தோ்வு குறித்து ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவா் கே.சி.தியாகி கூறுகையில், 'தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் வலுவான கட்சிகளாக அங்கம் வகிக்கின்றன. பா.ஜ.க.வால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளரை நாங்கள் ஆதரிப்போம்' என்றாா்.

    அதே நேரம், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் பட்டாபிராம் கொம்ம ரெட்டி கூறுகையில், 'தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக அமா்ந்து பேசி, பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கான வேட்பாளரை தோ்வு செய்ய வேண்டும். கருத்தொற்றுமை அடிப்படையில் வேட்பாளா் தோ்வு செய்யப்பட வேண்டும்' என்றாா்.

    இந்த இரு கட்சிகளும் மாறுபட்ட கருத்துகளை கூறியிருப்பதால், பா.ஜ.க. கூட்டணியின் வேட்பாளராக தோ்வாகப்போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

    பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு தெலுங்குதேசம் வேட்பாளா் களமிறக்கப்பட்டால், 'இந்தியா' கூட்டணி ஆதரிக்கும் என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யு மான சஞ்சய் ரவுத் தெரிவித்தாா்.

    இது தொடா்பாக, மும்பையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற சபாநாகர் தோ்தல் முக்கியமானது; அப்பதவி பா.ஜ.க.வுக்கு கிடைக்குமேயானால், அதன் மூலம் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட தங்களின் கூட்டணிக் கட்சிகளை பா.ஜ.க. உடைத்துவிடும்.

    தன்னை ஆதரிப்பவா்களுக்கு பா.ஜ.க. துரோகம் இழைக்கும் என்பதை நாங்கள் அனுபவபூா்வமாக உணா்ந்தவா்கள். பாராளுமன்றத் தலைவா் பதவிக்கு தெலுங்கு தேசம் தனது வேட்பாளரை களமிறக்க விரும்புவதாக அறிந்தேன். அது நடக்கும்பட்சத்தில், 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் ஆலோசித்து, தெலுங்கு தேசத்துக்கு ஆதரவளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் இந்தியா கூட்டணி வேண்டுகோளை தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் நிராகரித்துள்ளன. இதையடுத்து சபாநாயகர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலாசித்து வருகிறார்கள்.

    இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பலப்பரீட்சை நடத்துவது போல இருக்கும்.

    இந்த நிலையில் சபாநாயகர் பதவிக்கு ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரி நிறுத்தப்படுவார் என்று தகவல்கள் வெளியானது. அதே சமயத்தில் ஒடிசாவை சேர்ந்த மகதப் என்ற எம்.பி. பெயரும் சபாநாயகர் பதவிக்கு அடிபடுகிறது.

    துணை சபாநாயகர் பதவிக்கு கூட்டணி கட்சிக்கு வழங்க பா.ஜ.க. முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. வருகிற 22-ந்தேதி இதற்கெல்லாம் விடை கிடைத்துவிடும்.

    • எதிர்க்கட்சிகள் முழக்கத்தால், அவை தொடங்கிய அடுத்த நிமிடமே அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
    • பாராளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து முழக்கங்களை எழுப்பினர்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆளும் பாஜகவும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

    இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் 9 தினங்களாக முடங்கியது.

    இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேசிய அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்பு வழங்கியது.

    அதை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பாரளுமன்றத்தில் காங்கிரஸ் நேற்று பிரச்சினை கிளப்பியது. காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து வந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவை நடவடிக்கைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பும் கருப்பு உடையுடன் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்றத்தில் இன்றும் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு, அதானி விவகாரத்தால் கடும் அமளி ஏற்பட்டது.

    பாராளுமன்ற மக்களவை கூடியதும் கருப்பு உடையுடன் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.

    காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் பேப்பர்களை கிழித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி வீசினார்கள்.

    மற்றொரு காங்கிரஸ் உறுப்பினர் டி.என்.பிரதாபன் சபாநாயகர் இருக்கையை நோக்கி கருப்பு துணியை வீசினார். அப்போது சபை காவலர்கள் அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு, அதானி விவகாரம் ஆகிய பிரச்சினைகளை கிளப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் சபை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    மேல் சபையில் இதே விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து சபைக்கு வந்தனர். சபை கூடியதுமே அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.

    இதனால் ஒரே கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதைதொடர்ந்து அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. 11வது நாளாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்றம் மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடங்க முயன்றார்.
    • அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது.

    அதானி குழும முறைகேடு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜகவும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இதனால் கடந்த வாரம் முழுவதும் மக்களவை, மேல்சபை ஆகிய இரு அவைகளும் முடங்கின.

    அதானி குழும விவகாரம் மற்றும் ராகுல் காந்தி பிரச்சினையால் பாராளுமன்றத்தில் நேற்றும் 6வது நாளாக அமளி ஏற்பட்டது. இரு அவைகளும் முடங்கியது.

    பாராளுமன்றம் இன்றும் 7வது நாளாக எதிர்க்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்களால் முடங்கியது. பாராளுமன்றம் மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடங்க முயன்றார்.

    அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். "எங்களுக்கு கூட்டு குழு விசாரணை தேவை" என்று கூறி அவர்கள் முழக்கமிட்டனர். அவர்களை ஓம் பிர்லா அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    அவர் கூறும்போது, "பட்ஜெட் தொடர் முக்கியமானது. ஒவ்வொருவருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும். இதனால் அமைதியாக இருங்கள்" என்றார்.

    ஆனால் அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவையை 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

    மேல்சபையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அவர்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து ராகுல்காந்தி மன்னிப்பு கேட்ககோரி முழக்கமிட்டார்கள்.

    அதே நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி விவகாரத்தை எழுப்பினார்கள். இதனால் ஏற்பட்ட அமளியில் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

    அதானி, ராகுல்காந்தி பிரச்சினையால் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் 7வது நாளாக முடங்கியது. பாராளுமன்ற முதல் மாடியில் ஏறி நின்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    • இன்று காலை 11 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
    • இன்று பிற்பகல் 2 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    பாராளுமன்றம் கடந்த 13ம் தேதி கூடியது. அன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் பாராளுமன்ற இரு அவைகளும் எம்.பி.க்களின் அமளியால் முடங்கியது.

    லண்டனில் ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் பாரதீய ஜனதா எம்.பி.க்களும், அதானி முறைகேடு தொடர்பாக பாராளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 5 நாட்களாக பாராளுமன்றத்தில் எந்த ஒரு விவாதமும் நடைபெறாமல் ஒத்திவைக்கபட்டது.

    இன்று காலை 11 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக பிரச்சினை எழுப்பினார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி அவர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷங்கள் எழுப்பினார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். இதனால் சபையில் ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது.

    அவர்களை அமைதி காக்குமாறும், தங்கள் இருக்கைக்கு சென்று அமரு மாறும் சபாநாயகர் ஓம்பிர்லா பல முறை கூறினார். ஆனாலும் அவர்கள் அதை கேட்கவில்லை. தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.

    இதனால் சபையை நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது. இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இதேபோல் மேல்- சபையிலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இதே பிரச்சினையை வழக்கம் போல எழுப்பினார்கள். சபை தலைவர் ஜெகதீப் தன்கர் கேட்டுக்கொண்டும் அவர்கள் இடைவிடாமல் கோஷங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதனால் மேல்- சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதையடுத்து, இரு அவைகளும் மீண்டும் தொடங்கிய நிலையில், எம்.பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    • பாராளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று 5வது நாளாக கூடியது.
    • ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளது.

    அதானி குழும முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 4 நாட்களாக இரு சபைகளும் முடங்கியது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று 5வது நாளாக கூடியது. தொடங்கிய சில நிமிடங்களில் இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க கோரி ஆளும் கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    மேலும், அதானி குழும முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால், இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதானல், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் வரும் 20ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து 5வது நாளாக இன்று இரு அவைகளும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
    • அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டு குழு அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்திய ஜனநாயகம் சீர் குலைந்து வருவதாகவும், அதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று லண்டனுக்கு சமீபத்தில் சென்ற ராகுல்காந்தி பேசி இருந்தார்.

    பாராளுமன்ற 2-வது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் இந்த விவகாரத்தை பா.ஜ.கவினர் கிளப்பினார்கள். ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் அதானி பிரச்சினையை கிளப்பினார்கள். இதனால் இரு அவைகளும் முதல் நாளே முடங்கியது.

    ராகுல்காந்தி, அதானி பிரச்சினையால் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் 2-வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டன. ராகுல்காந்தி, அதானி விவகாரத்தால் பாராளுமன்றம் இன்று 3-வது நாளாக முடங்கியது.

    பாராளுமன்ற மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி பிரச்சினையை கிளப்பினார்கள். அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். கூட்டுக்குழு விசாரணை கோரி அவர்கள் கைகளில் பதாகைகளை வைத்து இருந்தனர்.

    சபையின் மைய பகுதிக்கு வந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பதிலடியாக கோஷமிட்டனர். ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

    எதிர்க்கட்சி, ஆளும்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக சபாநாயகர் ஓம்.பிர்லா வால் அவையை நடத்த முடியவில்லை. யாரும் அமைதி அடையாததால் அவர் அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார்.

    மேல்சபையிலும் இதே விவகாரத்தால் அவை நடவடிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி பிரச்சினையை கிளப்பினார்கள். இதனால் அவையில் கூச்சல்- குழப்பம் நிலவியது.

    இதைதொடர்ந்து அவைத் தலைவர் 2 மணி வரை சபையை ஒத்திவைத்தார். ராகுல்காந்தி, அதானி விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று 2 மணி வரை முடங்கின.

    • ஆளுநரின் அதிகாரம் குறித்து அரசியல் சாசன வடிவமைப்பில் அம்பேத்கர் தெளிவாக கூறியுள்ளா்.
    • தமிழகத்தில் தேர்தல் இல்லை என்பதால் குடியரசு தலைவர் உரையில் திருவள்ளுவரை மறந்துவிட்டார்.

    மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார். அப்போது அவர், "இந்த நாடு ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது. மாநிலங்களின் உரிமைகளை பறிக்க முயற்சிகளை செய்கிறீர்கள். மக்கள் நல அரசு என்பதற்கும் இலவச திட்டங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்துக்கொள்ள மறுக்கிறீரகள்.

    நாங்கள் மாநிலங்கள் சமூக நீதிக்கான மாடல்களை உருவாக்க முடிகிறது. ஆனால் உங்களால் அது முடியவில்லை.

    தமிழக சட்டசபையில் இயற்றிய 20க்கும் மேற்பட்ட சட்ட வரைவுகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வருகிறார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மட்டும் நிற்கவில்லை. மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநர்கள் இதையே பின்பற்றுகிறார்கள். மாநில ஆளுநர்கள் மத்திய அரசின் கருவியாக பயன்படுத்தப்படுகின்றனர். ஆளுநர்களுக்கு தனிப்பட்ட எந்த விருப்ப உரிமையும் இல்லை.

    ஆளுநரின் அதிகாரம் குறித்து அரசியல் சாசன வடிவமைப்பில் அம்பேத்கர் தெளிவாக கூறியுள்ளா். கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்துவத்தை ஆளுநர்களுக்கு உணர்த்த வேண்டும்.

    தமிழகத்தில் தேர்தல் இல்லை என்பதால் குடியரசு தலைவர் உரையில் திருவள்ளுவரை மறந்துவிட்டார். மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

    சுமார் 4 கோடி இந்திய இளைஞர்கள் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    எங்களது பரிந்துரைகளை மத்திய அரசு காது கொடுத்து கேட்பதில்லை. சட்டங்கள் பற்றி விவாதம் செய்ய நேரம் ஒதுக்குவதில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டு பேசினார்.

    • அதானி விவகாரம் தொடர்பாக பிரதமர் சபைக்கு வந்து பதிலளிக்க வேண்டும்.
    • பாராளுமன்றம் நடைபெறாமல் இது 4-வது நாளாக இன்றும் நீடித்தது.

    பாராளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியது. அப்போது அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

    அதானி குழும விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    பின்னர், 12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடியது. இந்நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக பிரதமர் சபைக்கு வந்து பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மத்தியில் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதனால், பாராளுமன்றம் நடைபெறாமல் இது 4-வது நாளாக இன்றும் நீடிக்கிறது.

    • அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.
    • பாராளுமன்றம் நடைபெறாமல் இது 4-வது நாளாக இன்றும் நீடித்தது.

    இந்தியாவின் பெரும் தொழிலதிபரான அதானியின் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

    இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

    குறிப்பாக இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

    அத்துடன் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசுகளையும் வழங்கி உள்ளன.

    இந்த கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் வழக்கமான அலுவல்கள் நடைபெறாமல் தொடர்ந்து முடங்கி வருகின்றன.

    இந்தநிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற அவை கூடியதும் அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

    அதானி குழும விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றம் நடைபெறாமல் இது 4-வது நாளாக இன்றும் நீடித்தது.

    ×